தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990களில் தமிழ் சினிமா ரசிகர்களை தன் இசையால் கட்டி போட்டவர் தேனிசை தென்றல் தேவா.
1992 இல் வெளியான ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் படு பிரபலமானார் தேவா.
இந்த படத்திற்கு ரஜினி என்ற பெயருக்கு இவர் போட்ட டைட்டில் மியூசிக் தான் 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் ரஜினி படங்களுக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ரஜினியின் அண்ணாமலை பாட்ஷா அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் தேவாவின் இசை தான் பிரபலம். தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் விஜய்.
அதுபோல் அஜித்தின் ஆசை, வாலி படத்திற்கும் இசையமைத்துள்ளார்..
மேலும் பிரஷாந்த் விஜயகாந்த் கார்த்திக், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார் தேவா.
கானா பாடல்கள் என்றாலே தேவா தான் என்றளவில் படு பிரபலமாக இருந்தார்.
அதன் பின்னர் படிப்படியாக தன் படங்களை குறைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று நவம்பர் 20 தேவாவின் பிறந்தநாளையும் அவரது 30 வருட சினிமா பயணத்தையும் முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் ரஜினி பேசும்போது..
“சிங்கப்பூர் பிரசிடெண்ட் செல்லப்பன் ராமநாதன் ஒரு உயில் எழுதி வைத்தார்.
அவரது பூர்வீகம் தமிழ்நாடு தான்.
அவர் எழுதிய உயிலில் நான் இறந்த பின்னர் என்னை அடக்கம் செய்யும் முன் தேவா இசையமைத்த “தஞ்சாவூர் மண்ணெடுத்து….” என்ற பாடல் ஒலிக்க வேண்டும். அதன் பின்னரே என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார்.
(இந்த பாடல் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் இடம்பெற்றது வைரமுத்து பாடல் எழுதியிருந்தார். முரளி & மீனா நடித்திருந்தனர்)
அவரின் ஆசை படியே அவர் இறந்த பின்னர் அந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
இந்த செய்தியானது சிங்கப்பூர் மலேசியா ஹாங்காங் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது. பல நாடுகளில் அந்தப் பாடலின் அர்த்தங்களையும் பிரதிபலித்தனர்.
ஆனால் தமிழ்நாட்டில் எந்த பத்திரிகையும் அந்த செய்தியை கண்டுக்கவில்லை. அது தொடர்பான ஒரு செய்தியும் வெளியிடவில்லை.
நம் தமிழரின் பெருமையை பத்திரிகைகள் போற்ற வேண்டும். நெகட்டிவான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பாசிட்டிவான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.