BANK Characters : அதிரவைக்கும் அனித்ரா லுக்.; கேரக்டர் டிசைனை வெளியிட்ட விஜய்ஸ்ரீ

BANK Characters : அதிரவைக்கும் அனித்ரா லுக்.; கேரக்டர் டிசைனை வெளியிட்ட விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவர்களுக்கும் சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்ற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் ‘ஹரா’ படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீஜி.

இதனையடுத்து தசை சிதைவு நோயின் மருந்துகளை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி ‘BANK’ என்ற படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் சார்பாக ரவி ராயன் என்பவர் தயாரிக்கிறார். இவரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மனிதர் ஒருவர் ரூ 11 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் செய்தியில் படித்திருப்போம், பார்த்திருப்போம்.

BANK

இந்த தசை சிதைவு நோயை குணப்படுத்தும் ஊசியின் விலை ரூ 17.5 கோடியாகும்.

தமிழகத்திலும் இதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சமீபத்தில் பலர் உதவி செய்தனர்.

இந்திய நாட்டில் இதற்கான ஊசி கிடைப்பதில்லை. இதை அதிக விலை கொடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

தசை சிதைவுநோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவு.?ஆகிறது என்பதையும் மையமாக வைத்து விஜய் ஸ்ரீ ஜி இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

BANK

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர் நடிக்கிறார். அவரது மகளாக பேபி வேதிஷ்யா நடிக்கிறார்.

மேலும், முக்கிய கேரக்டர்களில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால், அர்ஜுன் ராஜ், அனித்ரா தந்தையாக ரயில் ரவி, விஜய் டிவி தீபா, சில்மிஷம் சிவா, வில்லனாக ரவி ராயன், ஒற்றன் துரை, பவுடர் ராமராஜன், கே.ஆர்.அர்ஜூன், ஆதித்யா டிவி புகழ் விக்கி & தர்மா, பிரபா, மது, ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

மிரட்டலான போலீஸ் வேடத்தில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். வழக்கறிஞராக ஒரு முன்னணி நடிகர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரஹத் ஒளிப்பதிவு செய்ய ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

BANK

இந்த படம் தமிழ் & மலையாளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை விஜய் ஸ்ரீ வெளியிட்டிருந்தார். அதில் நடிகை அனித்ராவின் முகத்தில் மருத்துவம் & தசை சிதைவு நோய் குறித்த பல டிசைன்கள் இருந்தன.

மேலும் இந்த படத்தில் விஜய் ஸ்ரீ அறிமுகம் செய்யும் அனித்ரா, ரவிராயன், அர்ஜுன் ராஜ், அப்ஜித்பால் ஆகியோரது கேரக்டர் போஸ்டர்களை வெளியாகியுள்ளன.

விஜய் ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ படத்தில் ஏற்கனவே அனித்ரா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BANK

Vijay Sri introduces Bank character posters

பிரபாஸின் ‘ராஜா டீலக்ஸில் இணைந்த நிதி அகர்வால்

பிரபாஸின் ‘ராஜா டீலக்ஸில் இணைந்த நிதி அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார் என்பதனை அப்படத்தின் இயக்குநரான மாருதி, ட்வீட் செய்து உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அண்மையில் புகழ்பெற்ற இயக்குநரான மாருதி, நடிகை நிதி அகர்வாலுக்கு ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என ட்வீட்டரில் தெரிவித்தார்.

மாருதியின் டிவிட் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு ‘ராஜா டீலக்ஸ்’ எனும் படத்தில் நடிகை நிதி அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கிறார் என்றும், அவர் நட்சத்திர நடிகரான பிரபாஸுடன் திரையை பகிர்ந்து கொள்கிறார் என்றும், தெரிவித்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.

அத்துடன் அவருடைய டிவிட்டில் ‘எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் உங்களை காணலாம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நிதி அகர்வால்

இதனால் மாருதி இயக்கத்தில் விரைவில் தயாராகவிருக்கும் மெகா படத்தில் நிதி அகர்வாலின் ஈடுபாட்டை இந்த ட்வீட் உறுதிப்படுத்துகிறது.

மேலும் ‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்று யூகித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.‌

இரண்டு நட்சத்திரக் கலைஞர்களும் முந்தைய திரையுலக பயணங்களில் தங்களது திறமையை நிரூபித்திருப்பதால், அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தரமான சினிமா அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது.‌

நிதி அகர்வால்

Nidhhi Agerwal as heroine in Raja Deluxe with Prabhas

விக்ரமன் மகனை அறிமுகப்படுத்தும் கே எஸ் ரவிக்குமார்.; டீசரை வெளியிட்டு விஜய்சேதுபதி வாழ்த்து

விக்ரமன் மகனை அறிமுகப்படுத்தும் கே எஸ் ரவிக்குமார்.; டீசரை வெளியிட்டு விஜய்சேதுபதி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – ‘ஹிட்லிஸ்ட்’.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்க, பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் அசோசியேட் இயக்குநர்கள் சூர்யகதிர்காக்கள்ளர் மற்றும் K.கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர்.

இதில் கௌதம் மேனன், சமுத்திரகனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதிவெங்கட், ஐஸ்வர்யாதத்தா, பாலசரவணன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநக்‌ஷத்ரா, KGF புகழ் கருடா ராமசந்திரா மற்றும் அனுபமாகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

C.சத்யா இசையமைக்கிறார், ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பு செய்கிறார். மற்றும் கலை இயக்கம் அருண்.

விஜய் சேதுபதி, டீசரை பார்த்துவிட்டு “சிறந்த ஆக்ஷன் படம்” என்று மகிழ்ந்து பாராட்டினார். தயாரிப்பாளர் இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கும், ஹிட்லிஸ்ட் படக்குழுவினருக்கும் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

அறிமுக ஹீரோ விஜய்கனிஷ்காவை பெரிதும் பாராட்டி, உங்கள் ஹிட் படங்களின் தொடக்கமாக, இந்த “ஹிட்லிஸ்ட்” திரைப்படம் இருக்கும் என்று வாழ்த்தினார்.

சிறந்த ஆக்சன், பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த, குடும்பத்தினருடன் பார்க்க கூடிய திரைப்படமான இதன் போஸ்ட்புரோடக்சன் பணிகள் மும்முரமாக நடக்கிறது. ஹிட்லிஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தெரிவிக்க இருக்கிறார்கள்.

ஹிட்லிஸ்ட்

Vijaysethupathi launches Hit List teaser

மஹானா அருகில் இருப்பதால் பசி மறந்துட்டு.; ஆர்வ கோளாறில் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

மஹானா அருகில் இருப்பதால் பசி மறந்துட்டு.; ஆர்வ கோளாறில் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா மற்றும் மஹானா இணைந்து நடித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது…

‘சமீபகாலமாக நட்பு பற்றி படம் எடுப்பது என்பதே குறைந்து வருகிறது. காரணம் நட்பே குறைந்து வருவது போல இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் நட்பை முன்னிலைப்படுத்தி படம் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த விழா சற்று தாமதமாக ஆரம்பித்ததால் பசி எடுத்தது உண்மைதான். அதே சமயம் இங்கே திரையிடப்பட்ட பாடல் காட்சிகளில் முத்தக் காட்சியை பார்த்ததும் பாதி பசி பறந்து விட்டது.

இந்த விழா மேடையில் நாயகியின் அருகில் அமர எனக்கு இடம் கிடைத்ததும் மொத்த பசியும் போய்விட்டது. இதுவரை எந்த விழாக்களிலும் கதாநாயகியின் அருகில் அமர்ந்தது இல்லை. அதனால் தான் இந்த விழாவில் பாக்யராஜ் முதலில் பேசுவதாக கூறி கிளம்பி சென்றாலும் நான் கடைசி வரை இந்த நிகழ்வில் இருக்கிறேன் என்று உட்கார்ந்து விட்டேன்” என்று கலாட்டாவாக கூறிய இயக்குனர் ஆர்மி உதயகுமார், “இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. படத்தின் நாயகி பேசும்போது இசையமைப்பாளர்களின் பெயர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறினார்.

அவர்கள் இசையமைத்த பாடல்களில் தான் நீங்கள் சினிமாவில் முகம் காட்டி பிரபலமாகிறீர்கள். நிச்சயம் அவர்களின் பெயரை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிற ஒரு சிறிய அறிவுரையையும் கொடுத்தார்.

*நடிகர்கள்*

விஜய் விஷ்வா, நலீம் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் மற்றும் பலர்

*தொழில்நுட்ப குழுவினர் விபரம்”

தயாரிப்பாளர் ; T.குமாரதாஸ்

இயக்குனர் ; கெவின் ஜோசப்

இசை ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி

படத்தொகுப்பு ; T.S.ஜெய்

ஒளிப்பதிவு ; பிரசாத் ஆறுமுகம்

சண்டைப்பயிற்சி ; மிராக்கிள் மைக்கேல்

நடனம் ; ராஜுமுருகன்

பாடகர்கள் ; அந்தோணிதாசன், ஐஸ்வர்யா, சாய்சரண்

பாடலாசிரியர்கள் ; வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி

எபெக்ட் ; ராண்டி

மிக்சிங் ; கிருஷ்ணமூர்த்தி

மக்கள் தொடர்பு ; ரியாஸ் K.அஹ்மத்

RV Udhayakumar funny speech about Kumbaari Mahana

வாய்ப்புகள் வருது.. கூடவே பயமும் வருது.: கும்பாரி விழாவில் விஜய் குமுறல்

வாய்ப்புகள் வருது.. கூடவே பயமும் வருது.: கும்பாரி விழாவில் விஜய் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா மற்றும் மஹானா இணைந்து நடித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது…

“இந்த படத்தின் தயாரிப்பாளர் எப்போது யாரிடம் பேசினாலும் சாப்பிட்டீர்களா என்று தான் முதலில் கேட்பார். அந்த அளவிற்கு எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டார்.

இந்த படத்தின் கதை கடலும் கடல் சார்ந்தும் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரொம்ப வேகமாகவே முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளர் பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆரம்பத்திலேயே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார்.

இப்போது தரைப்படை, பிளாஷ்பேக், பிரம்ம முகூர்த்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வாய்ப்புகள் நன்றாகவே கிடைக்கிறது. ஆனால் இதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமும் இருக்கிறது” என்று கூறினார்.

இன்னொரு நாயகனாக நடித்துள்ள நலீம் ஜியா பேசும்போது…

“சினிமாவில் எனக்கு இது முதல் படம். இதற்கு முன்பு மலையாளத்தில் ஆசியா நெட் சேனலில் ஒரு சீரியலில் கிட்டத்தட்ட 920 எபிசோடுகள் கதாநாயகனாக நடித்துள்ளேன்.

சினிமா எப்படி இருக்கும் என்கிற ஆர்வத்தில் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்து வந்ததைவிட இங்கே சினிமா இன்னும் பயங்கரமாக இருக்கிறது” என்று கூறினார்.

Getting chances along with fear says Vijay Viswa

யூடிப்பில் நெகட்டிவ் ரிவ்யூ.. ஆனாலும் படம் சூப்பர் ஹிட்டு – சரவண சக்தி

யூடிப்பில் நெகட்டிவ் ரிவ்யூ.. ஆனாலும் படம் சூப்பர் ஹிட்டு – சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா மற்றும் மஹானா இணைந்து நடித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது…

“இந்த படத்தில் இவ்வளவு முத்த காட்சிகள் இருந்தும் எப்படி யு சான்றிதழ் கொடுத்தார்கள் என அருகில் இருந்த நண்பர் கேட்டார். முத்தக்காட்சிகளை தற்போது ‘யு’வில் சேர்த்து விட்டார்கள் போல என்று நான் கூறினேன்.

இது போன்ற சின்ன படங்களுக்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும். சமீபத்தில் வெளியான ஒரு பெரிய படத்திற்கு சில யூடியூப் சேனல்களில் எதிர்மறை விமர்சனம் அளித்துள்ளார்கள். ஆனால் படம் நன்றாக ஓடுகிறது” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் T.குமாரதாஸ் பேசும்போது…

‘நட்பு சம்பந்தப்பட்ட படம் இது. காதல், காமெடி, இசை என எல்லாமே நன்றாக வந்துள்ளது. சின்ன படம் என ஒதுக்கி வைக்காதீர்கள். சின்ன படங்கள் மூலம்தான் பெரிய ஆட்கள் உருவாகியுள்ளனர். அன்று ஒரு சின்ன படத்தில் நடித்த சிவாஜிராவ் தான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியுள்ளார்” என்று கூறினார்.

Though movie super hit still negative reviews coming says Saravana Sakthi

More Articles
Follows