தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபத்தில் இயக்குனர் விஜய்க்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘கோல்டன் விசா’ வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் அருண் விஜய்க்கு ‘கோல்டன்’ விசாவை வழங்கியுள்ளது.
கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.
கோல்டன் விசாவைப் பெற்ற படங்களை தனது ட்விட்டர் பகிர்ந்து கொண்ட அருண் விஜய், “இந்த கௌரவத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு நன்றி” என கூறி இருந்தார்.
மேலும், பார்த்தீபன், நாசர், ரஹ்மான்,வெங்கட் பிரபு, கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா, ராய் லட்சுமி, விக்ரம் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.
Actor Arun Vijay has got Golden Visa from United Arab Emirates