தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.
இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.
இப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படம் பார்த்து வெளியே வந்து பொது விமர்சனம் (Pubilc review) கொடுத்தார்கள்.
அப்போது, ‘பிச்சைக்காரன் 2’ பற்றி கேட்டபோது ஒரு நபர் (விஜய் ஆண்டனி) நீங்க “இசையில நீங்க எப்பவுமே சூப்பர், தயாரிப்பாளராவும் கலக்கிட்டீங்க. இயக்குனராகவும் மக்கள் மனச வென்றுட்டீங்க , மேலும் உசுர கொடுத்து நடிச்சி எங்களை அழ வச்சிட்டீங்க” என ரசிகர்கள் கதறி அழுது ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
Vijay Antony’s Pichaikkaran 2 getting positive reviews from public