தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 68’ படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘லியோ’ படத்தின் தொடர் படப்பிடிப்புகளுக்குப் பிறகு நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மேலும் விஜய், சுற்றுலா முடிந்த பிறகு ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
vijay going for short vacation to abroad