ICU-வில் அனுமதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர்

ICU-வில் அனுமதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நவ்யா நாயர்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘இஷ்டம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து, 2004 இல் வெளியான ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நடிகர் பிரச்சன்னாவுடன் இணைந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகாமானார்.

‘பாசக்கிளிகள்‘, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி‘, ‘மாயக்கண்ணாடி‘, ‘அமிர்தம்‘, ‘சில நேரங்களில்‘, ‘ஆடும் கூத்து‘, ‘ரசிக்கும் சீமானே‘, ‘ராம் தேடிய சீதை‘ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2010 இல் சந்தோஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

நவ்யா நாயர் திருமணத்திற்குப் பிறகு ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்தார்.

மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுக்க நினைத்த நவ்யா நாயர் ‘ஜானகி ஜானே’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை நவ்யா நாயர் உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

‘ஜானகி ஜானே’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக அவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் அப்போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகை நவ்யா நாயர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

actress navya nair admitted to hospital

150 வயது வரை உயிரோடு இருக்கும் வித்தையை அரியணை ஏற்றினால் சொல்வேன் – சரத்குமார்

150 வயது வரை உயிரோடு இருக்கும் வித்தையை அரியணை ஏற்றினால் சொல்வேன் – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மே 28 மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவருமான நடிகருமான சரத்குமார் பங்கேற்றார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் சரத்குமார் பேசியதாவது…

“2026 தேர்தலில் உங்கள் நாட்டாமை (சரத்) அரியணை ஏறவேண்டும் என்று சமக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அது சாத்தியமா என்பது சட்டமன்ற தேர்தலில்தான் தெரியவரும்.

அதனை சாத்தியமாக்க முயற்சி, நேர்மை, உடலுடன் மனவலிமை வேண்டும்.

நான் தற்போது 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன்.

என்னால் 150 வயது வரை உயிருடன் இருக்க முடியும். 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன்.

அந்த வித்தையை 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்னை அரியணையில் ஏற்றும்போது அந்த வித்தையை சொல்வேன்.” என சரத்குமார் பேசினார்.

Sarath Kumar said he is going to live 150 years

2 வருட பிரேக் ஏன்.? ‘மின்னல் முரளி’ & ‘வீரன்’ என்ன சம்பந்தம் – ஹிப் ஹாப் ஆதி

2 வருட பிரேக் ஏன்.? ‘மின்னல் முரளி’ & ‘வீரன்’ என்ன சம்பந்தம் – ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று மே 29ல் நடைபெற்றது.

இதில் பங்கேற்று நடிகர் ஆதி பேசும்போது…

“நான் 2 வருடங்கள் படிப்பதற்காக ப்ரேக் எடுத்துக் கொண்டேன். தற்போது பிஹெச்டி படித்து முடித்துவிட்டு வந்துள்ளேன்.

ஜூன் 2- தேதி ‘வீரன்’ படம் வெளியாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று பார்க்கலாம். எந்தவிதமான முகச் சுழிப்பு காட்சிகளும் இருக்காது.

இது நம் தமிழ் மண் சார்ந்த சூப்பர் ஹீரோ படம். ‘மின்னல் முரளி’ படத்திற்கும் ‘வீரன்’ படத்திற்கும் சம்மந்தம் இல்லை. இருக்காது.

விரைவில் வரலாறு தொடர்பான படத்தில் நடிக்க இருக்கிறேன்.

நான் நடிக்கும் படங்களாக இருந்தாலும், சரி, இயக்கும் படங்களாக இருந்தாலும் சரி, புது முகங்கள் இருப்பதில் கவனமாக இருக்கிறேன்.

‘வீரன்’ படத்திலும் நிறைய யூடியூபர்கள் நடித்துள்ளனர். நான் படம் தயாரித்தாலும் அதிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்” என்றார்.

‘Is Veeran, Minnal Murali Copy?’ – Hiphop Tamizha Adhi

ஸ்ரீதேவி மகனின் சில்மிஷம்.. தாய் வயதில்  இருக்கும் நடிகையுடன் கள்ளக்காதல்

ஸ்ரீதேவி மகனின் சில்மிஷம்.. தாய் வயதில்  இருக்கும் நடிகையுடன் கள்ளக்காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா.

இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘உயிரே’ படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார்.

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

போனி கபூரின் முதல் மனைவியின் மகனும், ஸ்ரீதேவி மகன் முறையுமானவர் நடிகர் அர்ஜுன் கபூர்.

மலைக்காவும் -அர்ஜுனும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

மலைகா அரோராவிற்கு 49 வயது ஆகிறது. அவரது காதலரான அர்ஜுன் கபூருக்கு 37 வயது ஆகிறது.

அவர்களுக்கு இடையே 12 வயது இடைவெளி காரணமாக விமர்சிக்கபட்டனர்.

இருப்பினும், இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 5 வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தனது ஸ்டோரி பக்கத்தில் மலைகா ஒரு புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார். அதில், நடிகர் அர்ஜுன் கபூரின் பிறப்புறுப்பு மட்டும் தலையனை வைத்து மூடப்பட்டுள்ளது. மற்றபடி உடலில் ஒற்று துணி கூட இல்லாமல் அர்ஜுன் கபூர் படுத்திருக்கும் புகைப்படத்தை மலைகா வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘என் சோம்பேறி பையன்..’(My Very Own Lazy Boy) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

malaika arora drops semi nude pic of arjun kapoor

கோவையில் கொண்டாட்டம்.; சுனைனா நடித்த ‘ரெஜினா’ பட டீசர் விழா

கோவையில் கொண்டாட்டம்.; சுனைனா நடித்த ‘ரெஜினா’ பட டீசர் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார். .

யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே “SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மே-30ஆம் தேதி ரெஜினா படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொள்கிறார்.

மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் திரு. எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு பிரபல விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

சித் ஸ்ரீராம், சின்மயி, வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பாடகர்களுடன் நடிகை ரம்யா நம்பீசனும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

பாடல்களை தமிழில் யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R , தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ), மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.

ரெஜினா படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

Celebration in Coimbatore. Sunaina starrer ‘Regina’ movie teaser event

கவர்ச்சி நடிகையுடன் கள்ளக்காதலில் அஜித்தின் மச்சான்

கவர்ச்சி நடிகையுடன் கள்ளக்காதலில் அஜித்தின் மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட் ரிஷி.

தமிழ், தெலுங்கு மற்றும் சில மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், நடிகர் அஜித்தின் மச்சான் ஆவார்.

‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதையடுத்து, மோகன் ஜி இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார் ரிச்சர்ட்.

ரிச்சர்ட் ரிஷி

இந்த இரண்டு படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் ரிச்சர்ட் ரிஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதில், நடிகர் ரிச்சர்ட் நடிகை யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

இதனால், இவர்களின் காதல் கதையை நடிகர் ரிச்சர்ட் உறுதிசெய்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரிச்சர்ட் ரிஷி

Yashika Anand in love with ajith’s brother in law Richard Rishi

More Articles
Follows