இந்தியாவின் No.1 நியூஸ் ஆப் என்று சொல்லிக் கொள்ளும் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த வெண்பா

இந்தியாவின் No.1 நியூஸ் ஆப் என்று சொல்லிக் கொள்ளும் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த வெண்பா

தங்கர் பச்சானின் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா.

தொடர்ந்து ‘கற்றது தமிழ்’ படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்து பாராட்டுகளை அள்ளியவர் இவர்.

மேலும் விஜய் உடன் சிவகாசி சூர்யாவுடன் கஜினி உள்ளிட்ட பல படங்களில் குழந்தையாக நடித்துள்ளார்

குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 10 படங்கள் வரை நடித்துள்ள வெண்பா.

தன்னுடைய டீனேஜ் வயதில் கதையின் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பள்ளிப் பருவத்திலே’, ‘மாயநதி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

அழகும் திறமையும் உள்ள தமிழ் நடிகைகள் அரிது. அதில் வெண்பா முன்னணியில் இருக்கிறார் என பத்திரிகைகள் பாராட்டி இருந்தன.

கடந்த வருடம் 2021ல் டிசம்பர் மாதம் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் கார்த்திக்கின் தங்கையாக நடித்திருந்தார்.

விரைவில் வெளியாகியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்பதால் சீரியலில் நடிக்க உள்ளதாகவும் சீரியல் என்ட்ரி அவருக்கு 2வது இன்னிங்சாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..” என தன்னை ஒரு முன்னணி ஆப் நிறுவனம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை கண்டித்து நடிகை வெண்பா தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்..

“நான் இப்போதும் சினிமாவில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு சீரியல் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நான் அதிலும் நடிக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை.

உண்மை தெரிந்துக் கொண்டு செய்தியை பதிவிடுங்கள். இது போன்ற தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என நடிகை வெண்பா பதிவிட்டுள்ளார்.

Hi @DailyhuntApp , I have not received any serial offer, have not signed any serial yet, currently acting only in films, not yet started my 2nd innings.
So don’t spread fake news without knowing the truth. Thanks

https://t.co/ZYt6Ko0n3T

கேரளாவிலும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படக்குழுவின் பிரமோஷன்

கேரளாவிலும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படக்குழுவின் பிரமோஷன்

ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இந்தப் படத்தை யாழி ஃபிலிம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தென்மா என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 31 தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் இன்று கேரளாவில் உள்ள கொச்சின் பகுதிக்கு சென்று தங்கள் பட புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘கோப்ரா’ படத்தில் என்னப்பா ஸ்பெஷல்.? சீயான் விக்ரமிடம் மகன் துருவ் கேள்வி

‘கோப்ரா’ படத்தில் என்னப்பா ஸ்பெஷல்.? சீயான் விக்ரமிடம் மகன் துருவ் கேள்வி

‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது.. “மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோப்ரா’ படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், ‘கோப்ரா’ என்ன ஸ்பெஷல்? என கேட்டேன்.

“அஜய், அஜய்யின் விஷன். கிரியேட்டிவிட்டி.. திரையில் சொல்லும் உத்தி. இந்த காலகட்டத்தில் தியேட்டரில் ஒரு படம் அதிக நாட்கள் ஓடுவது என்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் அதனை மாற்றும்.” என அப்பா சொன்னார்.

‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 31ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

செல்வராகவன் & நட்டி இணையும் ‘பகாசூரன்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மோகன்

செல்வராகவன் & நட்டி இணையும் ‘பகாசூரன்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மோகன்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் & நட்டி இணைந்துள்ள படம் ‘பகாசூரன்’.

இவர்களுடன் நாயகியாக தாராக்‌ஷி நடித்துள்ளார். மேலும் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசிலையா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க பாரூக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் செல்வராகவன் மிரட்டலாக உள்ளார். இந்த படத்தை செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ பார்ட் 2.; ஆர்யாவுக்கு சந்தானம் கொடுத்த ஆஃபர்

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ பார்ட் 2.; ஆர்யாவுக்கு சந்தானம் கொடுத்த ஆஃபர்

‘டெடி’ படத்திற்கு பிறகு சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் 2வது முறையாக ஆர்யா இணைந்துள்ள படம் ‘கேப்டன்’.

இதில் ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘கேப்டன்’ தலைப்பை தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரிடமிருந்து பெற்றுள்ளனர்.

இப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

வரும் செப்டம்பர் 8-ல் ரிலீசாகிறது.

இந்த நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

“எனக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதைகள் வருகின்றன. ஒருவேளை பாஸ் என்ற பாஸ்கரன் படம் பார்ட் 2 எடுத்தால் அதில் ஆர்யாவுடன் நடிப்பேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பர்” என்றார்.

சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.; பொய் சொன்ன ஊடகத்திற்கு வெண்பா நெத்தியடி பதில்

சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.; பொய் சொன்ன ஊடகத்திற்கு வெண்பா நெத்தியடி பதில்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா.

இவர் சிறுமியாக இருந்தபோது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.. கற்றது தமிழ்.. சிவகாசி.. கஜினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

குமரியாக வளர்ந்த பின்னர் பள்ளி பருவத்திலே காதல் கசக்குதையா மாய நதி ஆனந்தம் விளையாடு வீடு உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில்.. இவர் டிவி சீரியலில் நடிக்க உள்ளார் என ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டது. “நான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இது போன்ற பொய் செய்திகளை போட வேண்டாம்” என எச்சரித்துள்ளார் நடிகை வெண்பா.

More Articles
Follows