சென்னை 28 ஜெய் கேரக்டர் என்னுடையது..; என் கதையை வெப் சீரிஸாக்கிவிட்டார் வெங்கட் பிரபு..; ‘பிக்பாஸ்’ ஆரி பட இயக்குனர் குற்றச்சாட்டு

சென்னை 28 ஜெய் கேரக்டர் என்னுடையது..; என் கதையை வெப் சீரிஸாக்கிவிட்டார் வெங்கட் பிரபு..; ‘பிக்பாஸ்’ ஆரி பட இயக்குனர் குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Sasi Dharanஇயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’.

விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குனர் சசிதரன்.

இவர் அட்டகத்தி தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து..

தற்போது bigboss புகழ் ஆரி அர்ஜுன் உடன் புதிய படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.

தன்னுடைய கதையான
வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘லைவ் டெலிகாஸ்ட்’ சீரிஸ் கதை உருவான விதம் குறித்தும் இயக்குனர் வெங்கட்பிரபு குறித்தும் இயக்குனர் சசிதரன் கூறியதாவது,..

“2005 காலகட்டத்தில் வெங்கட்பிரபுவும் நானும் நண்பர்களாக இருந்தோம். அந்தசமயத்தில் அவர் நடித்திருந்த ‘உன்னை சரணடைந்தேன்’ என்கிற படம் வெளியாகி இருந்தது.

அப்போது அவரை ஹீரோவாக வைத்து நான் ஒரு படம் இயக்குவதற்காக, இருவரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான் தயாரிப்பாளர் எஸ்பிபி சரணிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் வெங்கட்பிரபு.

ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக கூறிய எஸ்பிபி சரண் என்னிடம் கதை இருக்கிறதா? என கேட்டார்.

அப்போது அவரிடம் நான் ஒரு கதை கூறினேன் அது அவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால் அதன்பிறகு அதுபற்றிய பேச்சே இல்லை.. ஒருநாள் திடீரென வெங்கட்பிரபு என்னிடம் வந்து, தனது நண்பரான சிங்கப்பூரை சேர்ந்த கேபிடல் சினிமாஸ் சரவணன் என்பவர் மூலமாக தனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறினார்.

அப்போது ஆங்கில ஹாரர் படம் ஒன்றை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றலாம் என கூறினார்கள்.. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. அதனால் நாமே புதிதாக ஒரு கதையை உருவாக்கலாம் என கூறி, சில நாட்களில் ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற ஒரு புதிய ஹாரர் கதையை உருவாக்கி வெங்கட்பிரபுவிடம் கூறினேன்.

அவருக்கும் அந்த கதை பிடித்துவிட்டது உடனே அதை எஸ்பிபி சரணிடம் கூற அவரும் சம்மதித்து, கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டனர். அப்போதும் என்னை அழைத்த வெங்கட்பிரபுவும் எஸ்பிபி சரணும் இந்தப்படத்தின் முழு திரைக்கதையையும் வசனத்தையும் என்னையே உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

ஏற்கனவே எஸ்பிபி சரண், எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததால், அந்த நம்பிக்கையில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக இந்த ஹாரர் கதையை நான் முழு மூச்சாக அமர்ந்து உருவாக்கி முடித்தேன்.

அதன்பிறகு மொத்த டீமையும் அழைத்து நான் உருவாக்கிய மொத்த ஸ்கிரிப்டையும் படித்துக் காட்டினேன்.. அனைவருக்குமே பிடித்துவிட்டது.. தயாரிப்பாளர் எஸ்பிபி சரணுக்கு இந்த கதை பிடித்திருந்தாலும், படத்திற்கு அதிக செலவாகும் என்பதாலும் இயக்குனர் வெங்கட் பிரபுவை நம்பி அவரது முதல் படமாக அவ்வளவு ரூபாய் செலவு செய்ய முடியாது என்றும் கூறினார்.

அதன்பிறகு சில மாதங்கள் வரை அதுபற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது. ஒரு நாள் அவர்கள் இருவரும் தாங்கள் இணைந்து நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு என்னை வரவழைத்தார்கள்.

அப்போதும் நான் கூறிய கதையை படமாக்க வேண்டும் என வெங்கட் பிரபு சொல்ல, பட்ஜெட் அதிகம் என மீண்டும் மறுத்தார் எஸ்பிபி சரண்.. அதேசமயம் வெங்கட் பிரபுவிடம் வேறு ஒரு கதை உள்ளது அதை பண்ணலாம் என்று கூற, அப்போது வெங்கட் பிரபு தெருவோர கிரிக்கெட் விளையாடுபவர்கள் நட்பு என்கிற வரியை மட்டும் என்னிடம் கூறினார்.

ஆனால் வெங்கட் பிரபுவுவோ, தெருவோர கிரிகெட் என்கிற வார்த்தை மட்டுமே தன்னிடம் உள்ளது அதை வைத்து மேற்கொண்டு என்ன செய்வது என்று மீண்டும் என்னிடமே கேட்க,

சரன் எனக்கு இயக்குனர் வாய்ப்பு அளிக்கிறேன் என்று சொன்னதை மட்டுமே நம்பி.. அதன் பிறகு தெருவோர கிரிக்கெட் என்ற புள்ளியை மட்டுமே வைத்து மீண்டும் சென்னை 28 அதற்கான முழு கதையையும் திரைக்கதையையும் நானே தயார் செய்து வசனத்தையும் எழுதினேன்.

அந்த படத்தில் இடம்பெற்ற நடிகர் ஜெய்யின் கதாபாத்திரம் கூட, எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தான்.. அப்படி என் திறமை அனைத்தையும் கொட்டி எழுதிய கதைதான் சென்னை-28.

ஆனால் மொத்த படத்தின் கதையை எழுதி முடித்து அவர்களிடம் கொடுத்ததுமே அதன்பின் வந்த நாட்களில் வெங்கட் பிரபுவும் எஸ்பிபி சரணும் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

சொல்லப்போனால் அந்தப்படத்தில் நான் பணிபுரிவதையே அவர்கள் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து நானே விலகுவதாக கூறி வெளியே வந்துவிட்டேன்..

சென்னை 28 படத்தின் டைட்டில் கார்டில் கதை திரைக்கதை வசனம் என என் பெயர் போடும்படி கேட்டேன். ஆனால் திரைக்கதை வசனம் என்று போட்டுவிட்டு அதன் அருகில் சிறியதாக உதவி என்று சிறியதாக போட்டார் வெங்கட்பிரபு.

அதன்பிறகு அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதும், வெங்கட்பிரபு மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என என்னை அழைத்தார். ஆனால் எனக்கு அவருடன் மீண்டும் இணைவதற்கு விருப்பம் இல்லாததால் அவரது அழைப்பை நிராகரித்து விட்டேன்.

அதன்பிறகு அட்டகத்தி தினேஷை வைத்து, தற்போது ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டேன். சென்சார் பணிகள் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில்தான் ஹாட்ஸ்டார் விளம்பரத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற பெயரில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸின் டீசரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் சரவணன் மற்றும் சரன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக நான் எழுதிக்கொடுத்து, பட்ஜெட் அதிகம் என ஒதுக்கி வைத்தார்களே, அதே ஸ்கிரிப்ட்டை தான் தற்போது வெங்கட்பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற வெப் சீரியஸாக இயக்கியுள்ளார்.

கடந்த 2007-லேயே, இந்த கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளேன். அந்தக் கதைக்கும் கூட ‘நேரடி ஒளிபரப்பு’ என்று டைட்டில் வைத்து தான் பதிவு செய்துள்ளேன். அதையே தற்போது ஆங்கிலத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்கிற பெயரிலேயே வெப்சீரிஸாக இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு.

என் பெயரில் அந்தக்கதை இருக்கும்போது, என்னிடம் அனுமதி பெறாமலேயே, எனக்கு தெரியாமலேயே வெங்கட்பிரபு இவ்வளவு துணிச்சலாக அதை வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார் என்றால் அதற்கு பின்னணியில் இன்னொரு வலுவான காரணமும் இருக்கிறது.

அதாவது கடந்த 2007-ல் நான் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருந்தபோது, என்னுடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் பல பொருட்கள் எரிந்து நாசம் ஆனாலும், நான் எழுதி வைத்திருந்த எண்பதுக்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய பெட்டி அதிர்ஷ்டவசமாக தப்பியது. பெரிய அளவில் சேதாரம் இல்லாமல் என்னுடைய கதைகளும் தீயிலிருந்து தப்பின.

இந்த தீ விபத்து குறித்து எப்படியோ கேள்விப்பட்ட வெங்கட்பிரபு, மறுநாள் என்னிடம் அது குறித்து விசாரித்து விட்டு, அப்படியே பேச்சுவாக்கில் என் கதைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று கேட்டார். நான் அவையெல்லாம் தீயில் எரிந்து விட்டன என்று கூறினேன். அதை கேட்டுக்கொண்ட வெங்கட் பிரபு, அதன்பிறகு என்னிடம் தொடர்பு கொள்ளவே இல்லை..

இப்போது தான் எனக்கு தெரிகிறது, என்னுடைய கதைகள் எரிந்து விட்டது என்கிற தைரியத்தில் தான், வெங்கட்பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ கதையை வெப்சீரிஸாக தற்போது எடுத்துள்ளார்.

வெங்கட்பிரபுவுக்கு இது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. காரணம் இதே கதையை, அதாவது நான் ஏற்கனவே எழுதிய ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற கதையைத்தான் வெப் சீரிஸாக இயக்குவதற்காக ‘வி கோஷ் மீடியா’ என்கிற நிறுவனத்துடன் பேசி கடந்த அக்டோபர் மாதம் தான், அதற்காக முன்பணமும் வாங்கியுள்ளேன்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்து கொண்டேன். இதுகுறித்து தற்போது நான் எழுத்தாளர் சங்கத்திற்கு மெயில் அனுப்பியுள்ளேன்.

விரைவில் நேரில் சென்று அவர்களிடம் இது குறித்து பேச இருக்கிறேன்.. எனக்கான நியாயத்தை சங்கத்தின் மூலமாக பெற முயற்சி எடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்

இயக்குனர் சசிதரன் வெங்கட்பிரபு குறித்து அவர் இயக்கியுள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் கொடுக்கும் கூறியுள்ள தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Director Sasi Dharan blames Venkat Prabhu

மாஸ்டர் 50.. கபடதாரி 30… விதியை மீறிய விஜய்..; தயாரிப்பாளர் சங்கத்துடன் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை!

மாஸ்டர் 50.. கபடதாரி 30… விதியை மீறிய விஜய்..; தயாரிப்பாளர் சங்கத்துடன் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterஇந்த மாதம் பிப்ரவரி முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையிலும் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓடிடியில் ஓடிக் கொண்டிருப்பதால் தியேட்டர் வசூல் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளதாவது..

‘மாஸ்டர்’ பட லைசென்ஸ் பிப்ரவரி 4ம் தேதி வரை மட்டுமே உள்ளது.

ஆகையால் 5ம் தேதி முதல் யாரெல்லாம் படத்தை திரையிட விரும்புகிறீர்களோ அவர்கள் அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் பேசி புதிய ஒப்பந்தம் போட்டு கொள்ள வேண்டும்.

‘கபடதாரி’ படத்தை 30 நாள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.

சின்ன பட்ஜெட் படங்கள் 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜெட் படங்கள் 50 நாட்களுக்கு பிறகு மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளோம்.

எனவே இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் விரைவில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்”

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் பேசியிருக்கிறார்.

Theatre owners to discuss with film producers council regarding OTT license

சூரி – கதை நாயகன்… விஜய்சேதுபதி – கதாநாயகன்..; இளையராஜா புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் பேச்சு

சூரி – கதை நாயகன்… விஜய்சேதுபதி – கதாநாயகன்..; இளையராஜா புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi sooriசென்னை கோடம்பாக்கத்தில் (பழைய MM தியேட்டர்) தன் இசை பணிகளை தொடர புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்று பிப்ரவரி 3 முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் பட பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளார்.

(45 வருடங்களாக தன் இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் செய்து வந்தார். சில பிரச்சனைகளால் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

எனவே இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசியதாவது…

“நான் இளையராஜாவின் பெரிய ரசிகன். அவர் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் வந்தாச்சு.

சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதே சந்தோஷம்.

எங்க பட பாடல்கள் உருவாக்கம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் பணிபுரிய வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. என் வாழ்க்கையில் இந்த நாள் முக்கியமான நாள்.” என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் பேசியதாவது…, “இளையராஜாவின் இசையைக் கேட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம்.

ஒவ்வொரு பட உருவாக்கத்தின்போதும், அவருடைய பாடல்களை முன்வைத்தே பேசுவோம்.

இளையராஜா உடன் பணிபுரிவது, இந்தப் படத்தில் அமைந்திருப்பது சந்தோஷம்.

அவரின் புதிய ஸ்டுடியோவில் எங்கள் பட முதல் பாடல் ரெக்கார்டிங் நடக்கிறது என்பது இன்னொரு சந்தோஷம்.

இந்த படத்தின் கதை நாயகன் சூரிதான், கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரியின் மீதுதான் முழுக் கதையும் நடக்கும்.” என வெற்றிமாறன் பேசினார்.

சூரியின் அப்பாவாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Vetrimaaran talks about his upcoming film

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VishamakaranTeaserஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஷமக்காரன்’.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்).

அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட உருவாக்கும்.

அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

பியார் பிரேமா காதல் இயக்குனர் இலன், ‘பைனலி’ பாரத் மற்றும் நீலு ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

படத்தொகுப்பாளர் மணிக்குமரன் பேசும்போது, இந்தப்படம் எடுப்பதற்கு முன்னால் இந்த கான்செப்ட் என்னவென்று அவ்வளவாக புரியவில்லை..

ஆனால் படத்தை பார்த்தபோது தான் எல்லோருக்குள்ளும் ஒரு விஷமக்காரன் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன். ஆங்கிலப்படத்துக்கு இணையாக ஒரு புது விஷயத்தை இதில் முயற்சித்திருக்கிறார்கள்.” என கூறினார்.

நாயகி அனிகா விக்ரமன் பேசும்போது…

“இந்தப்படத்தின் கதை குறித்து ஒரு சிறிய பகுதியை தான் கேட்டேன்.. உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள எனது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருந்தது. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் நன்றாக இருந்தது” என கூறினார்.

இன்னொரு நாயகியான சைத்ரா ரெட்டி பேசும்போது, “கதை கேட்கும்போதே புதிதாக இருந்தது.. அதிலும் எனது கதாபாத்திரம் கொஞ்சம் வில்லி போலத்தான் இருக்கும். அது ஒரு சவால் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்” என கூறினார்.

படத்தின் நாயகனும் இயக்குனருமான வி (விஜய்) பேசும்போது…

“இந்தப் படத்தில் இயக்குநர், நடிகர், பாடகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளேன். சினிமா எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே ஏதாவது புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியதுதான் இந்த ‘விஷமக்காரன்’ படத்தின் கதை.

இதில் ஹீரோவாக நடிப்பது சாதாரணம் என நினைத்தேன்.. ஆனால் ஹீரோவை வைத்து தான் இந்தப்படத்தின் மொத்த கதையுமே நகர்கிறது. அப்போது தான் ஹீரோவாக நடிப்பதன் கஷ்டம் தெரிந்தது.

இங்கே சத்யம் தியேட்டரில் இந்த விழாவுக்காக வந்தபோது கூட, கார் பார்க்கிங்கில் ஹீரோ யார் என விசாரித்தார்கள். யாரோ புது ஹீரோ என சொன்னேன்.. உடனே காரை அப்படி ஓரமா கொண்டுபோய் பார்க் பண்ணுங்க என சொன்னார்கள்.

ஹீரோவாக இருந்தால் தான் தியேட்டர் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதைகூட முக்கியமில்லை.. ஹீரோதான் முக்கியம்.. ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்றுதான் சொல்வேன்..

இந்தப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, திரைப்பட நிர்வாகம் மற்றும் உருவாக்கம் தொடர்பான ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரை உருவாக்கினோம். ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்தது.

இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டோம். மேலும், இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்க இருக்கிறோம்..

முதலில் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் இந்தப்படத்தை உருவாக்கி வந்தோம்.. ஆனால் இந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு ; J கல்யாண்

இசை ; கவின்-ஆதித்யா

படத்தொகுப்பு S.மணிக்குமரன்

இயக்கம் ; V

தயாரிப்பு ; ஹனி பிரேம் ஒர்க்ஸ்

Hero V Vijay speech at Vishamakaran Teaser and audio launch

சிம்பு பிறந்த நாளில் புதிய படம்.; தயாரிப்பாளர் சங்கத்திற்காக STR அதிரடி முடிவு.!

சிம்பு பிறந்த நாளில் புதிய படம்.; தயாரிப்பாளர் சங்கத்திற்காக STR அதிரடி முடிவு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு (நாளை பிப்ரவரி 3ஆம் தேதி) மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் சிம்புவின் அடுத்த படமான ‘பத்து தல’ படக்குழு பிப்ரவரி 3 நள்ளிரவு 12.06 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாம்.

இந்த நிலையில் டிஆரின் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக சிலம்பரசன் TR புதிய படம் ஒன்றை நடித்து கொடுக்கவுள்ளார்.

இப்படத்தை ‘லிங்கா’ புகழ் பிரபல விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிக்க ஞானகிரி என்பவர் இயக்குகிறார்.

சிம்பு & அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தில் வசனகர்த்தாவாக பணி புரிந்துள்ளார் ஞானகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் லாபம் சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

STR new film kickstarts on his birthday

தெலுங்கு ரீமேக்கில் சந்தானத்தை இயக்கும் ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குநர்

தெலுங்கு ரீமேக்கில் சந்தானத்தை இயக்கும் ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானத்தின் சமீபத்திய படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.

அவரது கைவசம் தற்போது பாரிஸ் ஜெயராஜ், மன்னவன் வந்தானடி, சபாபதி உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இந்த நிலையில், 2019ல் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் சந்தானம்.

அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குனர் மனோஜ் பீதா இயக்குகிறார்.

Santhanam’s next with Vanjagar Ulagam director

vanjagar ulagam director

More Articles
Follows