தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் விஜய் இயக்கிய ‘தலைவா’ மற்றும் ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக அமலா பால் நடித்திருந்தார்.
அப்போதே விஜய் – அமலாபால் இருவரும் நெருக்கமாகி காதலித்து திருமணம் 2016ல் செய்து கொண்டனர்.
ஆனால் திருமணமாகி சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர்.
அமலா பாலுடன் நடிகர் தனுஷ் நெருக்கம் காட்டியதால் இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.
பின்னர் சில வருடங்களில் இயக்குனர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு தனது 2வது திருமணத்திற்கு அமலா பால் தயாராகி உள்ளார்.
அதன்படி அமலாபால் விரைவில் திருமணம் செய்துக் கொள்கிறார். இதை நடிகையின் காதலரான ஜெகத் தேசாய் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
அதில்.. அமலாவுக்கு ஜகத் ப்ரோபோஸ் செய்யும் வீடியோவை பகிர்ந்து அமலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜகதத்தின் ப்ரோபோஸ்லை ஏற்றுக் கொண்ட நடிகை அமலா, வீடியோவில் அவருக்கு முத்தம் கொடுத்தும் உள்ளார்.
ஜகத்தின் பதிவில் திருமண மணிகள் என்ற ஹேஷ் டேக்கு உள்ளது.
இன்று அக்டோபர் 26 ஆம் தேதி நடிகை அமலாபால் தன் பிறந்த நாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Amala Paul confirmed her 2nd marriage on her Birthday