தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ பட டீசர் பார்வையாளர்களிடையே பல மடங்கு உயர்த்தியுள்ளது.
நகைச்சுவை பாணியில் இருந்து தீவிரமான இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்துக்குள் புகுந்திருக்கும் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
இதுமட்டுமல்லாது ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார் மற்றும் நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட திறமையான நடிகைகள் மற்றும் மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்தப் படத்தின் எதிர்பார்ப்புகளை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயங்களையே தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசரும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
90 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், வெங்கட்பிரபு மற்றும் பா. இரஞ்சித் ஆகியோர் படத்தின் கதையோட்டத்தை சொல்லியபடி பார்வையாளர்களை இதன் வலுவான காட்சிகளுக்குத் தயார் படுத்துகிறார்கள்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த அனைத்து விஷயங்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*
எழுத்து, இயக்கம்: சி.எஸ். அமுதன்,
தயாரிப்பு: கமல் போஹ்ரா, G. தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா- இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்,
இசை: கண்ணன்,
படத்தொகுப்பு: TS சுரேஷ்,
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய தேதி ஆகியவற்றை படக்குழு விரைவில் அறிவிக்கும்.
director CS.Amudhan jumps from comedy to investigation.