சேரன் & விஜய்சேதுபதி இணையும் ‘தவமாய் தவமிருந்து பார்ட் 2’.?

சேரன் & விஜய்சேதுபதி இணையும் ‘தவமாய் தவமிருந்து பார்ட் 2’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cherans movie with Vijay Sethupathi will be about siblingsபாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராஃப், வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் சேரன்.

அதன்பின்னர் இவரே படங்களில் நடிக்கவும் செய்தார்.

அண்மையில் வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கி அதிலும் நடித்திருந்தார்.

இதனிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் சேரன்.

அந்நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியை வைத்து விரைவில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார் சேரன்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்காக தான் எழுதிய கதை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி
அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்.”

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார் சேரன்.

இந்த பதிவால் இது தவமாய் தவமிருந்து படத்தின் 2ஆம் பாகமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Cherans movie with Vijay Sethupathi will be about siblings

கொரோனா & முட்டாள்தனம்.. இரண்டிலிருந்து மக்கள் விடுபட யுவன் வலியுறுத்தல்

கொரோனா & முட்டாள்தனம்.. இரண்டிலிருந்து மக்கள் விடுபட யுவன் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan slams Stupidity in Corona lighting 9 PM 9 Mins கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகில் உள்ள பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போது கொரேனா வைரஸ் தன் தாக்குதலை இந்தியாவிலும் தொடர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இதுவரை இரண்டு வாரங்களை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி கொரோனா இருளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை பலர் செய்திருந்தனர். சிலர் தெருக்களில் கூடி தீபாவளி போல பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

ஒன்று கொரொனா, இரண்டு முட்டாள்தனம்… இந்த இரண்டில் இருந்து இந்தியா விடுப்பட வேண்டும், என்று கூறி யாரையே மறைமுகமாக தாக்கியுள்ளார்.

Yuvan slams Stupidity in Corona lighting 9 PM 9 Mins

பணமதிப்பிழப்பை போல கொரோனா ஊரடங்கு.; மோடி மீது கடுப்பான கமல்

பணமதிப்பிழப்பை போல கொரோனா ஊரடங்கு.; மோடி மீது கடுப்பான கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal pens angry letter to PM Modiகொரோனா வைரஸை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

நேற்று கொரோனா இருளை அகற்றவும் இந்திய மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தவும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீப ஒளி ஏற்ற வேண்டுகோள் விடுத்திருந்தார் மோடி.

அதன்படி பெரும்பாலான இந்தியர்கள் தீப ஒளி ஏற்றினர். சிலர் ஆர்வ மிகுதியால் தீபாவளி போல பட்டாசுகள் வெடித்தனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெரும் கோபத்தில் இந்த கடிதத்தை கமல் எழுதியிருப்பார் என்றே நம்பலாம்.

“நான் இந்த கடிதத்தை பொறுப்புடனும் நம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். உங்களுக்கு மார்ச் 23-ம் தேதி எழுதிய என்னுடைய முதல் கடிதத்தில், நம்முடைய சமூதாயத்தின் ஏழை எளிய அடித்தட்டு மக்களான அறியப்படாத நாயகர்களைப் பற்றிய பார்வையை அரசு இழந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினேன்.

அடுத்த நாளே இந்த நாட்டில் கண்டிப்பான உடனடி ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு ஸ்டைலில் இருந்தது. அதனால், நான் அதிர்ச்சி அடைந்தேன்.

எனது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை நம்புகிறேன். நாம் ஒன்றை நம்ப விரும்புகிறோம். நீங்கள் பணமதிப்பிழப்பை அறிவித்தபோது நான் உங்களை நம்பினேன். ஆனால், எனது நம்பிக்கையை தவறு என்று நிரூபித்தது. நீங்களும் தவறு என்று காலம் நிரூபித்தது சார்.

முதலில் நீங்கள் இன்னும் இந்த தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக உள்ளீர்கள் என்பதையும் இந்த நெருக்கடியின் போது உங்களுடைய ஒவ்வொரு உத்தரவையும் உண்மையாகவே நான், நீங்கள் உட்பட 1.4 பில்லியன் இந்தியர்கள் பின்பற்றுவார்கள் என்பதையும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இன்று, இதுபோல, வெகுஜன மக்கள் பின்தொடரும் வேறு எந்த உலகத் தலைவரும் இல்லை. நீங்கள் பேசுவதை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்று நாடு இந்த நேரத்தில் உங்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை வைத்துள்ளது.

உங்கள் விருப்பங்களுக்கும் உத்தரவுகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்போம். ஆனால், எங்கள் ஒத்துழைப்பை எங்கள் அடிபணிதலாக குழப்பிக்கொள்ளப்படக் கூடாது.

எனது மக்களின் தலைவராக எனது பங்கை மனதிலிருந்து பேசவும் உங்கள் வழிகளைக் கேள்வி கேட்கவும் எனக்கு உதவுகிறது. தயவுசெய்து எனது கேள்விகள் முறையற்றது என்றால் மன்னிக்கவும்.

எனது மிகப் பெரிய பயம் என்னவென்றால், பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது செய்த அதே தவறு மிகப் பெரிய அளவில் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

பணமதிப்பிழப்பு ஏழைகளின் சேமிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க வழிவகுத்தது என்றாலும், இந்த மோசமான திட்டமிடப்படாத ஊரடங்கு நம்மை உயிரையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் அபாயகரமான கவலையை நோக்கி இட்டுச் செல்கிறது.

ஏழைகளுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒருபுறம் நீங்கள் முன்னேறிய மக்களிடம் விளக்கு வைக்கச் சொல்கிறீர்கள். மறுபுறம் ஏழை மனிதனின் அவலநிலை ஒரு வெட்கக்கேடான காட்சியாக மாறி வருகிறது.

உங்கள் உலகத்தினர் பால்கனிகளில் எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றும்போது ஏழைகள் தங்கள் அடுத்த வேளை ரொட்டி சுடுவதற்கு எண்ணெய்க்காக போராடுகிறார்கள். உங்களுடைய கடைசி 2 உரைகளிலும் நாட்டு மக்களை அமைதிப்படுத்த முயற்சித்தீர்கள்.

ஆனால், அதைவிட அவசரமாக முக்கியமான ஒன்று உள்ளது. இந்த உளவியல் ரீதியான பேச்சு பால்கனி உலகத்தினரின் பிரச்னையை தீர்த்து உற்சாகப் முடியும்.

ஆனால், வீடில்லாத ஏழை மக்களுக்கு என்ன இருக்கிறது?

நம்முடைய சமுதாயத்தின் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் ஏழைகளை, நம்முடைய ஆதரவு அமைப்பு மற்றும் நடுத்தர வர்க்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அடித்தள மக்களை முற்றிலுமாக புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் பால்கனி மக்களுக்கு மட்டுமே பால்கனி அரசாங்கமாக இருக்க விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன்.

பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புகிறார்கள். ஏழை மனிதன் ஒருபோதும் முதல் பக்க செய்திகளில்கூட இடம் பெறுவதில்லை.

ஆனால், தேசத்தின் வலிமை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஏழைகள் செய்த பங்களிப்பை புறக்கணிக்க முடியாது.

ஏழை மனிதனுக்கு தேசத்தில் பெரும்பான்மை பங்கு உள்ளது. அடிமட்டத்தை அழிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மேல்புறத்தை கவிழ்க்க வழிவகுக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இதை அறிவியல் ரீதியாகவும்கூட ஒப்புக்கொள்கிறார்கள்.

இது முதல் நெருக்கடி, சமூகத்தின் உயர்மட்டத்தினர் அடிமட்டத்தில் ஏற்படுத்திய முதல் தொற்றுநோய். எல்லாவற்றிற்கும் மேலாக, அதாவது ஐயா அனைவரையும் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள், ஆனால், கீழே உள்ளவர்கள்.

மில்லியன் கணக்கான தினசரி கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவில் தள்ளுவண்டி விற்பனையாளர்கள், ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸி ஓட்டுநர்கள், ஆதரவற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருட்டில் ஒளியைக் காண போராடுகின்றனர்.

ஆனால், நாம், ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தை மட்டுமே பாதுகாப்பதாகத் தெரிகிறது.

ஐயா என்னை தவறாக நினைக்காதீர்கள். நாம் நடுத்தர வர்க்கத்தையோ அல்லது ஒரு பிரிவையோ புறக்கணிக்க கூறவில்லை. உண்மையில், நான் சரியாக அதற்கு மாறாக ஒன்றை பரிந்துரைக்கிறேன்.

எல்லோருடைய கோட்டையையும் பாதுகாப்பதற்கும், யாரும் பசியுடன் படுக்கச் செல்லவில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதைக் காண விரும்புகிறேன்.

கோவிட் -19 தொடர்ந்து பலிகளைக் காணும். ஆனால், ஏழைகளின் பசி (எச்), சோர்வு (இ) மற்றும் பற்றாக்குறை (டி) ஆகியவற்றிற்கான களத்தை நாம் உருவாக்குகிறோம். HED ’20 என்பது ஒரு நோய். இது அதன் தன்மையில் சிறியதுதான். ஆனால், கோவிட் -19 உடன் ஒப்பிடும்போது மிகவும் ஆபத்தானது. கோவிட் -19 மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் தாக்கம் உணரப்படும்.

ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு சரிவை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற ஒரு உணர்வு இருக்கிறது. உற்சாகமான தேர்தல் பாணி பிரச்சார யோசனையை கட்டவிழ்த்துவிடுவதற்கு நீங்கள் உங்களுக்கு வசதியான பகுதிக்குள் நுழைவதாகத் தெரிகிறது.

நீங்கள் சாதாரண மக்களுக்கு பொறுப்பான நடத்தையையும் மாநில அரசாங்கங்களுக்கு வெளிப்படைத்தன்மை நிர்வாகத்தையும் அளிப்பதாகக் காட்டுகிறது. இந்தியாவுக்காக இன்றும் நாளையும் ஒரு பெரிய நோக்கத்திற்காக உழைத்து அறிவுஜீவிமயமாக்குவதற்கு போதுமான நேரத்தை செலவிடுவோர் மத்தியில் நீங்கள் உருவாக்கும் கருத்து இதுதான்.

அறிவுஜீவி என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்துவதன் மூலம் நான் உங்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். ஏனென்றால், உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும் அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், நான் பெரியார் மற்றும் காந்தியைப் பின்பற்றுபவன், அவர்கள் முதலில் அறிவுஜீவிகள் என்று எனக்குத் தெரியும். அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் வளம் ஆகியவற்றின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவரை வழிநடத்தும் அறிவு அவர்கள்.

சூடான மற்றும் தெளிவில்லாத பிரச்சாரத்தின் மூலம் மக்களின் சக்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது உங்கள் நிறுவனத்தின் உயிரைக் காப்பாற்றக்கூடிய சில செயல்களைப் புறக்கணிக்க வழிவகுக்கும்.

தொற்று நோய் பரவலைத் தடுக்க சட்டம் ஒழுங்கு அமலுக்கு வந்தபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவற்ற மற்றும் முட்டாள்தனமானவர்களின் கூட்டங்களை நிறுத்த உங்கள் அமைப்பு தவறிவிட்டது.

இந்தியாவில் தொற்றுநோய் பரவுவதற்கான மிகப்பெரிய மையங்களாக இவை மாறிவிட்டன. இந்த அலட்சியம் காரணமாக இழந்த அனைத்து உயிர்களுக்கும் யார் பொறுப்பு?

இந்தியாவில் ஜனவரி 30-ம் தேதி முதல் கொரோனா தொற்று நோய் கண்ட்றியப்பட்டது. நாம் இத்தாலிக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்துள்ளோம். இருப்பினும், நாம் ஆரம்பத்தில் போதுமான அளவு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

நாம் இறுதியாக விழித்தெழுந்தபோது, 10.4 பில்லியன் மக்கள்கொண்ட நாட்டை 4 மணி நேரத்துக்குள் முடக்க ஊரடங்கு உத்தரவிட்டீர்கள்.

இது பற்றி 4 மாதங்களுக்கு முன்பே நீங்கள் அறிந்திருந்தபோதும் மக்களுக்கு 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்தீர்கள். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் பிரச்னைகள் பெரியதாக மாறுவதற்கு முன்பே தீர்வுகளைக் காண வேண்டும்.

இதை சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். இந்த முறை உங்களுடைய தொலைநோக்குப் பார்வை தோல்வியடைந்துவிட்டது.

நான் உங்கள் மேல் கோபமாக இருக்கிறேன். ஆனால் உங்களுடன் இருக்கிறேன்” என கமல் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Actor Kamal pens angry letter to PM Modi

6th April 9pm… அமிதாப் ரஜினி மம்மூட்டி லால் சிரஞ்சீவி நடித்த ‘FAMILY’

6th April 9pm… அமிதாப் ரஜினி மம்மூட்டி லால் சிரஞ்சீவி நடித்த ‘FAMILY’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amitabh Rajini Chiranjeevi Mammootty and Lals Family movie releasing todayஇந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை என்கிற அளவுக்கு மனிதனை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

இந்த வைரஸ் பரவலை தடுக்க உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

சாலைகளில் வாகனங்களில் சப்தம் இல்லாமல் இருப்பதால் பறவைகளின் அழகான கீச்சு குரல்களை கேட்க முடிகிறது.

மற்றொரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஒவ்வொரு டிவி சேனல்களும் மக்களை வீட்டிலேயே வைத்திருக்க பழைய ஹிட்டான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, குறும்படம் ஒன்றை சோனி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதில் இந்தியாவில் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர்.

அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, ரன்பீர் கபூர், சிவ ராஜ்குமார், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ள இந்த குறும்படத்திற்கு ஃபேமிலி என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பது, உடல்நலனை பேணுவது, வீட்டிலிருந்தபடி பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி இந்தக் குறும்படம் பேசும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

இந்தக் குறும்படம் இன்று (06.04.2020) இரவு 9 மணிக்கு சோனி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

Amitabh Rajini Chiranjeevi Mammootty and Lals Family movie releasing today

ரியல் ஹீரோவா மாறுங்க; கோலிவுட் ஹீரோஸ்-க்கு JSK வேண்டுகோள்

ரியல் ஹீரோவா மாறுங்க; கோலிவுட் ஹீரோஸ்-க்கு JSK வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

21 நாட்கள் போடப்பட்டிருந்த இந்த உத்தரவு தற்போது 2 வாரங்களை கடந்துள்ளது.

மோடியின் இந்த உத்தரவால் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிவாரண நிதியை அளிக்க வேண்டும் என பிரதமர், மாநில முதல்வர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுவரை தமிழ் சினிமா ஹீரோக்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் ரூ. 25 லட்சம் நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

மற்ற ஹீரோக்கள் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தரமணி படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே சதீஷ்குமார் அவர்கள் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடி வருகிறது. எனவே தமிழ் சினிமாவை சார்ந்த ஹீரோ, ஹீரோஸ், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்கள் நிதியை வழங்க வேண்டுகிறேன்.

உண்மையான ஹீரோக்களாக மாறுங்கள். இளைய தலைமுறைக்கு ரோல் மாடலாக மாறுங்கள். பள்ளிக் குழந்தைகள் கூட தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

இவர் தன் சார்பில் 2 லட்சம் ரூபாயை முதல்வர் கொரோனா நிதிக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

JSK request Kollywood Industry to fund for Corona relief

கொரானா மருத்துவம்: OLX-ல் வல்லபாய் சிலை ரூ. 30000 கோடிக்கு விற்பனை

கொரானா மருத்துவம்: OLX-ல் வல்லபாய் சிலை ரூ. 30000 கோடிக்கு விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vallabhbhai Patel Statue for sale on OLX for Corona fund குஜராத் மாநிலத்தில் நர்மதா அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 787 அடி உயரம் கொண்ட படேலின் சிலை, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அப்போதே இதன் மீதான விமர்சனங்கள் எழுந்தன.

அதாவது இந்த சிலையால் என்ன பலன் கிடைக்கப்போகிறது. அந்த பெரும் தொகையை வேறு ஏதாவது திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தற்போது சிலையை ஒருவர் ஓஎல்எக்ஸில் விற்பனைக்கு உள்ளதாக அறிவித்துள்ளார்.

அது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த மர்ம நபர் OLX இணையதளத்தில் கொடுத்துள்ள விளம்பரத்தில்…

கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ செலவுக்கு அரசுக்கு பணம் தேவைப்படுவதாலும், மருத்துவமனை கட்டவும் இந்த சிலையை ரூ.30ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிலையின் தலைமை நிர்வாகி குஜராத் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து OLX இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர் யார்? என தேடி வருகின்றனர்.

Vallabhbhai Patel Statue for sale on OLX for Corona fund

More Articles
Follows