தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை மே 19 ஆம் தேதி ”பிச்சைக்காரன் 2′ வெளியானது.
இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி தயாரித்து நடித்து எடிட்டிங் செய்து இசையமைத்துள்ளார்.
இதில் நாயகியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார்.
இந்த படம் வெளியான நாள் முதலே மக்களின் வரவேற்பை பெற்று வசூல் வேட்டை செய்து வருகிறது.
இதனையடுத்து இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடி வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.
சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தின் வெற்றியை கொண்டாடினார்.
அந்த திரையரங்கில் பணிபுரியும் ஒரு பெண்ணை கேக் வெட்ட வைத்து விஜய் உற்சாகப்படுத்தினார்.
மேலும் பிச்சைக்காரன் முதல் பாகத்தில் இடம் பெற்ற அம்மா பாடலை ரசிகர்கள் முன் பாடினார்.
மேலும் பிச்சைக்காரன் பட 3வது பாகம் வெளியாகும் எனவும் ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
இதன்பின்னர் சென்னை பாடியில் உள்ள சிவசக்தி திரையரங்கிலும் ”பிச்சைக்காரன் 2′ படம் பார்த்த ரசிகர்களை சந்தித்தார் விஜய்ஆண்டனி.
Vijay Antony confirmed Pichaikkaran 3