திருமணத்தை முடித்துவிட்டு சேரனுடன் இணையும் விஜய் சேதுபதி

திருமணத்தை முடித்துவிட்டு சேரனுடன் இணையும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cheran and vijay sethupathi‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயக்கண்ணாடி’, ‘பொக்கிஷம்’ என தமிழ் ரசிகர்களை கவர்ந்த படங்களை இயக்கியவர் சேரன்.

இதில் ஆட்டோகிராப் படம் முதல் அவரே நாயகனாக நடித்து இயக்கி வந்தார்.

அதன்பின்னர் மற்ற இயக்குனர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

‘பிரிவோம் சந்திப்போம்’, ‘ராமன் தேசிய சீதை’, ‘யுத்தம் செய்’, ‘முரண்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

இதன் பின்ன்ர் சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் 2015-ம் ஆண்டு ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார்.

அப்படத்தை வெளியிட உச்சக்கட்ட சிரமம் அவருக்கு ஏற்ப்பட்டது.

இதனால் C2H (Cinema 2 Home) என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் சி.டி. மூலம் படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்ன்ர ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை சேரன் இயக்குவதாக அறிவித்துள்ளார்.

இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்க, காவ்யா சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதில் நாயகியின் அண்ணனாக சேரன் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைக்க, பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இப்பட ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

இந்த விழாவில் சேரன் பேசியதாவது…

கஷ்ட காலங்களில் கூட நிற்பதாகவும் சரி, திரைப்படத்துக்காக முன்னெடுத்தும் சரி நடிகர் முரளி ஒரு சிறந்த மனிதர். அவருக்கு அப்புறம் நான் பார்த்த, மிகச் சிறந்த மனிதர் விஜய் சேதுபதி தான்.

விரைவில் நாங்கள் இருவரும் படம் பண்ணப் போகிறோம்.” என பேசினார்.

ஏழைகளின் கண்ணீரை ரஜினிக்கு பிறந்தநாள் பரிசாக்கிய கஸ்தூரி

ஏழைகளின் கண்ணீரை ரஜினிக்கு பிறந்தநாள் பரிசாக்கிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and kasthuriநடிகர் ரஜினிகாந்த் தனது 68வது பிறந்த நாளை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடினார்.

அவருக்கு திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் நடிகை கஸ்தூரியும் அவருக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளார். இது குறித்து அவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“மானு மிஷன் முயற்சியில், லைகா நிறுவனத்தின் ஆதரவில், ஏழை பிள்ளைகள் சிலரை தேர்வு செய்து, ரஜினி நடித்த 2.0 படம் பார்க்க அழைத்து சென்றேன்.

அந்த 3 மணி நேரமும் வேதனையை மறந்து உற்சாகமாக மகிழ்ந்த அந்த குழந்தைகளின் சிரிப்பையும், அவர்கள் குடும்பத்தினரின் ஆனந்த கண்ணீரையும் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் பரிசாக்குகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்!

இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ratsasanவணிக ரீதியிலான பொழுதுபோக்கு படங்களின் மத்தியில், ஒரு சில த்ரில்லர் சினிமாக்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும். அந்த வகையிலான ஒரு திரைப்படம் தான் ராட்சசன், அதன் வித்தியாசமான கதையமைப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, திகில் படங்களின் வரிசையில் ஒரு கல்ட் சினிமாவாக மாறியிருக்கிறது. வணிக ரீதியாக அதிக வசூல் செய்த படம் என்று நிரூபணம் செய்யப்பட்ட இந்த படம், தமிழ் சினிமாவிற்கு பெரும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது.

ராட்சசன் படத்தின் பெருமைகளுக்கு மகுடம் சூட்டுவது போல, தற்போது இந்த படம் IMDB தரவரிசையில் இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாவது மிகச்சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கே புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

ராட்சசன் IMDB தர வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. தென்னியந்திய சினிமாக்களில் ராம்சரணின் ரங்கஸ்தலம், விஜய்சேதுபதியின் 96 மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி ஆகிய படங்களும் சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், கிறிஸ்டோபர் சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். ராம்குமார் இயக்க, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருந்தார்.

கார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

கார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi imagesகார்த்தி நடிக்கும் 18- வது புதிய படத்தின் படப்பிடிப்புபூஜையுடன் இன்று ஆரம்பரமானது. பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்றுபெயரிடப்பட்டுள்ளனர். தற்போது கார்த்தியின் நடிப்பில்உருவாகியுள்ள ‘தேவ்’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ எனஅடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நாயகன் கார்த்தியுடன் இணைந்து கைகோர்க்க வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப்பெற்ற இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன்(அஞ்சாதே) , ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம்பிரம்மாண்டமாக உருவாகிறது. படத்தில் 70 சதவிகிதம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் பிரத்யேக காட்சிகளை அமைக்கிறார்கள்.

இசை : சாம் C.S.
ஒளிப்பதிவு : சத்யன் சூர்யன்
எடிட்டிங் : ஃபிலோமின் ராஜ்
கலை : சதீஷ்குமார்
வசனம் : பொன் பார்த்திபன்

சென்னை மற்றும் திருநெல்வேலியில் இப்படம் உருவாகிறது.

ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி போன்ற மக்கள் பாராட்டைப் பெற்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’. இப்பொழுது சூர்யா நடிக்கும் ‘என்.ஜி.கே.’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.இதேபோல் ‘வண்டிச்சக்கரம், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ‘விடிஞ்சா கல்யாணம், ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் விவேகானந்தா பிக்சர்ஸ்.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த ‘கார்த்தி 18’ படத்தை தயாரிக்கிறது.

தயாரிப்பு : S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு & திருப்பூர் விவேக்.

“கனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் – எடிட்டர் ரூபன்!

“கனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் – எடிட்டர் ரூபன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaaகனா (ட்ரீம்) என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தவிர்க்க முடியாத சாரம், இந்த படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் குழுவினர் மகிழ்கிறார்கள். இயல்பாகவே ஒரு எடிட்டரின் மனதில் காட்சியின் நீளம், வேகம், எங்கு காட்சிகளை வெட்ட வேண்டும் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘கனா’வில் பணியாற்றிய ரூபனின் அனுபவம் வித்தியாசமானது.

சில திரைப்படங்கள் ‘எடிட்டர்கள்’ தங்கள் அடையாளத்தை மறந்து ரசிகர்களாக, அதன் ஒரு சில அம்சங்களுக்காக தொடர்ந்து பலமுறை பார்க்க வைக்கும். தனிப்பட்ட முறையில், நான் இந்த மாதிரி ஒரு சில படங்கள் எனக்கு இத்தகைய தாக்கத்தை அளித்திருக்கின்றன. குறிப்பாக, கனா திரைப்படத்தில் பணியாற்றும் போது, கட்ஸ் மற்றும் ட்ரான்சிஸன்ஸ் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை. படத்தின் எடிட்டிங்கின் போது நான் அப்படி உணர்வுகளோடு ஒரு பிணைப்பு இருந்தது. மேலும், சத்யராஜ் சார் கதாபாத்திரத்தின் மூலம் எனது தந்தையின் ஆராவை நான் உணரவும், அனுபவிக்கவும் முடிந்தது. இயல்பாகவே, தந்தைகள் எப்போதும் குழந்தைகளின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுப்பவர்கள். எல்லோருக்கும் இதேபோன்ற உணர்வை கனா நிச்சயமாக வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் எடிட்டர் ரூபன்.

படத்தின் நீளம் குறித்து அவர் கூறும்போது, “வழக்கமாக ஒரு படத்தின் நீளம் என்பது திரையில் படம் ஓடும் நேரத்தை சொல்வார்கள். ஆனால் கனா படம் முடிந்த பிறகும் கூட, உணர்ச்சிகள் மற்றும் உற்சாகத்ததுடன் வீட்டிற்கு செல்வீர்கள் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எங்களது குழுவினரை பொறுத்தவரையில், கனா எங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன், இது நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு உதவும்” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அருணாஜா காமராஜ்’ இயக்குனராக அறிமுகமாகும் கனா படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. முழுமையான ஒரு ‘கிரிக்கெட்’ படமான இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களும் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசு, முனீஸ்காந்த் என்கிற ராமதாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மோகன்ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுத திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மற்றும் லால்குடி இளையராஜாவின் கலை அமைப்பு கவனிக்க வைத்திருக்கின்றன.

கஷ்டமர் உணவை சாப்பிட்ட டெலிவரி பாய் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து

கஷ்டமர் உணவை சாப்பிட்ட டெலிவரி பாய் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivanஓரிரு தினங்களுக்கு முன் கஷ்டமருக்கு உணவை கொண்டு செல்லும்போது டெலிவரி பாய் ஒருவர் வண்டியில் இருந்த படியே அந்த உணவுகளை கொஞ்சம் சாப்பிட்டார்.

அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலானது.

டெலிவரி பாயின் இந்த செயலை பலரும் கண்டித்தனர்.

இது குறித்து டைரக்டர் விக்னேஷ் சிவன் கூறியதாவது…

’பொறுப்பை மறக்கடித்த பசிக்கொடுமை, அவரை மன்னித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் கூறியது எல்லோரிடமும் பாராட்டை பெற்று வருகின்றது.

More Articles
Follows