வெங்கட்பிரபுக்கு போட்டியாக அருண்ராஜா காமராஜின் மேட்ச்

வெங்கட்பிரபுக்கு போட்டியாக அருண்ராஜா காமராஜின் மேட்ச்

arun raja kamaraj and venkat prabhuகிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் ஒன்றிணைத்து வெற்றி கண்டவர் இயக்குனர் வெங்கட்பிரபு.

கிரிக்கெட்டை மையப்படுத்தி இவர் இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றது.

ஆனால் இவரின் படத்தில் ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடினர்.

இந்நிலையில், பாடல் ஆசிரியரும் பாடகரும் நடிகருமான அருண் ராஜா காமராஜ் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்து இருக்கிறாராம்.

இது வெங்கட்பிரபுவின் சென்னை 28 படத்தின் 3ஆம் பாகத்திற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்று இணையத்தையே அதிரவைத்த மெர்சல்-வேலைக்காரன்

இன்று இணையத்தையே அதிரவைத்த மெர்சல்-வேலைக்காரன்

Mersal and Velaikkaran songs goes viral on same dayவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். அதுபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.

இதில் வேலைக்காரன் செப்டம்பர் இறுதியிலும், மெர்சல் படம் அக்டோபரிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நீதானே…’ மற்றும் ‘மெர்சல் அரசன்…’ ஆகிய இரண்டு பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று வெளியானது.

சற்று நேரத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்…’ என்ற பாடல் வரிகள் வீடியோவும் வெளியானது.

இந்த மூன்றும் மாலைமுதல் இரவு வரை இணையத்தை அதிர வைத்து வருகிறது.

இரு தரப்பு ரசிகர்களும் அதிகளவில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Mersal and Velaikkaran songs goes viral on same day

நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்து 120 கோடியை தாண்டியது விவேகம்

நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்து 120 கோடியை தாண்டியது விவேகம்

Vivegam movie collected nearly Rs 125C world wideஅஜித் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 3250 திரையரங்குகளில் வெளியானது.

சென்னையில் மட்டும் முதல்நாளில் இதற்கு முந்தைய கபாலி சாதனையை முறியடித்துள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபீஸில் வேகமாக ரூ. 6 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

5 நாட்களில் ரூ. 6.31 கோடியை சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.

படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 60 கோடியை நெருங்கியுள்ளது.

உலகளவில் ரூ. 125 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விவேகம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivegam movie collected nearly Rs 125C world wide

தம்பி இப்படி பண்ணலாமா..? அஜித்துக்கு மன்சூர்அலிகான் அட்வைஸ்

தம்பி இப்படி பண்ணலாமா..? அஜித்துக்கு மன்சூர்அலிகான் அட்வைஸ்

Actor Mansoor Ali Khan advice to Ajith regarding Vivegam movieநடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம் விவேகம்.

கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்த போதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் அஜித்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்…
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழுப்படத்தையும் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து எடுத்து விட்டீர்கள்.

தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் உள்ளது.

தமிழ்நாட்டில் படமெடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.

உங்கள் படம் ஓட வேண்டும் என திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயிலுக்கு வந்திருக்க கூடாது.

உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்

Actor Mansoor Ali Khan advice to Ajith regarding Vivegam movie

சாட்சிகளை கலைத்துவிடுவார்; திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சாட்சிகளை கலைத்துவிடுவார்; திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

Actor Dileepநடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இவர் தற்போது கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் உள்ளார்.

இந்நிலையில் திலீப் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் அவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் வெளியில் வந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் எனவும் அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

எனவே இந்த மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதற்கு முன்பே கடந்த ஜூலை 15-ம் தேதியும அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் மேனையே மெர்சலாக்கிய விஜய்

மேஜிக் மேனையே மெர்சலாக்கிய விஜய்

Magic Man praises Vijays dedication in Mersal movieஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெர்சல் படத்தில் விஜய்யுடன் காஜல், சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்டவர்கள் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒரு கேரக்டரில் விஜய் மேஜிக் நிபுணராகவும் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்த கேரக்டருக்காக விஜய் மேஜிக் கற்றுக் கொண்டாராம்.

இதற்காகவே வெளிநாட்டிலிருந்து 3 மேஜிக் நிபுணர்கள் இந்தியா வந்து விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேஜிக் நிபுணரான கோகோ ரெக்யூம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“ஜோசப் விஜய் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர்.

கடந்த 2017 மே மாதம் அவருடன் பணியாற்றியதை மிகப்பெருமையாகக் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Magic Man praises Vijays dedication in Mersal movie

More Articles
Follows