பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் !

பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paul in web series2020 நடிகை அமலா பாலுக்கு புது வெளிச்சம் பாயும் வருடமாக தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் பாரம்பரிய அழகும் மிளிரும் குடும்ப பெண்ணாக “ராட்சசன்” படத்திலும், அனைவரையும் மிரளச்செய்த, துணிவான நடிப்பில் “ஆடை” படத்திலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அமலா பால். பாடலுக்கு ஹீரோவுடன் நடனமாடும் துடுக்கு பெண்ணாக அல்லாமல், ஒவ்வொரு படங்களிலும் எவரும் ஏற்க தயங்கும் கதாப்பத்திரங்களில், அதிரடி காட்டி, அற்புத நடிப்பை வெளிப்படுத்தி, இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்திருக்கிறார் அமலாபாலுக்கு இந்த 2020 வருடத்தில் எதிர்பார்ப்பு மிக்க பல புதுமையான படங்கள் வரிசையில் இருக்கிறது.

ஹீரோஸ் கூட ஜோடி போட நிறைய நடிகைகள் இருக்காங்க. – அமலா பால்

அவரது நடிப்பில் “அதோ அந்த பறவை போல” படம் எதிர்பார்ப்பு மிக்க படைப்பாக, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவரது மகுடத்தில் இன்னொரு மயிலறாக, அவரது திறமைக்கு அடையாளமாக, தற்போது அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட் ஆளுமை தயாரிப்பாளர், இயக்குநர் மகேஷ் பட் உருவாக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகி வேடமேற்கிறார் நடிகை அமலா பால்.

இது குறித்து அமலா பால் கூறியதாவது…

சில ஆச்சர்யங்கள் அறிவிப்பின்றி வாழ்க்கையில் வந்துவிடும். அப்படியானது தான் இயக்குநர் மகேஷ் பட்டிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு. அவருடன் வேலை செய்வது தென்னிந்திய நாயகிகள் அனைவருக்கும் ஒரு கனவு. அவர் திரையில் உருவாக்கும் பெண் கதாப்பாத்திரங்கள் வலுவனாது, உணர்வுப்பூர்வமானது. காலத்தால் அழியாத நிலைத்து நிற்கும் படைப்புகளை தருபவர் அவர். அவரது பட்டறையில் கற்றுக்கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் இத்தொடரின் இயக்குநர் புஷ்ப்தீப் மிகத் திறமையானவர். மிகச்சிறந்த தொலை நோக்கு பார்வை கொண்டவர். திரையில் என்ன வர வேண்டும், அதை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதில் மிகத்தெளிவானவராக உள்ளார். அவரது திரைக்கதையை படித்த பிறகு இந்த தொடர் ஒரு அற்புதமான படைப்பாக வரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால்

இன்னும் பெயரிடப்படாத இந்த இணையத்தொடர் 1970 களில் வெற்றிக்கு போராடும் இயக்குநருக்கும், பிரபலமாக இருக்கும் நடிக்கைக்கும் இடையே உள்ள உறவை சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. Chhichhore ஹிந்தி திரைப்படத்தில் அட்டகாச நடிப்பின் மூலம் மகேஷ் பட்டின் மனம் கவர்ந்த நடிகர் தாஹிர் இத்தொடரில் இயக்குநராக நடிக்கிறார். அமலா பால் பிரபல நடிகையாக நடிக்கிறார். சினிமா உலகில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட ஆளுமையான மகேஷ் பட் மற்றும் மிகத் திறமை வாய்ந்த இயக்குநர் புஷ்ப்தீப் பரத்வாஜ் ஆகிய இருவரும், இந்த தொடரின் நாயகி கதாப்பாத்திரத்திற்காக, இந்தியாவின் அனைத்து பிரபல நாயகிகளையும் பரிசீலித்து பின் மிகப்பொருத்தமனாவர் என அமலா பாலை, இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர். நடிகை அமலா பாலுக்கும் இந்தக்கதாப்பாத்திரம் சவாலான ஒன்றாக அமைந்தது.

கட்டிப்பிடிக்க வந்த அமலாபாலை அவாய்ட் செய்த *ராட்சசன்* டைரக்டர்

வட இந்திய பெண்னாக நடை, உடை, பாவனை பயிற்சி எடுத்து மொழிப்பயிற்சிகளை மூன்று மாதங்கள் மேற்கொண்டு இறுதியாகவே இந்தக்கதாப்பாத்திரத்திற்கு தயாராகியுள்ளார்.

தற்போது அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்து மலையாளத்தில் “ஆடு ஜீவிதம்”, “கடாவர்” மற்றும் பாலிவுட் “கோஸ்ட் ஸ்டோரீஸ்” தெலுங்கு ரீமேக் ஆகியவை தாயாரிப்பின் பல்வேறு நிலைகளில் உள்ளன.

BREAKING – NPR அவசியம்; முஸ்லிம்களை அச்சுறுத்தினால் வாய்ஸ் கொடுப்பேன் – ரஜினி

BREAKING – NPR அவசியம்; முஸ்லிம்களை அச்சுறுத்தினால் வாய்ஸ் கொடுப்பேன் – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth press meetசற்றுமுன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பல்வேறு கேள்விகளுக்கு அப்போது பதிலளித்தார்.

அவர் பேசியதாவது…

இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை.

இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன்

இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது.

ரஜினி படத்தில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்தில் நயன்தாரா

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினி படத்தில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்தில் நயன்தாரா

ரஜினி படத்தில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்தில் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Nayantharaதர்பார் படத்தை முடித்துவிட்டு தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இப்படத்தை இயக்க இமான் இசையைமத்து வருகிறார்.

இதில் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்க முக்கிய வேடத்தில் நயன்தாராவும் நடிக்கிறார்.

தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு

இந்நிலையில் இப்படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்வள் வந்துள்ளன.

இது உறுதியானால் அவர் முதல்முறையாக இந்த வேடத்தை ஏற்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் கமல், ரஜினி இணைந்து செயல்பட சுஹாசினி விருப்பம்

அரசியலில் கமல், ரஜினி இணைந்து செயல்பட சுஹாசினி விருப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Suhasiniநாம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஓவிய புகைப்பட காலண்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சுகாசினி, சமந்தா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; ரஜினிக்கு சம்மன்!

இதில் கலந்துக் கொண்ட சுஹாசினியினிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் அரசியலில் ரஜினி, கமல் இருவரும் ஒரே பாதையில் சென்றால் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்தார்.

‘பப்ஜி’ படத்திற்காக ஐஸ்வர்யா தத்தாவை நிர்வாணமாக்கிய விஜய் ஸ்ரீ

‘பப்ஜி’ படத்திற்காக ஐஸ்வர்யா தத்தாவை நிர்வாணமாக்கிய விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya dutta nude in pubgசாருஹாசன், ஜனகராஜ், ஆனந்த், ஸ்ரீ பல்லவி உள்ளிட்டோர் நடித்த தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி.

இதில் ஒரு திருநங்கையின் காதலை மையப்படுத்தியும் ஒரு வயதான தாதா கேரக்டரையும் மையப்படுத்தியும் இருந்தார்.

தற்போது இவரின் 2வது படமாக ‘பீட்ரூ’ என்ற படம் உருவாகி வருகிறது.

இதில் அம்சவர்தன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இத்துடன் தனது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ ஜி.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு BIG LOSS தந்த BIGG BOSS

இப்படத்திற்கு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’(PUBG) என்று டைட்டில் வைத்துள்ளார்.

இதில் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா தத்தா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனிதா, ரித்திகா சரண் என பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாண கோலத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவரும் யூகிக்க முடியாத அளவில் இந்த கதையினை உருவாக்கியிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ ஜி.

தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு

தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Bharathi rajaலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் தர்பார்.

இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன் பின்னர் வசூல் குறித்த எந்த அறிவிப்பை வெளியிட வில்லை.

தர்பார் நஷ்டம்: விநியோகஸ்தர்களுக்கு உதவ தயாரான தமிழக அரசு

இந்த நிலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களில் தர்பாஷ் நஷ்டம் என சில விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக ரஜினியை சந்திக்க முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் மரியாதை நிமித்தம் காரணமாக பாரதிராஜாவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு பற்றி… தர்பார் திரைப்படத்தை வெளியிட்டோருக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கு அவர்களின் பேராசையே காரணம் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

More Articles
Follows