‘2.0’ படத்தை விட ‘பாகுபலி’க்கு பல மடங்கு வரவேற்பு

Baahubali2 is 2017s most awaited Hindi film in Indiaஇந்திய சினிமாவே பிரமிக்கும் வகையில் தென்னிந்தியாவில் இருந்து ஷங்கரின் 2.0 மற்றும் ராஜமௌலியின் பாகுபலி-2 ஆகிய படங்கள் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த இரண்டு படங்களின் முதல் பாகங்கள் ரிலீஸாகி இந்தியளவில் பெரும் சாதனைகளை படைத்தது.

பாகுபலி2, அடுத்த வருடம் 2017 கோடை விடுமுறையிலும் 2.ஓ படம் 2017 தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் வெளியாக உள்ள படங்களில் எந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என கருத்துக் கணிப்பை ஒரு வட இந்திய இணையத்தள நிறுவனம் நடத்தியுள்ளது.

அதில் பாகுபலி-2 படம் 51% வாக்குகளை பெற்றுள்ளது.

இதனையடுத்து, ஷாரூக்கானின் ரயீஸ், அக்ஷய்குமாரின் கோல்மால் 4, சல்மான்கானின் டியூப்லைட் படங்கள் உள்ளன.

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்திற்கு குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளன.

இவை இந்திப் படங்களுக்கான கருத்துக்கணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Baahubali2 is 2017’s most awaited Hindi film in India

Overall Rating : Not available

Latest Post