96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பாவனா..; அட ஆமாம்ல…

96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பாவனா..; அட ஆமாம்ல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)கடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 96.

பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை அடுத்து மற்ற மொழிகளில் இதை ரீமேக் செய்ய போட்டி உருவானது.

கன்னட மொழியில் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர்.

விஜய்சேதுபதி வேடத்தில் கன்னட நடிகர் கணேஷும் த்ரிஷா வேடத்தில் பாவனாவும் நடித்து வருகின்றனர்

த்ரிஷா கெட்டப்பில் இருக்கும் பாவனா போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மீண்டும் மீண்டும் அழகிகளுடன் ஜோடி போடும் பிரசாந்த்

மீண்டும் மீண்டும் அழகிகளுடன் ஜோடி போடும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)நடிகர் பிரசாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜானி.

இப்படத்தை அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சேலஞ்ச் என்று பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது.

இப்படம் குறித்த விவரம் வருமாறு…

‘ஜீன்ஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய், `காதல் கவிதை’ படத்தில் இஷா கோபிக்கர், `பொன்னர் சங்கர்’ படத்தில் பூஜா சோப்ரா என உலக அழகிகளுடனும் இந்திய அழகிகளுடனும் நடித்தவர் பிரசாந்த்.

தற்போது நடிக்கவுள்ள புதிய படத்தில் கடந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற திருச்சியைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்பவருடன் இணைகிறார்.

பிரசாந்த்துக்கு அக்காவாக நடிகை பூமிகா நடிக்கிறார். மேலும் நாசர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும் படக்காட்சிகளையும் பாடல்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் படமாக்க இருக்கிறார்களாம்.

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை; மக்களின் வெற்றி என கருணாஸ் அறிக்கை

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை; மக்களின் வெற்றி என கருணாஸ் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunas talks about Eight way road and High Court Stay Orderசென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டத்திற்கான தடைகோரிய வழக்கில் இன்று (8.4.2019) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இந்த வெற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இத்திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதற்கு முன்னே நிலம் அளவிடும் பணிகள் வேக வேகமாக தொடங்கப்பட்டன.

எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.

மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தேறிய அதே சமயம் பூவுலகின் நண்பர்கள், ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

அதன் விளைவாக தமிழக அரசு செயல்படுத்த நினைத்த எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நில உரிமையாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தர பிறப்பித்துள்ளது இது வரவேற்கத்தக்கது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அ.தி.மு.க. பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் எட்டுவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என முழங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இத்தீர்ப்பை மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற நினைத்தவோர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ள கட்சிகள் ”இந்த திட்டத்திற்கு தடை விதிக்க நாங்கள்தான் போராடினோம்” என்று தேர்தல் நேரத்தில் பேசினால் மக்கள் சிரித்துவிடுவார்கள்.

ஆகவே இது மக்கள் போராட்டத்திற்கான வெற்றி! இதை தனிநபர் யாரும் உரிமைகோரி அதை வாக்குகளாக மாற்றிட முயற்சி செய்தால் அதைவிட இழிவானச் செயல் வேறொன்றும் கிடையாது!

இவ்வாறு எம்.எல்.ஏ., கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Actor Karunas talks about Eight way road and High Court Stay Order

ஜெயலலிதாவின் மரணப்படுக்கையில் நடந்ததை சொல்லும் ’சசி லலிதா’

ஜெயலலிதாவின் மரணப்படுக்கையில் நடந்ததை சொல்லும் ’சசி லலிதா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayalalithas biopic titled as Sasi Lalitha directed by Jagadheeswara Reddyதமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும்.

சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை, அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் இன்று வெளியாகியது.

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதை நிறைவேற்றும் விதமாக இப்படம் இருக்கும்.

குறிப்பாக, ஜெயலலிதாவின் இறுதி 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது பற்றியும், உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப் படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும்.

சிறுவயது முதல் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் கூறியது தான் இப்படம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதால் நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம்பெறும்.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ்வர ரெட்டி கூறினார்.

Jayalalithas biopic titled as Sasi Lalitha directed by Jagadheeswara Reddy

 

நடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி!

நடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல கதையம்சம் மற்றும் கதாபாத்திரங்களை கொண்ட பல்வேறு வகையான படங்களை தேர்ந்தடுத்து, மிகச்சிறப்பாக நடித்து நல்ல பெயரையும், புகழையும் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. அவரது நடிப்பு வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும் இந்த கட்டத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் அவர் மாறியிருப்பது எதிர்பாராத ஆச்சர்யம்.

இது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கிருஷ்ணா கூறும்போது, “நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அதற்கு OTT தளங்கள் தான் எனக்கு பரவலான கற்பனை சுதந்திரத்துடன் அதை செய்யும் வாய்ப்பளிக்கிறது. “ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட்” என்ற இந்த நிறுவனம் இப்போதைக்கு வெப் சீரீஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தும். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான “High Priestess” என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த பேனர் மூலம் OTT தளத்துக்கு பல நல்ல உள்ளடக்கங்களை உருவாக்குவதே எனது உடனடி இலட்சியமாகும், அடுத்த தயாரிப்பு தமிழில் இருக்கும்” என்றார்.

ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிருஷ்ணா தயாரிக்க, புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ZEE5 வலைத்தளத்தில் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஒவ்வொரு நபரின் வாழ்விலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இது ஒரு நம்பிக்கையாகவோ அல்லது வெறுமனே வேடிக்கையாகவோ ஜோதிடத்தின் மூலம் வரும் நாட்கள், வாரங்கள் அல்லது ஆண்டுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே ‘தனுசு ராசி’ தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி.

தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, “நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். ‘தனுசு ராசி நேயர்களே’ என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர்.

இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது. எங்கள் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க ஒப்புக் கொண்டதை விடவும், வேறுபட்ட கதையம்சம் உள்ள திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது முந்தைய படங்கள் ரோம்-காம் மற்றும் ஆழ்ந்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டவை. அவர் நினைத்திருந்தால் அது போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்திருக்க முடியும். ஆனாலும், இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க முயற்சி செய்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதி செய்து வருகிறோம். என்னுடைய இந்த ஸ்கிரிப்ட்டை உறுதியாக நம்பி, அதை திரைப்படமாக்க எனக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

More Articles
Follows