தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பாலாஜி குமார் பேசியதாவது…
“விஜய் ஆண்டனி இல்லாமல் இந்தப் படம் கிடையாது. அவர்தான் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்தார். படத்தில் ப்ளாஷ்பேக் அதற்குள் ப்ளாஷ்பேக் என பார்வையாளர்களின் கவனத்தைக் கோரும் படம் இது.
நம் ஊரின் வளம் அனைவருக்கும் தெரியும்படி இதில் கொண்டு வந்திருக்கிறேன். ஒளிப்பதிவு, இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் படத்திற்காக அற்புதமாக செய்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியிடம் இயல்பாகவே ஒரு குறும்பு உள்ளது. அதையும் கொண்டு வர வேண்டும், அதே சமயத்தில் அவர் கொஞ்சம் சீரியஸாகவும், வயதான தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
நடிகை மீனாட்சியும் சிறப்பாக நடித்துள்ளார். ரித்திகா, அர்ஜூன் சிதம்பரம் என மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.
எடிட்டர் ஆர்.கே. செல்வா பேசியதாவது…
“ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதையில் நம்மால் பலவற்றை கணிக்க இயலும். ஆனால், அதை எல்லாம் தாண்டி படம் சிறப்பாக இருக்கும். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யா சாருக்கு நன்றி”
இசையமைப்பாளர் கிரீஷ் கோபால கிருஷ்ணன் பேசியதாவது…
“சமீப காலத்தில், எதுவும் கெஸ் பண்ண முடியாத தமிழ் படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ‘கொலை’ படமும் வெற்றி பெறும்.
ஒளிப்பதிவு, இசை என தனித்தனியாக பிரித்து பார்க்காமல் எப்பொழுது படமாக நன்றாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் சொல்கிறார்களோ அப்போதே அது சிறந்த படமாக இருக்கும். ‘கொலை’யும் அதில் ஒன்று”.
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசியதாவது…
“’கொலை’ படத்தை முதல் முறை பார்க்கும் போதும், அடுத்தடுத்த முறை பார்க்கும்போதும் புதிய விஷயங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தெரிய வரும். அதனால், குறைந்தது இரண்டு முறை பாருங்கள். வருகை தந்திருக்கும் நடிகர் ஆர்யாவுக்கு நன்றி!”
நடிகை மீனாட்சி பேசியதாவது…
“தமிழில் இது என் அறிமுக படம் என்பதால் ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு. என் கதாபாத்திர பெயர் லைலா. சிறப்பான தயாரிப்பாளர், இயக்குநர் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!”.
Vijay Antony done old getup with serious character says Balaji Kumar