ரஜினியின் ‘லால் சலாம்’-க்குப் பிறகு ‘பட்டத்து அரசன்’.; லைக்கா-வின் அடுத்த அதிரடி

ரஜினியின் ‘லால் சலாம்’-க்குப் பிறகு ‘பட்டத்து அரசன்’.; லைக்கா-வின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 5ம் தேதி ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தின் பூஜை நடைபெற்றது.

விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அன்றைய தினமே வெளியானது.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அடுத்து தனது அடுத்த படத்தை அறிவிப்பை இஅன்று நவம்பர் 10ல் வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம்.

லைகா தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது. ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஆடு பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பங்கள் பார்க்கும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டான கதையாக நிச்சயம் இது இருக்கும்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் ஸ்ரீனிவாஸ்,
எடிட்டிங்: ராஜா முகமது,
கலை இயக்கம்: ஆண்டனி,
பாடல் வரிகள்: விவேகா- மணி, அமுதவன். A, சற்குணம்,
ஆடை வடிவமைப்பு: நடராஜ்,
ஒப்பனை: சசி குமார்,
சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்,
நடனம்: பாபி ஆண்டனி- ஷெரிஃப்,
தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன்,
படங்கள்: மூர்த்தி மெளலி,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: சுப்பு நாராயணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

லைகா புரொடக்‌ஷனின் தலைமை G.K.M. தமிழ்க்குமரன் இந்தப் படத்தை மேற்பார்வை பார்க்கிறார்.

After Rajini’s ‘Lal Salaam lyca’s next movie Pattathu Arasan

நடிகர் ஜெய்யுடன் என்ன உறவு? வாணி போஜன் விளக்கம்

நடிகர் ஜெய்யுடன் என்ன உறவு? வாணி போஜன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன் கேரியரை தொடங்கியவர் வாணி போஜன். இதனையடுத்து இவருக்கு டிவி சீரியல்களில் வாய்ப்பு வரவே. அதில் முதன்மை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தெய்வமகள் சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி் இருந்தார் வாணி போஜன். சின்னத்திரையில் ரசிகர் வட்டம் பெருகவே வெள்ளித்திரையிலும் இவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சீயான் விக்ரமுடன் ‘மகான்’ படத்தில் நடித்து இருந்தார். அந்தப் படம் ஓடிடியில் வெளியான போதிலும் வாணி போஜன் காட்சிகள் ஒன்று கூட இல்லை. எனவே மிகக் கடுப்பில் இருந்தார் வாணி.

ஆனாலும் இணையதளங்களில் நீக்கப்பட்ட காட்சிகள் என்ற வீடியோ வெளியானது.

பரத்துடன் வாணி போஜன் இணைந்துள்ள ‘மிரள்’ படம் நாளை நவம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் ஜெய்யுடன் இவர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக வதந்திகள் பரவியது

இந்த நிலையில் ‘மிரள்’ புரோமோசன் நிகழ்ச்சியில்…

“நான் எந்த நடிகருடனும் உறவிலும் இல்லை. காதலும் இல்லை. தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன். என் கதைகளை நானே கேட்டு ஒப்புக்கொள்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும் ராஜாக்கள் கூட்டணி.: 23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன்

மீண்டும் ராஜாக்கள் கூட்டணி.: 23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980-90களில் “மக்கள் நாயகன்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.

கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.

இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

உடன் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் இணைநாயகர்களாக நடிக்கின்றனர்.

‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட படங்களை இயக்கிய R. ராகேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட, அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும் ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.

‘சாமானியன்’படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மணிமகுடத்தில் வைரம் சூட்டியது போல இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

எப்போதுமே ராமராஜனையும் இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணைநின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா.

இன்னும் சொல்லப்போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் மேஸ்ட்ரோ.

கரகாட்டக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, புது பாட்டு, எங்க ஒரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இசைஞானி இசையமைப்பதை விட பொருத்தமான அம்சம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இந்தப்படம் தொடர்பாக நேற்று மேஸ்ட்ரோ ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன், நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன்.

” இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குநர் R. ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது,

“’சாமானியன்’ என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன் தான்.

காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த படம் அமைந்துள்ளது.

தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.

ராமராஜனின் பல வெற்றிப்படங்களை இயக்கிய அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார். கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.. இந்த படத்தின் வெற்றியின் அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும்” என்றார்.

இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘அண்ணன்’ என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

‘சாமானியன்’ படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார்.

மக்கள் தொடர்பு A. ஜான்

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Child Artist – Great Artist : கமலஹாசனுக்கு 100.; சிலம்பரசனுக்கு 50.; கொண்டாடும் கோலிவுட்

Child Artist – Great Artist : கமலஹாசனுக்கு 100.; சிலம்பரசனுக்கு 50.; கொண்டாடும் கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமா பார்க்காத வெற்றி விழாவை கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் கொண்டாடியுள்ளனர்.

இதனால் கோலிவுட்டே கோலாகலமாக காணப்படுகிறது. 20 – 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆவது என்றால் 100 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும்.

அந்தப் படங்கள் 200+ நாட்கள் ஓடிக் கொண்டிருக்கும். எனவே வெள்ளிவிழாக்களை நிறைய காணலாம்.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் டிஜிட்டல் உலகத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகுது என்றால் 700 – 800 தியேட்டர்களில் ரீலீசாகி ஒரு வாரம் ஓடுவதே பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஓரிரு படங்கள் மட்டுமே இரண்டு வாரங்ககளை கடந்து வெற்றி படங்களாக அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அண்மை காலங்களில் கோலிவுட் பார்க்காத வெற்றியை கமல் நடித்த ‘விக்ரம்’ படம் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் கொடுத்துள்ளன.

ஓரிரு தினங்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கமல்ஹாசன் தான் நடித்த விக்ரம் படத்தில் 100வது நாள் வெற்றி விழாவை கொண்டாடினார்.

இந்தப் பட கலைஞர்களுக்கு அவார்ட் வழங்கப்பட்டது. அதுபோல நேற்று நவம்பர் 9ல் நடைபெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50 நாளை விழாவை சிலம்பரசன் சத்யம் தியேட்டரில் கொண்டாடினார்.

தன் பட கலைஞர்களுக்கு ஷீல்டுகளை வழங்கினார்.

கூடுதல் தகவல்…

இவையில்லாமல் இவர்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை உள்ளது.

கமல் மற்றும் சிம்பு இருவருமே குழந்தை பருவம் முதலே நடித்து வருகின்றனர்.

இவர்கள் பன்முக திறமை கொண்டவர்கள். பாடகர் இயக்குனர் தயாரிப்பாளர் பாடல் ஆசிரியர் நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்கள்.

சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் இவர்கள் இருவரையும் குறிப்பிட்டுச் செல்லலாம் என்று சொன்னால் அது மிகையல்ல

JUST IN சினிமா அப்டேட்.: அஜித் ரசிகர்களை மறைமுகமாக தாக்கினாரா சிம்பு.? VTK விழாவில் சலசலப்பு

JUST IN சினிமா அப்டேட்.: அஜித் ரசிகர்களை மறைமுகமாக தாக்கினாரா சிம்பு.? VTK விழாவில் சலசலப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் வெளியானது.

இந்த படம் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் இதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது மேடை ஏறி உள்ள சிம்பு பேசியதாவது…

“முக்கியமாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.. ஒவ்வொரு படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள். உங்களுக்காக.. உங்களுக்கு ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்..

அடிக்கடி அப்டேட் கேட்பதால் ஏதாவது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நல்ல படங்களை உங்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறோம்..

என் படத்திற்கு மட்டுமல்ல எந்த படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள் இதை சொல்ல சொன்னது பத்து தல இயக்குனர் தான்.

எல்லா ரசிகர்களும் ஹீரோவை கொண்டாடுவார்கள்.. ஆனால் நாங்கள்.. நான் என் ரசிகர்களை கொண்டாடுவேன்.. அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு சிம்பு பேசினார்.

வலிமை பட சூட்டிங் சமயத்தில் அஜித் ரசிகர்கள் அடிக்கடி ‘வலிமை அப்டேட்.. வலிமை அப்டேட்.. என கேட்டு டிரெண்ட் செய்து கொண்டு இருந்தனர்.

எனவே அஜித் ரசிகர்களை தாக்கி தான் சிம்பு பேசினாரா ? என விழா கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Did Simbu troll Ajith fans at VTK 50th day event

JUST IN விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் லவ் டுடே வரை.; பொற்காலம் இதான்.. – சிம்பு

JUST IN விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் லவ் டுடே வரை.; பொற்காலம் இதான்.. – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் வெளியானது.

இந்த படம் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் இதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது மேடை ஏறி உள்ள சிம்பு பேசியதாவது…

“இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது. இசையமைத்த ரகுமானுக்கு நன்றி. மல்லிப்பூ பாடல் எழுதிய தாமரைக்கும் நன்றி.

இப்போது மக்களின் ரசனை மாறி உள்ளது. அவர்கள் விதம் விதமான சினிமாக்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

இதை சினிமாவின் பொற்காலம் என்பேன். அண்மையில் வெளியான விக்ரம் பொன்னியின் செல்வன் காந்தாரா & தற்போது வெளியான லவ் டுடே என அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன.. மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்”

இவ்வாறு சிம்பு பேசினார்.

Now its Cinemas Golden Period says Simbu

More Articles
Follows