சேரன் இயக்கத்தில் இணையும் கிச்சா சுதீப் & ஸ்ரீநிதி ஷெட்டி.; தயாரிப்பாளர் யார்.?

சேரன் இயக்கத்தில் இணையும் கிச்சா சுதீப் & ஸ்ரீநிதி ஷெட்டி.; தயாரிப்பாளர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என தரமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன்.

அதன் பின்னர் அவரே நடிகராகவும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் சேரன். அண்மையில் இவரது நடிப்பில் ‘தமிழ் குடிமகன்’ என்ற படம் வெளியாகி சாதி ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் இயக்குனராக தன் பழைய பாதையை தொடங்கி இருக்கிறார் டைரக்டர் சேரன்.

இவர் தற்போது இயக்கவுள்ள படத்தில் நாயகனாக கீச்சா சுதீப் நடிக்க நாயகியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

இந்த படத்தை தமிழ் சினிமாவில் பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மேலும் அப்டேட்டுகளுக்கு இணைந்திருங்கள் எங்களுடன்…

Srinidhi shetty is heroine to Actor Kitcha Sudeep in his next film for sathya Jothi films directed by cheran

லியோ நெகட்டிவ் விமர்சனம்.. ‘தலைவர் 171’ ஷூட்டிங்.; லோகேஷ் ரியாக்ஷன் இதோ..

லியோ நெகட்டிவ் விமர்சனம்.. ‘தலைவர் 171’ ஷூட்டிங்.; லோகேஷ் ரியாக்ஷன் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ படம் வெளியானது.

இந்த படம் முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை பெற்றது. 90ஸ் கிட்ஸ் இந்த படத்திற்கு பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘லியோ’ படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து லோகேஷ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

“மக்களுக்கு ‘லியோ’ படம் பிடித்திருந்தால் எனக்கு சந்தோஷம். நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் என்னுடைய அடுத்த படத்தில் அதனை நிவர்த்தி செய்து கொள்வேன்.

ரஜினி நடிக்கும் தலைவர் 171 படம் அடுத்த ஆண்டு 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்” என தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh reaction for Leo negative review and Thalaivar 171

தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் சமுத்திரக்கனி படம்

தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் சமுத்திரக்கனி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும், ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும், இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் துவங்கியது .

டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத் மற்றும் இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இந்த திரைப்படம் , இதுவரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடவிருக்கிறார்கள் குழுவினர்.

விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இசை- அருண் சிலுவேறு,
ஒளிப்பதிவு – துர்கா பிரசாத்
கலை – டௌலூரி நாராயணா.
வசனம் – மாலி
படத்தொகுப்பு – மார்த்தாண்டம்k வெங்கடேஷ்.
நிர்வாக தயாரிப்பாளர் தீபிரெட்டி மஹிபால் ரெட்டி,

எழுத்து இயக்கம் – தன்ராஜ் கொரனானி

Pro குணா.

சமுத்திரக்கனி

Slate Pencil Stories Production No1 begins starring Samuthirakani

தமிழ் சினிமாவில் ‘தங்கலான்’ ஒரு மைல் கல்.; விக்ரம் விருது பெறுவார் – தனஞ்செயன்

தமிழ் சினிமாவில் ‘தங்கலான்’ ஒரு மைல் கல்.; விக்ரம் விருது பெறுவார் – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.

ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சியான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ‘கேஜிஎஃப்’ பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.

சமீபத்தில் இந்த பட அப்டேட் குறித்து ரஞ்சித் தெரிவித்து இருந்தார். இன்னும் பத்து நாட்களில் ‘தங்கலான்’ பட டீசர் வெளியாகும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசரை பார்த்த தனஞ்ஜெயன் பாராட்டு.

தமிழ் சினிமாவில் ‘தங்கலான்’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். ரஞ்சித் படைப்புகளில் சிறந்த படைப்பாகவும் இருக்கும். விக்ரம் நிறைய விருதுகளை பெறுவார் என தெரிவித்துள்ளார் தனஞ்ஜெயன்.

Thangalaan will be milestone in kollywood says Dhananjayan

‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்தில் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா

‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்தில் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கீதா ஆர்ட்ஸ் துவங்கிய காலத்திலிருந்தே, தனித்துவமான திரைப்படைப்புகளை வழங்கி, தனக்கென தனியொரு பெயரைப்பெற்றிருக்கும் புகழ்மிகு நிறுவனம் ஆகும். வித்தியாசமான கதைக்களத்தில் மீண்டும் மீண்டும் பல வெற்றிப்படைப்புகளை தந்து வரும் கீதா ஆர்ட்ஸ் தற்போது, புதிய பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு அற்புதமான ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

தேசிய அளவிலான இளைஞர்களின் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்து வரும் ராஷ்மிகா , தற்போது பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த புதிய படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா

இப்படக்குழு படம் பற்றிய ஒரு அழகான ஸ்னீக் பீக்கை வெளியிட்டுள்ளது, இப்படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் ஒரு அழகான சினிமா அனுபவமாக இருக்கும் என்று ஸ்னீக் பீக் உறுதியளிக்கிறது.

இப்படத்திற்கு தி கேர்ள்ஃபிரண்ட் The Girlfriend என தலைப்பிடப்பட்டுள்ளது, தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் தனது ரசிகர்களை அசத்தவுள்ளார் ராஷ்மிகா. இதில் அவரது தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவை கையாள்கிறார், இசைப் புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், இவர்கள் இருவரும் நிச்சயமாக படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருப்பார்கள். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்க, வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா

நடிகர்கள் & குழுவினர் விவரங்கள்
நடிப்பு – ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர். எழுத்து – இயக்கம் – ராகுல் ரவீந்திரன்
வழங்குபவர் – அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்கள் – வித்யா கோப்பினீடி, தீரஜ் மொகிலினேனி
இசை – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த்
தயாரிப்பு வடிவமைப்பு – S. ராமகிருஷ்ணா & மோனிகா நிகோத்ரே
ஆடைகள் – ஷ்ரவ்யா வர்மா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ

National Crush Rashmika Mandanna in Rahul Ravindran directorial

நானி படத்தில் முக்கிய கேரக்டரில் இணைந்த எஸ் ஜே சூர்யா

நானி படத்தில் முக்கிய கேரக்டரில் இணைந்த எஸ் ஜே சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேச்சுரல் ஸ்டார் நானியும், ‘அந்தே சுந்தரானிகி’ போன்ற கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா ‘நானி 31’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

இந்த படத்தை ‘ஆர் ஆர் ஆர்’ போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படத்தை தயாரித்த டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

‘நானி 31’ தொடர்பாக ஒரு சிறிய அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதன் மூலம் படக் குழு தங்களின் திட்டத்தையும் விவரித்தது. இதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் தங்கள் இரண்டாவது பயணத்தில் இந்த முறை வித்தியாசமான படைப்பை தருவதற்கு முயற்சிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தற்போது ‘நானி 31’ படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தற்போது நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா அசுரத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவே பெயர் பெற்றவர். அதாவது விவேக் ஆத்ரேயா போன்ற இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடிக்கவிருப்பதால் வித்தியாசமான நடிகராக இவர் திரையில் தோன்றுவார் என்ற எதிர்பபார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நானி 31’ இம்மாதம் 23ஆம் தேதியும், பூஜை 24 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய உற்சாகமான அப்டேட்டுகளும் தொடர்ந்து வரவிருக்கிறது.

நானி 31

Versatile Actor SJ Suryah In A Crucial Role For Natural Star Nani at Nani 31

More Articles
Follows