அதர்வா ஜோடியாக பார்வதி; மின்னல் வீரனை தொடங்கி வைத்த விஷால்

அதர்வா ஜோடியாக பார்வதி; மின்னல் வீரனை தொடங்கி வைத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvas next movie Minnal Veeran shoot commencing againஎட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’.

மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது.
இப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.

ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அப்படி வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் அதர்வா தன்னால் ஏற்பட்ட ரூ 5 கோடி இழப்பை சரிகட்டும் விதமாக சம்பளம் வாங்காமல் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு படம் நடித்து தருவதாக கூறினார்.

ஆனால் தயாரிப்பாளர் மதியழகனோ, பட்ஜெட்டை பார்க்காமல் நல்ல தரமான படங்களையே கொடுக்க விரும்புவர் என்பதால், தான் ஏற்கனவே திட்டமிட்டு, படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்த மின்னல் வீரன் படத்தில் தான் அதர்வா நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனால் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருவரையும் அழைத்து சுமார் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை விஷால், தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நியாயங்களை முழுதுமாக கேட்டுவிட்டு, ‘மின்னல் வீரன்’ படத்திலேயே அதர்வாவை நடித்துக் கொடுக்கும்படியும் அது அவரது கேரியருக்கு எவ்வளவு பக்கபலமாக இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறி அறிவுறுத்தினார்.

தயாரிப்பாளரின் உறுதியையும் விஷால் பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்த அதர்வா, இறுதியில் மின்னல் வீரன் படத்திலேயே தான் நடிப்பதாக முழுமனதுடன் ஒப்புக்கொண்டார்.

இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் விஷால் முன்பாக வாக்குறுதி அளித்துள்ளார். அதை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை உடனே ஆரம்பியுங்கள் என்றும் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பக்கபலமாக நிற்கும் என்றும் என்றும் விஷால் ஊக்கம் கொடுத்துள்ளார்.

நாயகன் அதர்வாவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.

பார்வதி நாயர் படம் பற்றிக் கூறும்போது, சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நடித்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.

இப்போது அதர்வாவுடன் மின்னல் வீரன். நிறைய கதைகள் கேட்டு களைத்துப் போனபோது இதுதான் நமக்கு வேணும்னு சொல்ற மாதிரி ஒரு அருமையான கதை கிடைக்குமே , அதுதான் இது என்றார்.

இதையடுத்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். தீபக் மேனன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Atharvas next movie Minnal Veeran shoot starts soon

minnal veeran team

இசைஞானி இளையராஜா பாடல்களை பயன்படுத்த கட்டணம்

இசைஞானி இளையராஜா பாடல்களை பயன்படுத்த கட்டணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maestro ilayarajaஇளையராஜா பாடல்களை ஒளிப்பரப்பு செய்யாத மியூசிக் சேனல்களை நாம் பார்க்க முடியாது.

தினம் ஒரு பாடல் எப்படியாவது ஒளிப்பரப்பாகும். அப்படி தமிழர்களின் வாழ்வில் கலந்து விட்டது அவரது பாடல்கள்.

அதுபோல் திருவிழா, கச்சேரி, விழாக்கள் என அனைத்திலும் ராஜாவின் ராஜ்ஜியம்தான்.

ஆனால், கடந்த சில வருடங்களாக தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்த இளையராஜா கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்.

மேடை கச்சேரிகளில் பாட காப்புரிமை வழங்க வேண்டும் என்றார். மேலும் பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பினார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது.

காப்புரிமை பிரச்சினைகளால் எப்எம் வானொலிகளும் இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திக் கொண்டன.

ஆனால் மேடைக் கலைஞர்கள் அவரின் பாடல்களை பயன்படுத்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.

இந்நிலையில் இளையராஜா திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவருடைய பாடலை பயன்படுத்துவதற்கு காப்புரிமை பெற வேண்டும் என்றும், அதை வசூலிக்கும் வேலையை திரையிசைக் கலைஞர்கள் சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இளையராஜா பாடல்களை கச்சேரிகளில் பயன்படுத்த எவ்வளவு கட்டணம் என்பதை திரையிசைக் கலைஞர்கள் சங்கம் தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி, ஒரு ஆண்டுக்கு, வெளிநாட்டுக் கச்சேரிகளுக்கு ஏ பிரிவினருக்கு 20 லட்சம், பி பிரிவினருக்கு 15 லட்சம், சி பிரிவினருக்கு 10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சிகள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்கிகள், கல்யாணம், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ள எந்தவிதமான கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.0 ரிலீஸில் தமிழகத்தை மிஞ்சிய கேரளா.; மிரள வைக்கும் ரஜினி ரசிகர்கள்

2.0 ரிலீஸில் தமிழகத்தை மிஞ்சிய கேரளா.; மிரள வைக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 postersஷங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

ரஜினிகாந்த் படங்களுக்கு உலகளவில் மார்கெட் இருப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்திய சினிமாவிலேயே ரூ. 550 கோடி பட்ஜெட்டில் உருவான முதல் படம் என்பதால் உலக சினிமா ரசிகர்களும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கேரளாவில் மட்டும் இப்படம் 440 தியேட்டரிகளில் வெளியாகிறதாம். இதுவரை எந்தவொரு தமிழ் படமும் அங்கு இத்தனை தியேட்டர்களில் வெளியாகவில்லை.

மேலும் ரசிகர்களுக்கான முதல் காட்சியானது அதிகாலை 3.40 மணிக்கே தொடங்குகிறதாம்.

தமிழகத்தில் முதல் காட்சி 4 மணிக்குதான் தொடங்குகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

டிசம்பர் 14 ல் “பயங்கரமான ஆளு* அரசர் ராஜா வருகிறார்

டிசம்பர் 14 ல் “பயங்கரமான ஆளு* அரசர் ராஜா வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arasar Raja starer Payangaramana Aalu release on 14th December 2018பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பயங்கரமான ஆளு.

அறிமுக இயக்குநர் அரசர் ராஜா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, இப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார்.

இதில் ஹீரோயின்களாக ரிஷா, சாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும், ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது…

“நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர்.

அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்க கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்.” என்றார்.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசர் ராஜா, முதலில் வேறு ஹீரோவை வைத்து இப்படத்தை இயக்க இருந்த நிலையில், ஹீரோ கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரே ஹீரோவாகவும் நடித்துவிட்டாராம்.

இப்படத்தின் பாடல்களுக்கு சுதிர் அலிகான் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசை பிரத்யேகமாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்க வகையில் இருக்க வேண்டும் என்பதால், இசை அரசர் தஷி இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

செல்வமனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களை தமிழ்க்குமரன் எழுத, கிக்காஸ் காளி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சரண் பாஸ்கர் நடனத்தை வடிவமைக்கிறார்.

இப்படத்தின் கேரளா, வேலூர், ஆரணி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றதோடு, வேலூரில் உள்ள பூச்சாண்டிகுப்பம் என்ற காட்டுப் பகுதியில் உள்ள பழைய பிரெஞ்சு கோட்டை ஒன்றிலும் படமாக்கப்பட்டுள்ளது.

மிக பழமையான இந்த கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் ‘பயங்கரமான ஆளு’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான படமாக இருந்தாலும், காதல் காமெடி என்று கமர்ஷியலாக உருவாகியிருக்கும் ‘பயங்கரமான ஆளு’ வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.

Arasar Raja starer Payangaramana Aalu release on 14th December 2018

Arasar Raja starer Payangaramana Aalu release on 14th December 2018

தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் மேயாத மான் நடிகை

தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் மேயாத மான் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress indhujaகடந்த நவம்பர் 14-ம் தேதி அன்று விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லீ இப்படத்தை இயக்குகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க விஷ்னு ஒளிப்பதிவு செய்கிறார்.

அடுத்த 2019 ஜனவரியில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் தற்போது ப்ரீ புரடக்ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அட்லி.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் மேயாத மான் தங்கச்சி நடிகை இந்துஜாவும் இணைந்திருக்கிறாராம்.

கஜா பாதித்த பகுதிகளில் 2.0 கட்-அவுட்க்கு தடை; மக்களுக்கு உதவ ரஜினி உத்தரவு

கஜா பாதித்த பகுதிகளில் 2.0 கட்-அவுட்க்கு தடை; மக்களுக்கு உதவ ரஜினி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini request his fans to avoid 2pointO cut outs in Gaja cyclone affected areasஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை (நவ., 29) உலகமெங்கும் வெளியாகிறது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 10,000க்குமே மேற்பட்ட தியேட்டகளில் ரிலீஸாகிறது.

ரூ. 543 கோடியில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் புயல்பாதித்த பகுதிகளில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி நடத்த வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேனர், கட்அவுட் வைக்கவும் ரஜினி தடை விதித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் சார்பில் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2.0 பட சிறப்பு காட்சி கஜா புயல் பாதித்த பகுதிகளில் திரையிடக்கூடாது, தியேட்டருக்குள் மட்டும் ஒரு பேனர் வைத்துக் கொள்ளலாம்.

மற்ற இடங்களில் கட்அவுட், பேனர்கள் வைக்ககூடாது. பேனர், கட்அவுட் வைக்க ஆகும் செலவை மன்ற நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

Rajini request his fans to avoid 2pointO cut outs in Gaja cyclone affected areas

More Articles
Follows