தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா ரசனை என்பது நிச்சயம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது. உதாரணமாக தமிழில் மிகப் பெரிய ஹிட்டான படம் தெலுங்கில் தோல்வியை தழுவி உள்ளது. தெலுங்கில் தோல்வியை தழுவிய படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு சில படங்கள் மட்டுமே எல்லா மொழியிலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றிப் படங்களாக அமைகின்றன.
சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் இதற்கு நல்ல உதாரணம். தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பது நாம் தெரிந்து ஒன்றுதான்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை விரைவில் தான் படம் இயக்கினால் அதில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
Vijay Antony wants to direct Super Star for his next