தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ்.
அதன் பிறகு ’கோவா’, ‘ஈசன்’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ’பிரம்மன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
‘கப்பல்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த அவர் அதன் பிறகு ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தார்.
இந்த நிலையில், வைபவ் நடிக்கும் 25 வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு ’ரணம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் நாயகிகளாக நடிக்கவுள்ளார்.
மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது.
vaibhav 25th movie title and poster revealed by karthik subburaj