தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த அனைத்து படங்களுமே முதலுக்கு மோசமல் செய்யாமல் வசூலை ஈட்டி வருகின்றன.
இதில் வசூலின் உச்சமாக ‘பிச்சைக்காரன்’ கலெக்சனை வாரி வாரி குவித்து வருகிறான்.
தமிழில் மட்டும்தான் இப்படி என்று பார்த்தால், தெலுங்கில் அதைவிட அதிக வசூலை ஈட்டி ஆந்திர ஹீரோக்களையே அச்சுறுத்தி வருகிறது.
வெறும் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இப்படத்தின் தெலுங்கு உரிமை பெறப்பட்டதாம்.
இதுவரை கிட்டதட்ட ரூ. 20 கோடியை நெருங்கியுள்ளது.
விரைவில் 50வது நாளை இப்படம் தொட உள்ளதால் பிரம்மாண்டமான விழாவுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.
இதனால் விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்திற்கும் இப்போதே தெலுங்கு உரிமை பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.