விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’ பட சூட்டிங் அப்டேட்

விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’.

ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர்
நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு கடந்த 18 முதல் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்கியது. கோலார் தங்க வயல் பின்னணி கதைக்களத்துடன் இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இதன் பின்னர் மதுரையில் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் தற்போது சிவகங்கையில் நடத்தி வருகின்றனர்.

மீண்டும் ஆந்திராவில் இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பை நடத்த உள்ளார் ரஞ்சித்.

இதனையடுத்து இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் ‘தங்கலான்’ படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vikram Ranjiths Thangalaan shooting update

விஜய்சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் கிறிஸ்மஸ் ரிலீஸ் இல்லையாம்.!

விஜய்சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் கிறிஸ்மஸ் ரிலீஸ் இல்லையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என எந்த மொழியாக இருந்தாலும் தன் நடிப்பார் அனைத்து தரப்பு மக்களையிம் கவர்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

அதே வேளையில் ஹீரோ வேடம் என்றில்லாமல் வில்லன் வேடத்திலும் அசத்தி வருகிறார்.

இவர் ஹிந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற மௌனப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் கத்ரினா கைஃபுடன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர்தான் 3 தேசிய விருதுகளை வென்ற ‘அந்தாதூன்’ படத்தை இயக்கியவர்.

சைக்கோ திரில்லர் ஜானரில் பான் இந்தியா படமாக மெர்ரி கிறிஸ்துமஸ் உருவாகியுள்ளது.

இந்த படம் டிசம்பர் 23ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர்.

அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு டைகர் ஷெராப் நடித்துள்ள ‘கண்பத்’, ரன்வீர் சிங் நடித்துள்ள ‘சர்கஸ்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi starrer Merry Christmas release postponed

பான் இந்தியா படத்தில் ‘தி வாரியர்’ அண்ட் ‘தி லெஜண்ட்’ கூட்டணி

பான் இந்தியா படத்தில் ‘தி வாரியர்’ அண்ட் ‘தி லெஜண்ட்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் லெஜன்ட் சரவணன் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ‘தி லெஜன்ட்’.

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் இந்தி நடிகை ஊர்வசி ரவுதெல.

லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிப்பதற்காகவே இந்த நடிகைக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேணி நடிக்க உள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளாராம் ஊர்வசி.

லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ராம்.

ராம் & ஊர்வசி இணையும் புதிய படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

The Legend and The Warrior joining together

எளியோரை வலியோர் வாட்டினால்..; ‘நான் மிருகமாய் மாற’ பட ட்ரைலர் பன்ச்

எளியோரை வலியோர் வாட்டினால்..; ‘நான் மிருகமாய் மாற’ பட ட்ரைலர் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கழுகு’ மற்றும் ‘கழுகு 2’ படங்களை இயக்கியவர் சத்ய சிவா.

இவர் தற்போது இயக்கியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ படத்தில் சசிகுமார், விக்ராந்த், ஹரிப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

(முன்பு ‘காமன் மேன்’ என இந்த படத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.)

செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒரு சாதாரண மனிதனின் போராட்டம்தான் இப்படத்தின் கதை.

இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘நான் மிருகமாய் மாற’ பட ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில்…. ‘100 கோடி மனிதனுக்கு ஆயிரம் கோடி ஆசை’.

‘எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை எளியோர் வாட்டும், இத சொன்னவன் கையில கெடச்சான்’ என வசனங்கள் ஈர்க்கின்றன.

கொலை, ரத்தம், பழி தீர்த்தல் என ட்ரைலர் நீள்கிறது.

Here is the trailer of #NaanMirugamaiMaara

Naan Mirugamaai Maara Official Trailer

Sasikumar starrer Naan Mirugamaai Maara Trailer mini review

Starring @sasikumardir. Get ready for an amazing experience in theaters.

#NaanMirugamaaiMaaraTrailer

@SunTV @sunnxt @Sathyasivadir @GhibranOfficial @vikranth_offl @HariPrriya6 @RajaBhatta123 @srikanth_nb

லாரன்ஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தந்த ட்ரீட்

லாரன்ஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தந்த ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் இவர். தற்போது இயக்கத்திலும் இறங்கியுள்ளார்.

இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இப்படம் உருவாகிறது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அக்டோபர் 29ல் ‘ருத்ரன்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Lawrences Birthday Surprise Glimpse from Rudhran

Here’s @offl_Lawrence Master ‘s B’day Surprise Glimpse from #Rudhran

https://youtu.be/PFbZkMhf3K0

#ருத்ரன் #రుద్రుడు #ನಮ್ಮರುದ್ರ #രുദ്രൻ

#HBDRaghavaLawrenceMaster

@5starcreationss @kathiresan_offl @realsarathkumar @gvprakash @priya_Bshankar @RDRajasekar @editoranthony @onlynikil

‘காந்தாரா’ மீது வழக்கு தொடர்ந்த பிரபல இசையமைப்பாளர் குழு.; கோர்ட் அதிரடி உத்தரவு

‘காந்தாரா’ மீது வழக்கு தொடர்ந்த பிரபல இசையமைப்பாளர் குழு.; கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிஷப் ஷெட்டி இயக்கி நாயகனாக நடித்து கன்னட மொழியில் வெளியான படம் ‘காந்தாரா’.

இதில் அவர் இயக்கமும் நடிப்பும் பெரும் பாராட்டை பெற்றது.

அங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி இருந்தார். இதனையடுத்து ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசியும் பெற்றார்.

இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்ற பிரபல இசைக்குழு தங்களது (2017ல் வெளியான) ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ என்ற க்ளைமாக்ஸ் பாடல் என குற்றம்சாட்டியுள்ளது.

இது கேரள நடன முறைகளில் ஒன்றான ‘தைய்யம்’ நடனத்தைப் பற்றிய பாடலாகும்.

(’96’ பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் நண்பர்களும் இந்த இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.)

தைக்குடம் பிரிட்ஜ் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி உள்ளது.

பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இப்பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் காந்தாரா குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.” என பதிவிட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு இது தொடர்பான வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ‘வராஹ ரூபம்’ பாடலை தியேட்டரிலும் ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

Kerala Court restrains Kantara makers from playing the song

More Articles
Follows