ராஜமுந்திரி பிச்சைக்காரர்களுக்கு ராஜமரியாதை அளித்த விஜய் ஆண்டனி.; நிஜத்திலும் ஹீரோதான்.!

ராஜமுந்திரி பிச்சைக்காரர்களுக்கு ராஜமரியாதை அளித்த விஜய் ஆண்டனி.; நிஜத்திலும் ஹீரோதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து இயக்கி எடிட்டிங் செய்து நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.

இந்த படம் மே 12ஆம் தேதி வெளியானது.

இது ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

‘பிச்சைக்காரன் 2’ படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரர்களுக்கு தன்னுடைய பங்களாவில் விருந்தளிப்பது போல காட்சி இருக்கும். அதனை தற்போது நிஜத்திலும் நிறைவேற்றியுள்ளார் விஜய் ஆண்டனி.

‘பிச்சைக்காரன் 2’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில் ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோர இருந்த பிச்சைக்காரர்களை ஒரு மிகப்பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு விருந்து உபசரிப்பு அளித்துள்ளார். அவர்களுக்கு உணவை பரிமாறி உள்ளார்.

இந்த காட்சி வீடியோ வெளியானது. இதை பார்த்த பல ரசிகர்களும் நீங்கள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என விஜய் ஆண்டனி புகழ்ந்து வருகின்றனர்.

Actor Vijay Antony treat for Real Beggers

‘பாரதி கண்ணம்மா’வை அடுத்து வேற சீரியலில் களமிறங்கும் ‘பிக் பாஸ்’ தாமரைச்செல்வி

‘பாரதி கண்ணம்மா’வை அடுத்து வேற சீரியலில் களமிறங்கும் ‘பிக் பாஸ்’ தாமரைச்செல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புறப் பாடல்கள் பாடி தமிழக மக்களிடையே பிரபலமானவர் தாமரைச்செல்வி.

ஒரு கட்டத்தில் இந்த பிரபலம் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழக ரசிகர் மத்தியில் பிரபலமான தாமரைச்செல்விக்கு தற்போது சினிமாவிலும் சீரியலிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவடையும் நிலையில் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தாமரைச்செல்வி.

இந்த நிலையில் தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியலில் தாமரைச்செல்வி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ ரசிகர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

After ‘Bharathi Kannamma’, ‘Bigg Boss’ Thamarai Selvi will act another serial.

17-ல் திருமணம் 20-ல் விவாகரத்து.. 2 குழந்தைகளை பெற்ற பெண்ணால் உயர முடியுமா.? – ஐஸ்வர்யா ராஜேஷ்

17-ல் திருமணம் 20-ல் விவாகரத்து.. 2 குழந்தைகளை பெற்ற பெண்ணால் உயர முடியுமா.? – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தன் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது…

முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன்.

ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம்.

அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன்.

நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்.. பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்.

மைக் செட் ஸ்ரீராம் பேசும்போது,

மீனா மேடத்தை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். “UNSTOPPABLE” என்ற வார்த்தைக்கு மீனா சாப்ரியா மேடம் தான் பொருத்தமானவர்.

இவரை போன்ற ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒருநாள் மீனா மேடத்தை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்ட போது, நான் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறேன் கண்ணா, வந்தபின் சந்திப்போம் என்றார்.

இந்த வயதிலும் ஒருவர் படிக்க ஆசைப்படுகிறார் என்றால் அவர் இன்னும் எந்த உயரத்திற்கு செல்வார் என்று நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அவர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Aishwarya Rajesh open talk about Single mother growth

தவறான வழியில் செல்கிறேன் என்பதை புரிந்துக் கொள்ளவே 20 வருடமாச்சு – மீனா

தவறான வழியில் செல்கிறேன் என்பதை புரிந்துக் கொள்ளவே 20 வருடமாச்சு – மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

யார் இந்த மீனா சாப்ரியா?

17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்தார்.

பிவிஆர் குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா.

இவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பேசியதாவது…

எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசும்போது…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி.

குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி.

அண்ணாதுரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், “இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்” அண்ணாதுரை.

நீண்டநாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது.

நான் தவறான பாதையில் செல்கிறேன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. “UNSTOPPABLE ANGELS” மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன்.

நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப்பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான் என்றார்.

ஆட்டோ அண்ணாதுரை பேசும்போது..

எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. எனக்கு பத்திரிகையாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை இருக்கிறது.

மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை.

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், என்றார்.

Corporate Icon Meena Chabbria Launches Her Autobiography Unstoppable

அடா சர்மாவின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்ட மர்ம நபர்கள்

அடா சர்மாவின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்ட மர்ம நபர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பிரபுதேவாவுடன் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்தவர் அடா சர்மா.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’.

இந்த படத்துக்கு எதிராக தியேட்டர்களில் போராட்டங்கள் நடந்தன.

இதனால் மேற்கு வங்காளத்தில் படம் தடை செய்யப்பட்டது.

தமிழக தியேட்டர்களில் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்துள்ள அடா சர்மாவுக்கு மிரட்டல்கள் வந்தன.

இந்த நிலையில், அடா சர்மா அளித்துள்ள பேட்டியில். “சில தினங்களுக்கு முன்பு எனது செல்போன் எண்ணை விஷமிகள் இணைய தளத்தில் கசிய விட்டனர்.

இதனால் பலர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசினர்.

ஒரு பெண்ணின் செல்போன் நம்பரும் மார்பிங் செய்த ஆபாச படங்களும் இணையத்தில் வெளியானால் மனம் என்ன பாடுபடும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்தேன்.

தி கேரளா ஸ்டோரி படத்திலும் ஒரு பெண்ணின் போன் நம்பர் பகிரங்கமாக வெளியாகும்போது அந்த பெண் அடையும் வேதனைகளை காட்டி உள்ளனர்.

அதனை எனக்கு ஏற்பட்ட சம்பவம் நினைவுப்படுத்தியது. எனது செல்போன் நம்பரை வெளியிட்டவர் நிறைய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்” என்றார்.

Adah Sharma phone number and Pornography leaked on the internet

‘கபாலி’ விஸ்வந்த் – வேல்முருகன் பங்கேற்ற ‘அறமுடைத்த கொம்பு’ பட பாடல் வெளியீடு

‘கபாலி’ விஸ்வந்த் – வேல்முருகன் பங்கேற்ற ‘அறமுடைத்த கொம்பு’ பட பாடல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் ‘நெல்லை கீதம்’ ஜாக்சன்ராஜ் அவர்கள் இயக்கிய ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அறமுடைத்த கொம்பு படத்தின் நான்கு பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிட பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் இயக்குனர் ஜாக்சன் ராஜ் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அல்-ருபியான், எடிட்டர் மணிக்குமரன், கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

Aramudaitha Kombu audio launch

More Articles
Follows