இயக்குநர் – நடிகர் சேரனின் தந்தை பாண்டியன் காலமானார்

இயக்குநர் – நடிகர் சேரனின் தந்தை பாண்டியன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா போற்றும் வகையில் தரமான படங்களை இயக்கியவர் சேரன்.

இவர் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிஃராப், தவமாய் தவமிருந்து என பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

இதில் ஆட்டோகிராப் படத்திலிருந்து அவரே நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் இயக்குநர்-நடிகர் சேரனின் தந்தை எஸ். பாண்டியன் இன்று (நவம்பர் 16) காலை 6 .30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் இயற்கை எய்தினார்.

சேரனின் தந்தை

84 வயதான பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று நவம்பர் 16 காலை உயிரிழந்தார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் 1/14 ஏ, பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும்.

சேரன் தந்தை பாண்டியன் மறைவை தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேரன் தந்தை

Director Actor Cherans father Pandiyan passes away

G-map:

https://maps.app.goo.gl/LdFdGMYcLMZbE1qe6

இளையராஜா இசையமைத்த ‘மைலாஞ்சி’ படத்தலைப்பை மாற்றிய அஜயன் பாலா

இளையராஜா இசையமைத்த ‘மைலாஞ்சி’ படத்தலைப்பை மாற்றிய அஜயன் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மைலாஞ்சி’.

இந்தப் படத்துக்கு ‘மைலாஞ்சி’ என்று தலைப்பு வைத்திருந்த நிலையில் மற்றொரு படத்தின் தலைப்பும் இதே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ‘அஜயன்பாலாவின் மைலாஞ்சி’ என்று டைட்டிலை மாற்றி வைத்துள்ளனர்.

இந்த படத்தில் ‘கன்னிமாடம்’ ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி , முனீஷ்காந்த், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்ய அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார்.

மலைப் பிரதேச பின்னணியில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பு அவசியம் குறித்து பேசும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு 2024 பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

அஜயன்பாலாவின் மைலாஞ்சி

An ilaiyaraaja musical Mylanji movie title changed

மெகா ப்ளானில் ‘ஆளவந்தான்’ ரீ-ரிலீஸ்..; ரஜினி ஃபார்முலா கமலுக்கு கை கொடுக்குமா.?

மெகா ப்ளானில் ‘ஆளவந்தான்’ ரீ-ரிலீஸ்..; ரஜினி ஃபார்முலா கமலுக்கு கை கொடுக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நவம்பர் 15ஆம் தேதி தீபாவளி சமயத்தில் வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’.

கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லனாக இரு வேடங்களில் மிரட்டி இருந்த இந்த படத்தை சுரேஸ் கிருஷ்ணா இயக்க கலைப்புலி எஸ் தானு தயாரித்திருந்தார்.

கமலுடன் மனிஷா கொய்ராலா, ரவீனா டான்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்ய திரு ஒளிப்பதிவு செய்ய சங்கர் எஸான் லாய் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் கமல் கடுமையான உழைப்பை கொடுத்திருந்தாலும் படம் தோல்வியை தழுவியது.

அதன் பிறகு கமல்ஹாசனை பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் தாணு. தோல்விக்கு கமல் தான் காரணம் என பேசி இருந்தார்.

கமல் மிகப்பெரிய கலைஞன்.. அவரை அப்படி பேசாதீர்கள் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு பின்னர் தோல்வி படத்தை வெற்றி படமாக்கும் முயற்சியில் ‘ஆளவந்தான்’ படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி விரைவில் உலகம் எங்கும் 1000 திரையரங்குகளில் ஆளவந்தான் படம் ரீ-ரிலீஸ் ஆகும் என இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ‘பாபா’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருந்தார் ரஜினிகாந்த். ரஜினியின் கேரியரில் பாபா படம் தோல்வி படம் என்றாலும் ரீ-ரிலிஸ் செய்து அதை வெற்றியாக்கி காட்டினார். அந்த படத்தின் நீளத்தை குறைத்திருந்தார்.

அதுபோல ‘ஆளவந்தான்’ படமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரீ ரிலீஸில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தோல்வி படத்தை ரஜினி போல கமல் வெற்றி படம் ஆக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

ஆளவந்தான்

Aalavandhan re release in 1000 screens worldwide

மம்மூட்டியுடன் தன் மனைவி நடித்த மலையாள படத்தை பாராட்டிய சூர்யா

மம்மூட்டியுடன் தன் மனைவி நடித்த மலையாள படத்தை பாராட்டிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணத்திற்குப் பிறகு தன் வயதிற்கு ஏற்ப நல்ல கேரக்டர் உள்ள கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.

36 வயதினிலே, தம்பி, ஜாக்பாட், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜோதிகா.

மம்மூட்டியுடன் இணைந்து ‛காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜோ பேபி என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த டீசரை பார்த்து பாராட்டி இருக்கிறார் நடிகர் சூர்யா. அவரின் பதிவில்…

கடினமான கதையை எளிதாக மலையாள சினிமா துறையினர் கொடுப்பதை பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது.

‘காதல் தி கோர்’ படத்தை நவம்பர் 23ம் தேதியில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். மம்முட்டி – ஜோதிகா – ஜோ பேபி குழுவிற்கு வாழ்த்துக்கள்’ என்று சூர்யா பதிவிட்டுள்ளார்.

Suriya appreciated Kadhal and Malayalam movie making

மோடி பெஸ்ட் ஆக்டர்.. காஸ்ட்யூம் டிசைனர் வரை வைத்திருக்கிறார்.; பிரகாஷ்ராஜ் தாக்கு

மோடி பெஸ்ட் ஆக்டர்.. காஸ்ட்யூம் டிசைனர் வரை வைத்திருக்கிறார்.; பிரகாஷ்ராஜ் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் மிரட்டல் வில்லனாக நடிகர் பிரகாஷ்ராஜை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அவர் நிஜத்தில் பாஜக கட்சிக்கு வில்லனாகவே தெரிகிறார்.

காரணம் பாஜக-வின் நடவடிக்கைகளை எதிர்த்து பல பேட்டிகளில் குரல் கொடுத்து கடுமையான விமர்சனங்களை செய்து வருவதை பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியில்..

“நீங்களும் கமல்ஹாசனும் சிறந்த நடிகர்களாக இருந்தும், அரசியலில் தோல்வி அடைந்து இருக்கிறீர்கள்.

அப்படியெனில் உங்களை விட சிறந்த நடிகர்கள் நம் அரசியலில் இருக்கிறார்களா?” என கேட்கப்பட்டது.

அதற்கு சாதுர்யமாக பதில் அளித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவரின் பதிலில்..

மோடி சிறந்த நடிகர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் & ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் வரை எல்லாவற்றையும் வைத்திருக்கிறாரே” என பேசியுள்ளார்.

Indian PM Modi is best Actor says Prakashraj

காமெடியன்… விஜய்யின் அரசியல்.. துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு.; ஆனந்தத்தில் ஆனந்தராஜ்

காமெடியன்… விஜய்யின் அரசியல்.. துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு.; ஆனந்தத்தில் ஆனந்தராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990 ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த முக்கியமான வில்லன்களில் ஒருவர் நடிகர் ஆனந்தராஜ். ‘என் தங்கச்சி படிச்சவ’ என்ற படத்தில் இவரது வில்லத்தனம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் ஆனந்தராஜ். அந்த படத்தில் ரஜினியை கட்டி வைத்து அடிக்க முதலில் மறுத்தவர் ஆனந்தராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் வில்லன் வேடங்களை மறந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் நாயகனாக பெரிதாக ஜொலிக்கவில்லை.

தற்போது எல்லாம் நிறைய படங்களில் ஆனந்தராஜை ஒரு காமெடி நடிகராகவே பார்க்கலாம்.

இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடினார் ஆனந்தராஜ். அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டருகே உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தாடை மற்றும் தீபாவளி பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தார் ஆனந்தராஜ்.

கூடுதல் தகவல்..

மேலும் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சி கலந்து கொண்ட ஆனந்தராஜ் பேசும்போது..

“என்னை மக்கள் வில்லனாகவே பார்த்தார்கள். தற்போது அவர்கள் என்னை நகைச்சுவை நடிகராகவும் பார்க்கும்போது எனக்கே வியப்பாக உள்ளது அவர்கள் முதலில் ஏற்றுக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது என்றார்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது.. “விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாகவும் மக்களுக்கு நல்லது செய்யட்டும்” என்றும் பேசினார் ஆனந்தராஜ்.

Anandraj speech about his comedy role and Vijay politics

More Articles
Follows