தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் ஆக்சன் கிங் என பெயர் எடுத்தவர் நடிகர் அர்ஜுன்.
இதன் பின்னர் ஜெய்ஹிந்த், சேவகன், ஏழுமலை உள்ளிட்ட சில ஹிட் இயக்கி அதில் இவரே நடித்தார்.
அண்மையில் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக்கி சொல்லிவிடவா என்ற படத்தை இயக்கினார். ஆனால் அதை பற்றி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எடுப்படவில்லை.
தற்போது வில்லனாகவும் நடித்து வருகிறார்.
அஜித்துடன் மங்காத்தா, விஷாலுடன் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுடன் ஹீரோ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கேரக்டரில் தோன்றியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் டைரக்சனில் இறங்கவுள்ளாராம் அர்ஜுன்.
நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறாராம்.
படம் முடிவானதும் இதுபற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Arjun directs Naga Chaitanya’s next