Breaking : 2018ல் விஸ்வாசம் ரிலீஸ் இல்லை; தல ரசிகர்கள் அதிர்ச்சி!

Breaking : 2018ல் விஸ்வாசம் ரிலீஸ் இல்லை; தல ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajiths viswasamவீரம், வேதாளம், விவேகம் என்று மூன்று படங்களில் பணிபுரிந்துள்ளனர் சிவா அஜித் கூட்டணி.

தற்போது 4வது முறையாக விசுவாசம் படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இந்நிலையில்
தம்பிராமையா மகன் நடித்த மணியார் குடும்பம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார் சிவா.

அப்போது விஸ்வாசம்
படத்தை 2019 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முயற்சித்து வருவதாக சிவா கூறியுள்ளார்.

இது தல அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது.

நீங்க தப்பு செஞ்சிட்டு எங்க வரிப்பணத்துல நஷ்ட ஈடு கொடுப்பீங்களா? எடப்பாடிக்கு பிடி செல்வகுமார் கேள்வி

நீங்க தப்பு செஞ்சிட்டு எங்க வரிப்பணத்துல நஷ்ட ஈடு கொடுப்பீங்களா? எடப்பாடிக்கு பிடி செல்வகுமார் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer PT Selvakumar speech about CM and Tuticorin Sterlite issueசீயோன் என்பவர் இயக்கியிருக்கும் படம் பொது நலன் கருதி.

கந்து வட்டி கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை புரொடக்ஷன்ஸ் சார்பாக அன்புவேல்ராஜன் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு விஜய் ஆனந்த்.

இந்த படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண்ஆதித் இவர்கள் கதையின் நாயகன்களாக நடிக்க சுபிக்ஷா, அனுசித்தாரா, லிசா இவர்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக் ஜாப்பி, வழக்கு எண் முத்துராமன், சுப்ரமணியபுரம் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை ஹரிகணேஷ், ஒளிப்பதிவு சுவாமிநாதன், கலை கோவி ஆனந்த் செய்துள்னர்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பிடி செல்வகுமார் பேசியதாவது…

இதுநாள் வரை நான் அகிம்சை வழியிலே சென்றேன். ஆனால் இப்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் கோபமாக வருகிறது.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தப்பு செஞ்சது யாரு? அந்த ஸ்டைர்லைட் பேக்டரி ஓனர், மாவட்ட கலெக்டர், முதல்வர் இவர்கள்தான்.

ஆனால் போராட்டக்காரர்களை குற்றவாளியாக்கி விட்டார்கள். உயிரிழந்தவர்களுக்கு உதவித் தொகை கொடுத்தது தப்பில்லை. அதற்கு ஒரு கோடி கூட கொடுக்கலாம்.

ஆனால் உங்க பணத்தை கொடுங்க. நீங்க தப்பு பண்ணிட்டு எங்க வரிப்பணத்துல உதவித் தொகையை கொடுப்பீங்களா? இதெல்லாம் யார் கேட்கிறது.? நாமதான் கேட்கனும்.

இனிமேலும் சுயநலம் பார்த்துட்டு வாழ முடியாது. ஏதாவது செய்யனும். இனிமே உயிர் போனா என்ன? இருந்தா என்ன-

பொது நலன் கருதனும். அதுதான் இதுபோன்ற பொது நலன் கருதி உள்ளிட்ட நல்ல படங்களை வெளியிடுகிறேன். என ஆவேசமாக பேசினார் பிடி. செல்வகுமார்.

இவர்தான் விஜய் நடித்த புலி படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Producer PT Selvakumar speech about CM and Tuticorin Sterlite issue

pothu nalan karuthi

மிரட்டல் வந்தாலும் *பொது நலன் கருதி* படம் இயக்கியுள்ள சீயோன்

மிரட்டல் வந்தாலும் *பொது நலன் கருதி* படம் இயக்கியுள்ள சீயோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Debut Director Zions Pothu Nalan Karuthi movie based on Loan Interestபணக்கார வர்க்கத்துக்கும், ஏழை, நடுத்தர வர்க்கத்துக்கும் நடக்கும் பிரச்சனைகளே பொது நலன் கருதி திரைப்படம்.

சூழ்நிலை கைதிகளாய் மாறி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் இளைஞர்களின் கதை இது.

இல்லாதவனே பொல்லாதவனாம் ஊரினிலே என்பது போல சகல துறைகளிலும் பந்தாடப்படும் நடுத்தர வர்க்கம்.

எதையாவது செய்து முன்னுக்கு வர முடியாதா, என துடிக்கும் இளைஞர்கள்? எதையும் செய்ய துணியும் ஆக்டோபஸ் பண முதலைகள்? இவர்களிடம் சிக்கி வாழ்வை சின்னாபின்னமாக்கும் நடுத்தர வர்க்கம்.

பணம் படைத்த பலரும் பணமற்றவர்களிடம் செலுத்தும் அதிகாரமே கந்துவட்டி.

இந்த கந்துவட்டியால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. பல குடும்பங்கள் திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை தற்கொலை சம்பவம்

சமீபத்தில் பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து – சுப்புலட்சுமி மற்றும் குடும்பத்தினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிஜ சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய செய்தது.
இப்படி சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றன.

இதன் பின்னணியில் உள்ள நிழல் தாதாக்களின் கதையே பொது நலன் கருதி திரைப்படம். இந்தப் படம் வெளிவரும் போது எனக்கு பல அச்சுறுத்தல்கள் வரும். ஆனாலும் உண்மையை சொல்ல பயப்பட தேவையில்லை என்பதால் துணிச்சலுடன் இப்படத்தை எடுத்துள்ளேன் என்கிறார் படத்தின் இயக்குநர் சீயோன்.

இந்த படத்தில்  கருணாகரன், சந்தோஷ், அருண்ஆதித் இவர்கள் கதையின் நாயகன்களாக நடிக்க சுபிக்ஷா, அனுசித்தாரா, லிசா இவர்கள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

படத்தின் திருப்புமுனை கதாபாத்திரங்களாக இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக் ஜாப்பி, வழக்கு எண் முத்துராமன், சுப்ரமணியபுரம் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை ஹரிகணேஷ், ஒளிப்பதிவு சுவாமிநாதன், கலை கோவி ஆனந்த், எழுத்து, இயக்கம் சீயோன்.

Debut Director Zions Pothu Nalan Karuthi movie based on Loan Interest

pothu nalan karuthi

உடல் உறுப்புகளை கடத்தும் கும்பல் பற்றிய படம் *துரியோதனா*

உடல் உறுப்புகளை கடத்தும் கும்பல் பற்றிய படம் *துரியோதனா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thuriyodhana movie news updatesதிரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரு மாஸ் இருக்கும்.

அந்த வகையில் புதியவர்களின் முயற்சியாக “துரியோதனா” என்ற படம் உருவாகியுள்ளது.

உடல் உறுப்புகளை கடத்தும் கும்பலால் ஹீரோயின் படத்தின் தொடக்க காட்சியில் கடத்தப்படுகிறார்.

அதை கண்டு பிடிக்கும் சீக்ரெட் இண்பர்மேஷன் ஆபிசர் டெல்லியில் இருந்து கேரளா வருகிறார்.

கதை தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை வந்த திரில்லர் படங்களில் இந்தப்படம் வேறு கோணத்தில் இருக்கும் என கூறுகிறார் இயக்குனர் பிரதோஷ்.

மும்பை, டெல்லி, ராமேஸ்வரம், கேரளாவின் அடர்த்தியான காடுகளில் “துரியோதனா” திரைப்படம் படமாக்கப்பட்டது.

கதாநாயகனாக பிரதோஷ், வினுராகவ் நடிக்கிறார்கள். கதாநாயகியாக ஷில்பா நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சின்னத்திரையில் கலக்கும் நவ்யாசாமி வெள்ளித்திரைக்கு வருகிறார்.

ஒளிப்பதிவு: ஹரீஷ் அப்துல்லா, மகேஷ் ராம்.

எடிட்டிங்: விமல்

வசனம்: தனசேகரன்

இசை: C.S.குமார்

பாடல்கள்: ஸ்ரீதர், பிரதோஷ்

கதை, திரைக்கதை, இயக்கம் பிரதோஷ்

தமிழகம் முழுவதும் “ஆக்ஷன் ரியாக்ஷன்” நிறுவனம் மூலம் ஜெனீஷ் வீரபாண்டியன் வெளியிடுகிறார்.

Thuriyodhana movie news updates

பிரேமம் பட ஆனந்த்நாக் நடிக்கும் *ரெடி டு சூட்*; வில்லனாக மனோஜ் பாரதிராஜா

பிரேமம் பட ஆனந்த்நாக் நடிக்கும் *ரெடி டு சூட்*; வில்லனாக மனோஜ் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Premam fame Anand Ananth Nag and Manoj Bharathiraja teams up for Ready to Shootசமீப காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது.

அது எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் “ ரெடி டு சூட்“

இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இயக்கம் – மனோஜ்குமார் இதயராஜ்

நேரம், பிரேமம், வெற்றிவேல், போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி – ஜீவிதா

வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு – சதீஷ் கதிர்வேல்
இசை – அச்சு
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – எஸ்.ஆறுமுகம்.

முழுக்க முழுக்க திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Premam fame Anand Ananth Nag and Manoj Bharathiraja teams up for Ready to Shoot

ready to shoot pooja

அருள்நிதி-பரத் நீலகண்டன் இணையும் படத்திற்கு தர்புகா சிவா இசை

அருள்நிதி-பரத் நீலகண்டன் இணையும் படத்திற்கு தர்புகா சிவா இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbuka Siva will be composing music for Arulnithis next movieஒரு இசையமைப்பாளரின் உண்மையான வெற்றி என்பது குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் மயங்குவதும், அந்த படைப்பாளியை பற்றி இணைய தளத்தில் தேடுவதும் தான்.

தற்காலத்திய சகாப்தத்தில் மிகவும் திறமையான கலைஞர்களுக்கிடையில் பெரும் போட்டி இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு கடினமான சூழ்நிலை நலவுகிறது.

ஆனால் தர்புகா சிவா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனது தனித்துவமான பண்புகளால் இசை ரசிகர்களை கவர்ந்திழுப்பதோடு, ரசிகர்களிடம் அமோக வரவேற்புகளையும் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தர்புகா சிவா தனது இசைப்பயணத்தை புதுமையான இசையாலும், ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தையும் வழங்கி வருகிறார்.

எனை நோக்கி பாயும் தோட்டாவின் மூன்று சிங்கிள் பாடல்களால் (மறுவார்த்தை, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ளார் தர்புகா சிவா.

மேலும், இன்னும் ரிலீஸாகாத ஒரு படத்தின் பாடல்கள் நீண்ட காலமாக டாப் பாடல்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பது மிகவும் சவாலான விஷயம்.

தற்போது, இந்த இசையமைப்பாளர் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க தயாராகி விட்டார்.

எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
“எங்கள் படத்தின் மதிப்பு தர்புகா சிவாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த பிறகு மேலும் அதுகரித்துள்ளது.

அவரது இசை திறமை மற்றும் இளம் இசை ரசிகர்களிடம் அவரின் பிரபலத்தன்மையை பார்த்து நாங்கள் வியப்படைந்தோம்.

அவரது இசையால் படத்தை நாங்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்” என பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஷங்கர்.

உச்சபட்ச கலைஞர்கள் பலர் இந்த படத்துக்குள் வருவது, நம்மை மிகவும் உற்சாகப்படுத்தும் விஷயங்கள் படத்தில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Darbuka Siva will be composing music for Arulnithis next movie

More Articles
Follows