ஷாலினியின் ரசிகன் நான்; அஜித் நன்றி சொன்னார்… – விவேக் ஓபராய்

ஷாலினியின் ரசிகன் நான்; அஜித் நன்றி சொன்னார்… – விவேக் ஓபராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vivek oberoiவிவேகம் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

முதலில் இவரது கேரக்டர் வில்லன் என கூறப்பட்டது. ஆனால் அஜித்தின் நண்பனாக அவர் நடித்துள்ளது பற்றி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது…
’விவேகம்’ கதையை கேட்ட பிறகு, அஜித் – சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம் படங்களை பார்த்தேன். ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது.

இந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன்.

எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ்ப் படம்.

என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். அஜித்தை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார் அஜித்.

இந்த படத்தில் நடிப்பது எனக்குதான் பெருமை என்றேன். நான் ஷாலினியின் ரசிகன் என்பதையும் சொன்னேன்’ என்றார்.

5 நிமிட கதை கேட்டு கன்னட சினிமாவில் நடிக்கும் ஆர்யா

5 நிமிட கதை கேட்டு கன்னட சினிமாவில் நடிக்கும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor aryaஅனூப் இயக்கும் ’ராஜரதா’ என்ற கன்னட படத்தில் நிரூப் பண்டாரி, அவந்திகா ஷெட்டி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இதில் நடிகர் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி நடிகர் நிரூப் கூறும்போது…

’நான் இயக்கிய ’ரங்கி தாரங்கா’ படத்தை பார்த்துவிட்டு ஆர்யா ஏற்கனவே என்னை பாராட்டியிருந்தார்.

அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் நடிக்க கேட்டேன். போனில் 5 நிமிடம் மட்டுமே கதை சொன்னேன். உடனே நடிக்க சம்மதித்தார்’ என்றார்.

இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது…

‘இப்படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறேன்.

தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர். சனிக்கிழமை இதன் சூட்டிங்கில் கலந்துகொள்கிறேன்’ என்றார்.

இதுவரை பார்க்காத விஜய் என் படத்தில் இருப்பார்… ஏஆர். முருகதாஸ்

இதுவரை பார்க்காத விஜய் என் படத்தில் இருப்பார்… ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and AR Murugadoss ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிட இருக்கிறார் இயக்குனர் ஏஆர். முருகதாஸ்.

வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் முருகதாஸ்.

அதுபற்றி அவர் கூறியதாவது…

‘துப்பாக்கி படத்திற்காக விஜய்யுடன் இணையும் போது ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் இயக்குகிறேன் என்ற பயம் இருந்தது.

அதன்பின்னர் ’கத்தி’ படம் பண்ணும்போது நீடித்தது.

எனவே புதிய படத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற பயம் அழுத்தம் இருக்கிறது.

இது கொஞ்சம் சவாலானதுதான்.

ஆனால் இதுவரை பார்க்காத விஜய்யை காண்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்.” என்றார்.

விஜய்சேதுபதியின் 96 படத்தில் டீச்சராக நடிக்கும் த்ரிஷா

விஜய்சேதுபதியின் 96 படத்தில் டீச்சராக நடிக்கும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Trishaமுதன்முறையாக விஜய்சேதுபதியுடன் த்ரிஷா இணைந்து நடித்து வரும் படம் 96.

இப்படத்தின் கதை 1996 காலக்கட்டத்தில் நடப்பதாலும், 96 வயது கேரக்டரிலும் விஜய் சேதுபதி நடிப்பதாலும் இப்படத்திற்கு 96 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரேம்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இதில் த்ரிஷா டீச்சராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தையுடன் இருக்கும் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை அடுத்த ஆண்டு 2018ல் ரிலீசாக உள்ளது.

ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு சர்ச்சை; நஷ்டஈடு கேட்கும் ரஜினி மகள்

ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு சர்ச்சை; நஷ்டஈடு கேட்கும் ரஜினி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Soundarya Rajinikanthசென்னை, கிண்டியில் லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

இந்த கட்டிடத்திற்கு பல மாதங்களாக வாடகை கொடுக்காத காரணத்தினால் இப்பள்ளியை அந்த கட்டிட உரிமையாளர் பூட்டியதாக கூறப்பட்டது.

ஆனால் அதை மறுத்த பள்ளி நிர்வாகம், தாங்கள் வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து வருவதாகவும், வாடகை பாக்கியில்லை எனவும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தங்கள் பள்ளியின் மீது வேண்டுமென்றே அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என ரஜினியின் 2வது மகளும் விஐபி2 பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

தீ காயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விருது வழங்கினார் ரோஹினி

தீ காயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விருது வழங்கினார் ரோஹினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Burn survivors honoured at COSMOGLITZ AWARDS by Rohiniபிரபல பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான ’சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி’ (Chennai Plastic Surgery) ‘காஸ்மோக்ளிட்ஸ் விருதுகள்’ (Cosmoglitz Awards) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி வருகின்றது.

3ஆம் ஆண்டான இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் தீ காயங்களால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ‘பீனிக்ஸ் க்ளிட்ஸ்’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகையும், இயக்குநருமான ரோஹினி வழங்கினார்.

இந்த 8 பெண்களும் முறையான பயிற்சி பெற்று சென்னை ராயபேட்டையில் உள்ள ரைட்டர்ஸ் கபேவில் பணிபுரிகிறார்கள். தங்கள் முகத்தில் ஏற்பட்ட தீ காயத்தால் பலரால் புறக்கணிப்பட்ட இவர்கள், அனைத்து தடைகளையும் எதிர்த்து போராடி, தற்போது சமூகத்தில் உயர்ந்துள்ள, பிரியதர்ஷினி, அஸ்மா, மாரியம்மாள், தமிழ்செல்வி, பரிமளா, புனிதவள்ளி, சத்யா, கோமலா என்ற இந்த 8 பெண்களை கவுரப்படுத்தும் விதமாக பீனிக்ஸ் க்ளிட்ஸ் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், 50 வயதில் தனது உடல் எடையில் 50 கிலோவை குறைத்து சாதித்த சென்னையைச் சேர்ந்த பெண்மணி திருமதி.சுஜாதா மோகனுக்கு ‘அவதார் க்ளிட்ஸ்’ விருது வழங்கப்பட்டது.

இவர், எந்தவித மருந்தோ மாத்திரையோ பயன்படுத்தாமல், அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளாமல், தனது உடல் எடையை குறைத்துள்ளார். இவரது செயலை ஊக்குவிக்கும் நோக்கத்தில், சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி இவருக்கு இவ்விருதை வழங்கி கவுரப்படுத்தியது.

சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியில் உடல் உடை குறைப்பதற்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தனது எடையில் 50 கிலோவை குறைத்த இந்த பெண்மணியை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், அவரை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் அவருக்கு இவ்விருதை வழங்கி கவுரவித்தனர்.

மேலும், மிஸ்டர்.கிளிட்ஸ் என்ற விருது மாடல் அபி பிரசாத்துக்கும், மிஸ்.க்ளிட்ஸ் விருது மாடல் அழகி மீரா மிதுனுக்கும் வழங்கப்பட்டது. மிஸ்சஸ்.க்ளிட்ஸ் விருது புனிதா கார்த்திக்குக்கும், மிஸ்டர்.பிரஸ் பேஸ் (Fresh Face) பல்கிட் பஜோரியாவுக்கும், மிஸ்.பிரஸ் பேஸ் (Fresh Face) ரேஸ்மா நம்பியார்க்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு முன்பாக ’பேர் இஸ் நாட் ஆல்வேய்ஸ் லவ்லி’ (Fair is not always lovely) மற்றும் ’பாடி சேமிங் & இமேஜினெட் அக்லினஸ் சிண்ட்ரோம்’ (Body Shaming & Imagined Ugliness Syndrome) என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

அதாவது, கருப்பு மற்றும் மாநிறமாக இருப்பவர்கள் தங்களது வண்ணத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது என்பது குறித்தும், அதேபோல், நமது உடல் எடை மற்றும் முக தோற்றம் உள்ளிட்டவையை வைத்து யாராவது கேலி கிண்டல் செய்தால், அதை கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டவையை குறித்து இந்த கருத்தரங்கில் தெளிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில், சமூக ஆர்வலர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடல் எடை பராமரிப்பு மருத்துவர்கள் மற்றும் பேஷன் டிசைனர் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

மேலும், சுனிதா ராஜ் எழுதிய ‘லிப்போசக்ஸன் – தி பிக் ஃபேட் ஸ்டோரி’ (Liposuction – The Big Fat Story) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் பற்றியும், அவை எதனால் ஏற்படுகிறது மற்றும் அவற்றை கரைக்கும் யுக்தி உள்ளிட்ட தகவல்களை கொண்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தை இந்தியாவின் மூத்த மற்றும் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர். ஆர்.வெங்கடசுவாமி வெளியிட்டார். இந்திய பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் முன்னோடியான இவர் தான் டாக்டர் கார்த்திக் ராமின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.கார்த்திக் ராம் நிகழ்ச்சியில் பேசும் போது, “சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனை உடல் எடை பருமன், முடி உதிர்தல், பெண்கள் உடலில் திடீர் மாற்றம் போன்றவற்றுக்கு சிறப்பான முறையில் தீர்வு கண்டு வருகிறது. அத்துடன் சமூகத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் இருப்பவர்களை கவுரவிக்கும் விதத்தில் ‘காஸ்மோ க்ளிட்ஸ்’ விருதுகளை வழங்கி வருகிறோம்.

இந்த ஆண்டு தீ காயங்களினால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு விருதுகள் வழங்கியதைப் போல, அடுத்த ஆண்டு திருநங்கைகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கும் விருதுகள் வழங்குவதோடு, அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

2016 – 17 ஆம் ஆண்டில் மட்டும் 600 முதல் 700 காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ள சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனை, அனைத்துவிதமான உடல் பாதிப்புகள், தோல் பிரச்சினைகள் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது.

இந்தியாவில் முன்னணி காஸ்மடிக் சர்ஜரி மையமாக திகழும் சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியில், இந்தியா மட்டும் இன்றி 67 நாடுகளில் இருந்து மக்கள் சிகிச்சைப் பெற்று வருகிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Burn survivors honoured at COSMOGLITZ AWARDS by Rohini

rohini cosmoglitz awards

More Articles
Follows