‘பாகுபலியை மிஞ்ச ஒரு படம் தமிழில் வேண்டும்…’ சேரன்

‘பாகுபலியை மிஞ்ச ஒரு படம் தமிழில் வேண்டும்…’ சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Industry should make moive morethan Baahubali says Director Cheranபார்த்திபன்-மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் சேரன்.

அதன்பின்னர் பொற்காலம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து, படங்களிலும் நடிக்கவும் செய்தார்.

விரைவில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தை சேரன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் சேரன் தற்போது இணைந்துள்ளார்.

அதில் ஒரு பதிவில் அவர் கூறியுள்ளதாவது…

Cheran Pandian‏ @cherandreams 14m14 minutes ago

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்….. பாகுபலியை மிஞ்சும் ஒரு திரைப்படம் தமிழில் பண்ணவேண்டும். தமிழர்களின் சரித்திரத்தில் அத்தனை கதைகள் உள்ளது..

Tamil Cinema Industry should make moive morethan Baahubali says Director Cheran

விஸ்வரூபம்2 பர்ஸ்ட் லுக்; விவேகம் டீசர்… என்ன ஒற்றுமை.?

விஸ்வரூபம்2 பர்ஸ்ட் லுக்; விவேகம் டீசர்… என்ன ஒற்றுமை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Ajithகமல்ஹாசன் தயாரித்து நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் (மே 2) வெளியிட்டார்.

அதில் இந்திய தேசிய கொடியை தன் படரவிட்ட படி தான் கமல் நின்று கொண்டிருப்பார்.

மேலும் தன் ட்விட்டர் பதிவில் நாட்டையும் மக்களையும் நேசிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அஜித் நடித்துள்ள விவேகம் டீசர் வெளியானது.

57 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் முக்கியமாக மூன்று ஷாட்டில் சிவப்பு, வெள்ளை, பச்சை என இந்திய நாட்டின் தேசியக்கொடி நிறத்தை காட்சி கலராக வெளிப்படுத்தியிருந்தனர். (படம் கீழே உள்ளது)

இப்படத்தில் இந்தியாவை சேர்ந்தை ஸ்பையாக பல்கேரியாவில் இருப்பது போலவும், அங்கே சில சாகசங்களை செய்வது போலவும் உள்ளது.

ஆக விஸ்வரூபம்2 மற்றும் விவேகம் இரண்டிலும் தேசிய கொடி வர்ணம் வெளிப்பட்டுள்ளது.

India National flag Connection between Vishwaroopam2 First look and Vivegam Teaser

vishwaroopam vivegam

விவேகம் டீசர்… ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நிலவரம்

விவேகம் டீசர்… ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நிலவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam teaser ajith stilsஅஜித் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் படம் விவேகம்.

சிவா இயக்கி வரும் இதன் சூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில் படத்தின் பாலிவுட் விற்பனை முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இதன் டீசர் இன்று (மே 11ஆம் தேதி) தொடங்கும் நேரத்தில் ரிலீஸ் ஆனது.

முதல் ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் அது கடந்த வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.

 • #Vivegam Teaser Likes 28K-10M
 • 50K-16M
 • 60K-20M
 • 70K-25M
 • 80K-30M
 • 90K-38K
 • 100K-48M
 • 105.5K-1Hr

தற்போது 12 மணி நேரத்தை கடந்துள்ளது.

அதன்படி யூடிப்பில் டீசர் நிலவரம் என்ன? என்பதை பார்ப்போம்.

 • 23,86,091 views (23 மில்லியன்)
 • லைக்ஸ் 2,37,313
 • டிஸ்லைக்ஸ் 43,612
விவேகம் டீசர் வெளியானது; ரசிகர்களுக்கு அஜித் சொல்வது என்ன?

விவேகம் டீசர் வெளியானது; ரசிகர்களுக்கு அஜித் சொல்வது என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam teaser stillசிவா இயக்கத்தில் அஜித் நடித்து, அனிருத் இசையமைத்துள்ள படம் விவேகம்.

இப்படத்தை பிரபல நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளனர்.

நாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் நடிக்க, தம்பி ராமையா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், அப்புக்குட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மே 11ஆம் தேதி தொடங்கும் 12மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியானது.

இதில்…

அஜித்தின் பின்னணி குரல் ஒலிக்கிறது.

அதில் இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு எத்தன தடவை சொன்னாலும்.. நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது.

என்று தன் ரசிகர்களுக்கு அஜித் சொல்வது போல உள்ளது.

மேலும் இடையே அனிருத்தின் பின்னணி இசையும் தெறிக்கவிடும் வகையில் அமைந்துள்ளது.

இறுதியாக இங்கிலீஷில் ஒரு பன்ச் டயலாக்கை வைக்கிறார் அஜித்.
Never. Ever. GIVE UP.
எதற்காகவும் யாருக்காகவும் எப்பவும் உன்னை விட்டுக் கொடுக்காதே என்கிறார்.

மொத்தத்தில்… உன்னை நீ நம்பு. (Believe in Yourself) என்கிறார் தல அஜித்.

Ajith advice to his fans in Vivegam Teaser

vivegam ajith

சிம்பு பட புதிய போஸ்டரை வெளியிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்

சிம்பு பட புதிய போஸ்டரை வெளியிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adhik Ravichandran released STRs new still form AAA movieசிம்பு-யுவன்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் அன்பாவனவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இரண்டு பாகமாக தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகத்தை ரம்ஜான் அன்று (ஜீன் 23ஆம் தேதி) வெளியிட உள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்போடு ஒரு புதிய டிசைன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளதை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Adhik Ravichandran‏ @Adhikravi 12m12 minutes ago
Official Announcement @iam_str #AAA1D for #Ramadan #June23rd #AshwinThatha #TrendSong #MaduraMichael #Sirappu

Adhik Ravichandran released STRs new still form AAA movie

simbu new aaa movie

‘விஜய்-அஜித்துக்கு கதை எழுத ஒரு வருஷம் வேணும்.’ – எழில் ஏக்கம்

‘விஜய்-அஜித்துக்கு கதை எழுத ஒரு வருஷம் வேணும்.’ – எழில் ஏக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director-Ezhil-விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ராஜா’ ஆகிய படங்களை இயக்கியவர் எழில்.

இந்த படங்கள் விஜய்-அஜித்துக்கு சினிமாவில் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் எழில் இயக்கியுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் மே 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் எழில் கலந்துக் கொண்டபோது மீண்டும் அஜித்-விஜய் இணைவீர்களா? என்று கேட்டதற்கு…

“அஜித், விஜய் இருவருக்கும் இன்று மார்கெட் உச்சத்தில் உள்ளது.

அவர்களின் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதை எழுத வேண்டுமென்றால் ஒரு வருடம் எனக்கு தேவைப்படும்.

ஆனால் அவர்களுடன் மீண்டும் பணிபுரிய ஆசை உள்ளது” என்று தெரிவித்தார் எழில்.

விரைவில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் எழில் என்பது குறிப்பிடத்தக்கது.

Ezhil wish to direct again Vijay and Ajith movies

More Articles
Follows