தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதுகுறித்து இப்பட நாயகி அருந்ததி நாயர் கூறியதாவது..
“என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கிறது இந்த ’சைத்தான்’. அது எனக்கு தேவதை‘ என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்.
என் மீது நம்பிக்கை வைத்த விஜய் ஆண்டனிக்கு என்னுடைய நன்றி.
’ஐஸ்வர்யா’ என்னும் வலுவான கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை, இந்த சைத்தான் பெற்றுத் தந்திருக்கிறது.
என்னுடைய சொந்த குரலிலேயே இப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளேன்” என்று ஆனந்தமாக கூறுகிறார் அருந்ததி நாயர்.