கமலைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி பட டைட்டிலில் சிபிராஜ்

கமலைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி பட டைட்டிலில் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sibirajசைத்தான் பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் சத்யா படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

இதே தலைப்பில் உருவான படத்தை கமல் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

சத்யா என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடிக்கின்றனர்.

சத்யராஜின் குடும்ப நிறுவனமான நாதம்பாள் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் சிபிராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ரங்கா என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

இது 1982ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பாகும்.

நாளைய இயக்குனர் புகழ் வினோத் இயக்கவுள்ள இப்படத்தில் நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

ஜீவா, ஹன்சிகாவுடன் சிபிராஜ் நடித்த போக்கிரி ராஜா படத்தலைப்பும் ரஜினி படத்தலைப்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நலிந்த விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கொடுத்த பிரசன்னா-சினேகா

நலிந்த விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கொடுத்த பிரசன்னா-சினேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna and Sneha donates two Lakhs to struggling farmersபெருமைமிகு தமிழர்கள் விழாவில் நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு விஷால் உதவினார்.

இவரைப்போல், விவசாயிகளுக்கு நாங்களும் உதவ வேண்டும் என பிரசன்னா-சினேகா தம்பதிகள் விரும்பினர்.

எனவே, நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார் விஷால்.

அதன்படி பிரசன்னா மற்றும் சினேகா நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு உதவும் வகையில் ரூ. 2-லட்சம் நிதி வழங்கினர்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா, சினேகா ஆகியோர் செயலில் இறங்கி செய்துள்ள இந்த நற்செயல் பாராட்டுக்கூரிய ஒன்றாகும்.

இந்நிகழ்வு விஷால் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட “Friends Of Farmers” எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Prasanna and Sneha donates two Lakhs to struggling farmers

Sneha Prasanna Photos

அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்களின் ரிலீஸ் தேதி பட்டியல்

அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்களின் ரிலீஸ் தேதி பட்டியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Next Four Avatar Movies Release Dates hereகடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி வசூலை வாரிக் குவித்த படம் ‘அவதார்’.

இதற்கு முன் வசூல் சாதனை படைத்த `டைட்டானிக்’ சாதனைகளையும் அவதார் முறியடித்ததாக சொல்லப்படுகிறது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, அவதார் படத்தின் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.

தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

`அவதார் 2′ – டிசம்பர் 18 2020
`அவதார் 3′ – டிசம்பர் 17 2021
`அவதார் 4′ – டிசம்பர் 20 2024
`அவதார் 5′ – டிசம்பர் 19 2025

The Next Four Avatar Movies Release Dates here

கீர்த்தி சுரேஷ் ஜோடியாக சூர்யாவுக்கு பதில் துல்கர் சல்மான்

கீர்த்தி சுரேஷ் ஜோடியாக சூர்யாவுக்கு பதில் துல்கர் சல்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gemini ganesan savithiriமுன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு “நடிகையர் திலகம்” என்ற பெயரில் தமிழில் படமாக்கப்பட உள்ளதை பார்த்தோம்.

இப்படம் தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாகிறது.

தெலுங்கின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கவுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார்.

பத்திரிகையாளர் கேரக்டரில் சமந்தா நடிக்க, நடிகை ஜமுனா கேரக்டரில் அனுஷ்கா நடிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

மிக்கி ஜே.மேயர் இசையமைக்கவுள்ள இப்படத்தில் “காதல்மன்னன்” ஜெமினி கணேசன் கேரக்டரில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் அவர் நடிக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில் நடிகர் மம்மூட்டியின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

வருகிற மே 8-ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dulquer Salmaan to romance with Keerthy Suresh in Nadigaiyar Thilagam

nadigaiyar thilagam

ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்தில் இணைந்த கார்த்தி

ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்தில் இணைந்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

magalir mattumகுற்றம் கடிதல் படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரம்மன் அடுத்து இயக்கியுள்ள படம் மகளிர் மட்டும்.

இப்படத்தில் ஜோதிகா, பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிஸ்டன் உள்ளிட்டோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இந்த ஆல்பத்தில் 7 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் இடம் பெற்றுள்ள நிலையில், குபு குபு குபு என்ற பாடலை விவேக் எழுத கார்த்தி பாடியுள்ளார்.

மேலும் நடிகைகள் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Karthi crooned in Jyothikas Magalir Mattum movie

magalir mattum 7 songs

விஜய் பட இயக்குனர் அட்லிக்கு கைகொடுக்கும் கமல்

விஜய் பட இயக்குனர் அட்லிக்கு கைகொடுக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atlees Sangili Bungili Kadhava Thorae songs will be released by Kamalhassan‘ராஜா ராணி’ மற்றும் ‘தெறி’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் 61 படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இதனிடையில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை முதன்முறையாக தயாரித்துள்ளார்.

‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனத்தின் சார்பாக இவர் தயாரிக்க, பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

ஹைக் என்பவர் இயக்க, ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை இன்று ஏப்ரல் 24ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அடுத்த மாதம் மே 19ஆம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் அட்லி.

Atlee ‘s Sangili Bungili Kadhava Thorae songs will be released by Kamalhassan

More Articles
Follows