தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடிப்பில் விவேகம் படம் வெளியானது.
இப்படத்தின் டீசர் கடந்த மே மாதம் 10-ம் தேதி இணையத்தில் வெளியானது. வெளியானது முதலே இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.
தற்போது 5,73,000 லைக்ஸ் பெற்று உலகளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்ற சாதனையை இது நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பு ‘ஸ்டார்வார்ஸ் – தி லாஸ்ட் ஜெடி’ என்ற ஹாலிவுட் படத்தின் டீஸர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதனை கடந்துள்ளது ‘விவேகம்’ படத்தின் டீஸர்.
அஜித்தின் இந்த அகில உலக சாதனையை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #VivegamTeaserAllSetToNewWR மற்றும் #VIVEGAMTeaserSetsWorldRecord ஆகிய ஹெஷ்டேக்குகளில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Ajith movie Vivegam teaser set new world record