சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் பெருமையா? சூப்பர் ஆக்டர் செம..; பார்வதி ஓபன் டாக்

சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் பெருமையா? சூப்பர் ஆக்டர் செம..; பார்வதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரபலமான நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ படத்தில் நடித்து பிரபலமானவர்.

மேலும் ‘மரியான்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இவரின் சமீபத்தில் பேட்டியில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து இவர் பேசியுள்ளதாவது.

‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் யாருக்கும் எதையும் கொடுக்காது. அதில் என்ன பெருமை. அதனால் என்ன லாபம்?. அந்தப் பட்டம் இமேஜைக் கொடுக்கிறதா என தெரியவில்லை.

சூப்பர் ஸ்டார் என்பதைவிட என்னை சூப்பர் ஆக்டர் என்று சொன்னால் நான் மகிழ்ச்சி. மலையாளத்தில் ஃபகத் ஃபாசில், ஆசிப் அலி, ரீமா கல்லிங்கல் ஆகியோரை சூப்பர் ஆக்டர் என்றும் சொல்லலாம்” என தெரிவித்துகிறார்.

பார்வதி

Actress Parvathi open talks about Superstar title

பிக் ஸ்க்ரீன் விருதிற்கு உலகத் திரைப்படங்களோடு இணைந்த ‘ஏழு கடல் ஏழு மலை’

பிக் ஸ்க்ரீன் விருதிற்கு உலகத் திரைப்படங்களோடு இணைந்த ‘ஏழு கடல் ஏழு மலை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது…

படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது.

வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல படைப்புகளுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறை நண்பர்களும் சினிமா ரசிகர்களும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
ஆண்டின் இறுதியில் இச்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி.

நல்லவைகளை எதிர்பார்த்திருக்கும்
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன்,
சுரேஷ் காமாட்சி

Ezhu Kadal Ezhu Malai joins with Big screen award film festival

‘தரைப்படை’யில் இணைந்த மூன்று ஹீரோக்கள் ஜீவா – பிரஜின் – விஜய்விஷ்வா

‘தரைப்படை’யில் இணைந்த மூன்று ஹீரோக்கள் ஜீவா – பிரஜின் – விஜய்விஷ்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்டமான பொருட்செலவில் ஏர்போர்ட் செட் போட்டுப் படமாகி இருக்கும் திரைப்படம் ‘தரைப்படை ‘

ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும்.

அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக்கதைகளும் அமைக்கப்படுகின்றன.படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ , இவர் வில்லன் என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும். ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டப்படுகின்றன .

ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்? யார் எதிர்மறை நாயகன் ? என்று புரியாது.

அப்படி ஒரு கதையாக எடுத்து உருவாகி இருக்கும் படம் தான்
‘தரைப்படை’ .

இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து இந்த கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றுகிறது.

இப்படி அந்தப் பணம் மாறி மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பயணம் நிகழ்கிறது.படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்க்கும் போது யார் நல்லவன் ? யார் கெட்டவன்? என்று தெரியாத வகையில் விறுவிறுப்புடன் உருவாகி இருக்கும் படம் தான்
‘தரைப்படை’ .

இந்தப் படத்தை ராம்பிரபா இயக்கியுள்ளார். ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் P.B. வேல்முருகன் தயாரித்துள்ளார்.

தரைப்படை

அது என்ன தரைப்படை?

அதாவது எளிய மக்களிடம் இருக்கும் ஒரு வன்முறைக் கும்பல் எப்படி கூட்டமாக இருந்து பிறருக்குத் தொல்லை கொடுக்கிறது?.திரை மறைவு வேலைகளையும் சட்டவிரோத காரியங்களையும் குழுவாக நின்று எப்படி சாதிக்கிறது? என்ற கருத்தைக் குறிப்பிடும் வகையில் தான் ‘தரைப்படை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.

அந்த மூன்று நாயகர்களும் அவரவரும் தங்களுக்கான அடையாளங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்கள்.

ஜீவா நடித்த ‘கொம்பு’ படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்த ஜீவா, ரஜினி ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் .ரஜினி போல் மேனரிசம் காட்டுவதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அதேபோல நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக பிரஜின் இருக்கிறார் .அவர் நடித்த ‘D3’ திரைப்படம் தமிழ்நாட்டை விடவும் கேரளாவில் அதிக வசூல் பெற்றுத் தந்துள்ளது.

விஜய் விஷ்வா சமூக சேவைகள் மூலமும் சில குறிப்பிடத்தக்க படங்களின் பாத்திரங்கள் மூலமும் மக்களிடம் நன்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்.

ஜீவா - பிரஜின் - விஜய்விஷ்வா

இப்படி தனித்தனியான அடையாளம் பெற்ற மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஜோடியாக மூன்று அறிமுக நிலை கதாநாயகிகளும் நடிக்கிறார்கள்.

படத்திற்காகக் கோடிக் கணக்கில் செலவழித்து கலை இயக்குநர் ரவீந்திரன் கைவண்ணத்தில் ஒரு பிரமாண்டமான ஏர்போர்ட் செட் போடப்பட்டுள்ளது .அதில் படத்தில் முக்கியமான காட்சிகள் படமாகி உள்ளன .

மிரட்டல் செல்வாவின் இயக்கத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் படமாகியிருக்கின்றன
இயக்குநர் ராம்பிரபாவுடன் சுரேஷ்குமார் சுந்தரம், மனோஜ் குமார் பாபு, ராம்நாத், ரவீந்திரன், மிரட்டல் செல்வா, S.V. ஜாய்மதி, ராக் சங்கர்,சரண் பாஸ்கர், ராஜன் ரீ,குருதர்ஷன், மேகமூட்டம் வைத்தி, நித்திஷ் ஸ்ரீராம் , பவிஷி பாலன்,ஸ்ரீ சாய் ஸ்டுடியோ, வெங்கட் எனப் பல்வேறு திறமைசாலிகளுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை , மொழியைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படி ‘தரைப்படை’ திரைப்படம் ஒரு பேன் இந்தியா படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

ஜீவா - பிரஜின் - விஜய்விஷ்வா

Jeeva Prajin Vijayviswa starrer Tharaipadai

பாலா & அருண் விஜய் இணைந்த ‘வணங்கான்’ படத்தின் டப்பிங் அப்டேட்

பாலா & அருண் விஜய் இணைந்த ‘வணங்கான்’ படத்தின் டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அண்மையில் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி இருக்கும் அருண் விஜய் இந்த போஸ்டரில் இருந்தார்.

வணங்கான்

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்நிலையில், ‘வணங்கான்’ படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி உள்ளன.

வணங்கான்

Balas Vanangaan movie dubbing updates

ரீ-ரிலீஸ் படங்கள் தேவையா? ரஜினி கமல் சூர்யா தனுஷ் மீது பாயும் பாடலாசிரியர் பிரியன்

ரீ-ரிலீஸ் படங்கள் தேவையா? ரஜினி கமல் சூர்யா தனுஷ் மீது பாயும் பாடலாசிரியர் பிரியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடலாசிரியர் பிரியன் நாயகனாக நடித்துள்ள ‘அரணம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடல் ஆசிரியர் பேசும்போது ரீ ரிலீஸ் படங்கள் தேவையா என்று ஆவேசமாக பேசினார்.

சமீபத்தில் ரஜினி நடித்த ‘முத்து’, கமல் நடித்த ‘ஆளவந்தான்’, தனுஷ் நடித்த ‘3’, சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆனது.

மேலும் அஜித் விஜய் படங்களும் அவ்வப்போது ரீ ரிலீஸ் ஆகிய வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘அரணம்’ படத்தின் கதநாயகனும். இயக்குனருமாகிய கவிஞர் பாடலாசிரியர் வருத்ததோடு பேசும் போது..

சின்ன பட்ஜெலே ஒரு தரமான ஒரு நல்ல படம் வரும் போது தியேட்டர் கொடுத்து உதவுங்களே. அதை விட்டு 10 வருஷம் முன்னே தியேட்டர்க்கு வந்து கோடி கோடி யாய் சாம்பாதித்து விட்டு இப்போ மீண்டும் Re ரிலீஸ் பண்ணுகிறேன் என்கிற பெயரில் ரஜினி நடித்த முத்து.. கமல் ஆளவந்தான் இது எல்லாம் இப்போ தேவையா?

இந்த முத்து என்கிற படத்தை உலகத்தில் உள்ள எல்லா மொழி களிலும் மற்றும் Satte lite OTT இப்டி என பார்த்து சலித்து போன படத்தை இப்போ என்ன Re ரிலீஸ் பண்ணி இப்போ சின்ன படங்களுக்கு எல்லாம் தியேட்டர் கொடுக்க கொடுக்க கூடாத சூழல் ஏற்படுத்துறாங்களே.. இதுக்கு ஒரு விடிவு வராதா என குமுறினார்.

Lyricist Priyan talks about Hit movies re release

Collection Update : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘பைட் கிளப்’

Collection Update : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘பைட் கிளப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ’உறியடி’ விஜயகுமார் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஃபைட்கிளப்’.

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ‘உறியடி’ விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துதுள்ளனர.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வந்த போது எதிர்பார்ப்பு கிளம்பியது. மேலும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் இணைந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடியது.

எனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 3 நாட்களில் ரூ. 5.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் வடசென்னை பானியிலான தமிழ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது.அது ‘பைட் கிளப்’ படத்திலும் தொடர்ந்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Fight club movie box office collection report

More Articles
Follows