ஆலுமா டோலுமா பாணியில் ரஜினிக்கு ட்யூன் போட்ட அனிருத்

ஆலுமா டோலுமா பாணியில் ரஜினிக்கு ட்யூன் போட்ட அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh composed music for Rajini in Aaluma Doluma styleசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் பிரபல இயக்குனர் மகேந்திரன், சசிகுமார், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை செம குத்து பாடலாக ட்யூன் போட்டுள்ளாராம் அனிருத்.

இந்த பாடல் அஜித்தின் வேதாளம் படப்பாடலான ஆலுமா டோலுமா பாடல் பாணியில் இருக்கும் என பேட்ட படத்தில் பங்கு பெற்ற ஒரு நடிகர் கூறியுள்ளார்.

Anirudh composed music for Rajini in Aaluma Doluma style

முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால ஈசியா இருந்துச்சி…; *பரியேறும் பெருமாள்* எடிட்டர் செல்வா

முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால ஈசியா இருந்துச்சி…; *பரியேறும் பெருமாள்* எடிட்டர் செல்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Editor Selva interview about Pariyerum Perumal Successஇயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.

கதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக பரியேறும் பெருமாள் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர். இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.

இவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே -வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை பரியேறும் பெருமாள் திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

அடிப்படையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவரான செல்வா, பிரபல படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல் இடம் ” மங்காத்தா” உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

பிறகு பா.இரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படத்தில் அசோசியேட் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார்.
பின்னர் ஜெயம் ரவி நடித்த “அப்பாடக்கர்” படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் “ராஜா மந்திரி”, காலக்கூத்து ” கத்திச் சண்ட”, “இவன் தந்திரன்” படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இப்படி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரை “பரியேறும் பெருமாள்” ஜெட் வேகத்தில் பறக்கச் செய்திருக்கிறது.

இந்த உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு, ” நீலம் புரடொக்சன்ஸ்” முதல் படம் பண்ண போறோம், இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு.. அப்படின்னு சொன்னார்.

இயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.

இயக்குனர் மாரி செல்வராஜிடம் பேசிய பிறகு இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன் அதனால் எளிதாக ஆர்வத்துடன் வேலைசெய்ய ஆரம்பித்தோம்.

அதனால விசுவலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது.

இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது.

இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்” என்கிறார் படபடவென்று…

Editor Selva interview about Pariyerum Perumal Success

நோட்டா தோல்வி. விமர்சனங்களை ஏற்ற விஜய் தேவரகொண்டா விளக்கம்

நோட்டா தோல்வி. விமர்சனங்களை ஏற்ற விஜய் தேவரகொண்டா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nota posterதெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த வாரம் வெளியான படம் நோட்டா.

ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

நோட்டா என்ற அரசியல் ஆயுதம் இருந்ததால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் படு தோல்வியை தழுவியது.

இந்த விமர்சனங்களை பார்த்த விஜய் தேவரகொண்டா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

‘நோட்டா’ படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு நன்றி.

நோட்டா படத்தில் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். பட விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்தடுத்த படங்களில் அந்த குறைகளை சரி செய்வேன்.” என பதிவிட்டுள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜப்பானில் நடைபெற்ற இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth fans celebration at India Mela 2018 event at Japanசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியாவைப் போல் ஜப்பான் நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர்.

அங்கு அவர்கள் ரஜினி பட ரிலீசை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் அங்குள்ள கோபே என்ற நகரத்தில் சில தினங்ளுக்கு முன் (அக். 6,7,8) ஆகிய நாட்களில் இந்திய மேளா 2018 நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர்.

அங்கு ரஜினிகாந்த் பாடல்களைப் பாடி நடனமாடி விழாவை சிறப்பித்தார்கள்.

அங்கு ரஜினிகாந்த் போஸ்டர்கள் கொண்ட ஸ்டால் ஒன்றையும் வடிவமைத்திருந்தனர்.

மேலும் அதிலிருந்து வசூலாகும் தொகையை ஜப்பானில் தமிழ் பட திரையிடல் மற்றும் தமிழர்களுடன் பரிமாற்ற நிகழ்வுகள் ஆகியவற்றிற்கான ஒரு நிதியாக அதைப் பயன்படுத்தப் போவதாக அந்த மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.

Rajinikanth fans celebration at India Mela 2018 event at Japan

rajini fans petta japan

*ஆண் தேவதை* பட ரிலீசுக்கு சிக்கல்; தடைகளை தாண்டி வெளியானது

*ஆண் தேவதை* பட ரிலீசுக்கு சிக்கல்; தடைகளை தாண்டி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani and Ramya Pandiyan starrer Aan Devathai released todayரெட்டச்சுழி பட இயக்குனர் தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ள படம் ஆண் தேவதை.

இதில் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, சுஜா வருணி, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமத்துள்ளார்.

அகமது பக்ருதீன் என்பவர் தயாரித்துள்ளார்.

இப்படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு 3 முறை தள்ளிப் போன நிலையில் இன்று வெளியாகும் என அறிவிக்கபட்டது.

அதிலும் ஆண் தேவதை ரிலீசுக்கு கடைசி நேர சிக்கல் ஏற்பட்டது.

படத்துக்கு தடைவிதிக்க கோரி நிஜாம் முகைதீன் என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் “ஆண் தேவதை படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் என்னிடம் 37 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

இதில் 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள 22 லட்சத்தை படம் வெளியிடுவதற்கு முன்பு தந்து விடுவதாக சொல்லியிருந்தார்.

ஆனால் எனக்கு பணத்தை தராமலேயே படத்தை வெளியிடுகிறார்.

அதனால் எனக்கு பணத்தை தரும் வரையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது.

அதன்படி தயாரிப்பாளர் தனது விளக்கத்தை அளித்ததை தொடர்ந்தும் இருதரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது.

எனவே தற்போது படம் வெளியாகி மக்கள் ஆதரவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Samuthirakani and Ramya Pandiyan starrer Aan Devathai released today

*எழுமின்* படம் பார்க்க பள்ளிகளில் டோக்கன்; டிக்கெட்டில் டிஸ்கவுண்ட்!

*எழுமின்* படம் பார்க்க பள்ளிகளில் டோக்கன்; டிக்கெட்டில் டிஸ்கவுண்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ezhumin Producer giving Token and Discount for Students to watch movieஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’.

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள்.

அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ்.

இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது.

அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்.

இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான்.

அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.

18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம்.

இப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.

அதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம்.

அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.

மேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள்.

மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.

Ezhumin Producer giving Token and Discount for Students to watch movie

Ezhumin movie team

More Articles
Follows