சிபிராஜுக்கு உதவிய கமல்-சூர்யாவுக்கு சத்யராஜ் நன்றி

sibiraj and sathyarajசைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் சத்யா.

இப்படத்தை சத்யராஜ் தயாரிக்க, அவரது மகன் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ், சதீஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சைமன் K கிங் இசையமைக்க, அருண் மணி ஒளிப்பதிவாளர் செய்ய எடிட்டிங் பணிகளை கெளதம் ரவிச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர்.

இப்படம் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியதாவது…

நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு தெலுங்கில் ஹிட் அடித்த ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார்.

நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா? என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.

அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். நான் சத்யா படத்தின் படபிடிப்பு துவங்கி பத்து நாள் கழித்து தான் ஷணம் படத்தை பார்த்தேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச்சிறந்த நடிகர் பட்டாளத்துடன் சத்யா திரைப்படம் நன்றாக வந்துள்ளது.

சத்யா என்ற டைட்டிலை கமலிடம் கேட்க சொன்னார் என் மகன். ஆனால் எனக்கு சிபாரிசு பிடிக்காது.

எனவே சிபிராஜே கமல்ஹாசனிடம் பேசி வாங்கிவிட்டார். கமலுக்கு நன்றி. அதுபோல் இப்படத்தின் ட்ரைலரை வெளியிடும் சூர்யாவுக்கும் நன்றி. என்று பேசினார் சத்யராஜ்.

Overall Rating : Not available

Related News

பாகுபலி படத்திற்கு முன்பே ராஜமௌலி படங்களுக்கு…
...Read More
பாகுபலி படத்தின் 2 பாகங்களை முடித்து…
...Read More
பாகுபலி படத்திற்கு முன்பே கிட்டதட்ட 15க்கும்…
...Read More
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்…
...Read More

Latest Post