தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வீரம் படம் வெற்றிப் பெற்றதை அடுத்து மீண்டும் சிவா இயக்கிய வேதாளம் படத்தில் நடித்தார் அஜித்.
இந்தப்படமும் சூப்பர் ஹிட்டடிக்க விவேகம் படத்தில் இந்தக் கூட்டணி இணைந்தது.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான விவேகம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அவரும் இதை ஒரு பேட்டியில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதாவது இம்முறை சரித்திர கால கதையில் இந்த கூட்டணி இணைகிறதாம்.
Ajith teams up with Siva for 4th time for Historical subject movie