அக்டோபர் 3 முதல் ‘பிக்பாஸ் 5’.; காதல் மன்னனின் வாரிசு பங்கேற்பு..?

அக்டோபர் 3 முதல் ‘பிக்பாஸ் 5’.; காதல் மன்னனின் வாரிசு பங்கேற்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சேனல்களில் விதவிதமாக எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி மவுசு உள்ளது.

இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காவிட்டாலும் கூட அது பற்றி சில பேசிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அனைவரின் மனம் கவர்ந்து விட்டார் கமல்.

4 சீசன்களை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த கமல் தற்போது ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, வருகிற (காந்தி ஜெயந்தி தினத்திற்கு அடுத்த நாள்) அக்டோபர் 3 ஆம் தேதி ஒளிப்பரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யார்? பங்கேற்பார்கள்? என சமூக வலைத்தளங்களில் விவாத மேடையே நடந்து வருகிறது.

இன்னும் உறுதியான தகவல்கள் வராத நிலையில் ஷகிலாவின் மகள் மிளா, சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள் என தெரிகிறது.

இவர்களுடன் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் என்பவரும் இதில் கலந்துக் கொள்கிறார் என கூறப்படுகிறது.

இவர் சென்னை 28, பரமபத விளையாட்டு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

முக்கியமாக கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படமான ராமானுஜர் என்ற படத்தில் அறிமுகமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gemini Ganesan’s grandson Abinay to enter Bigg Boss house

சசிகுமார் – நிக்கிகல்ராணி இணைந்த ‘ராஜவம்சம்’ ரிலீஸ் அப்டேட்

சசிகுமார் – நிக்கிகல்ராணி இணைந்த ‘ராஜவம்சம்’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகி பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான படம் ‘ராஜவம்சம்’.

இதில் சசிகுமார், நிக்கி கல்ராணி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிகப்பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் சுமார் 49 நடிகர், நடிகைகளுடன் இந்த படம் உருவாகியுள்ளதாம்.

இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் வரும் அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

Sasi Kumar – Nikki Galrani in Raja Vamsam release date announced

சாதனையாளருடன் சந்திப்பு : உலகையே பைக்கில் சுற்றி வர அஜித் போடும் ப்ளான்

சாதனையாளருடன் சந்திப்பு : உலகையே பைக்கில் சுற்றி வர அஜித் போடும் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து தனது பைக் பயணத்தைத் தொடங்கியவர் மரால்.

இவர் ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களுக்கு அவர் தன் பைக்கிலேயே பயணப்பட்டார்.

தொடர்ந்து 1 1/2 ஆண்டுகள் பயணம் செய்து இப்பயணத்தின் மூலம் புதிய சாதனையையும் மரால் படைத்தார்.

தற்போது ஈரானியப் பெண்களுக்கு பைக் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மரால் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பைக்கில் தனியாகப் பயணம் மேற்கொண்ட இரானைச் சேர்ந்த மரால் யஸார்லூவை நடிகர் அஜித் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா..

“மரால் யஸார்லூவுடன் பைக்கில் உலகம் முழுவதும் மரால் தனியாகப் பயணப்பட்டிருக்கிறார்.

7 கண்டங்கள், 54 நாடுகளுக்கு அவர் சென்று வந்திருக்கிறார். மராலின் அனுபவங்களைக் கேட்டறிந்து, எதிர்காலத்தில் உலகம் முழுவதும் தான் மேற்கொள்ளவிருக்கும் பைக் பயணத்துக்கான யோசனைகளையும் பெற அஜித் குமார் டெல்லியில் மராலைச் சந்தித்து உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

Ajith plans a motor cycle world tour

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’ சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘எஸ்-3’ (சி-3) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹரி.

‘சிங்கம் 3’ படத்தின் வெற்றியை பாராட்டி ஹரிக்கு ஒரு காஸ்ட்லி காரையும் பரிசளித்தார் சூர்யா.

இதனையடுத்து இவர்கள் கூட்டணி ‘அருவா’ படம் மூலம் 6வது முறையாக இணைகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சூர்யா கதையில் சொன்ன மாற்றத்தாலும் அதனை ஹரி ஏற்க மறுத்து விட்டதாலும் ‘அருவா’ திடீரென டிராப் ஆனது.

அந்த சமயத்தில் தான் சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் ‘சூர்ரைப்போற்று’ படங்கள் ஓடிடியில் ரிலீஸ் என சூர்யா அறிவித்தார்.

“தியேட்டர்களில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்” என மறைமுக கண்டன அறிக்கை வெளியிட்டார் ஹரி.

இதனால் சூர்யா & ஹரி மோதல் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார் சூர்யா.

இதன் பின்னர் ஹரி தனது மச்சான் அருண் விஜய் நடிக்க ‘யானை’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வரும் 2021 கிறிஸ்மஸ் நாளில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.

எனவே தான் இயக்கிய ‘யானை’ படத்தை சூர்யா படத்துடன் மோத திட்டமிட்டு வருகிறாராம் ஹரி.

‘யானை’ படத்தின் கதை சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்..

Arun Vijay and Suriya films to clash on christmas day ?

‘விக்ரம்’ அப்டேட் : 2022 பொங்கலை குறி வைக்கும் உலகநாயகன்

‘விக்ரம்’ அப்டேட் : 2022 பொங்கலை குறி வைக்கும் உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், நரேன், ஷிவானி முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஓரிரு தினங்களுக்கு முன் தொடங்கியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

2022 பொங்கலுக்கு விக்ரம் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி் வருகிறதாம்.

Kamal’s Vikram is set to release for next year pongal

சிவகார்த்திகேயன் அழைப்புக்காக காத்திருக்கும் சந்தானம் அணி மாறன்

சிவகார்த்திகேயன் அழைப்புக்காக காத்திருக்கும் சந்தானம் அணி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் மாறன்.

சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் பைத்தியமாக நடித்திருந்தார்.

‘இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல..’ என்ற வசனம் இவரை தற்போது இன்னும் பிரபலமாக்கியுள்ளது.

இந்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாறன் கூறியுள்ளதாவது…

‘நான் பல வருடங்களாக சந்தானம் டீமுடன் இருக்கிறேன்.

அதனால் சிவகார்த்திகேயன் அவருடைய படங்களில் நடிக்க அழைக்க மாட்டார்.

விவேக்குடன் பல படங்களில் நடித்த செல் முருகன் மற்ற நடிகர்கள் படத்தில் (விவேக் அல்லாத படங்களில்) நடிக்க மாட்டார்.

ஆனால் நான் அப்படியில்லை. என்னை சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் நடிக்க அழைத்தால் நடிப்பேன்” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Dikkiloona fame Maaran talks about working with Sivakarthikeyan

More Articles
Follows