தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் நடிகர் என மக்கள் மத்தியில் அறியப்பட்ட விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
இந்த படம் நாளை மே 19 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இந்த படத்தில் காவ்யா தப்பார் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற கல்லூரும் பூவே என்ற பாடல் மலேசியாவில் படமாக்கப்பட்டபோது ஒரு பெரிய விபத்தில் சிக்கினார் விஜய் ஆண்டனி. அதிலிருந்து மீண்டு வந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தை அதிலே செய்யும் பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இவரது மனைவி பாத்திமா சமீபத்தில் *கணவரின் கதை முடிந்து விட்டதாக கூட நினைத்தேன்.. ஆனால் மக்கள் அன்பினால் அவர் மீண்டும் வந்துள்ளார்* என உருக்கமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கல்லூறும் பூவே என்ற வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அருண் பாரதி பாடல் எழுத சரத் சந்தோஷ் மற்றும் மது ஸ்ரீ இந்த பாடலை பாடியுள்ளனர்.
Here is a mellifluous melody 🥰 #KalloorumPoove 🫶🏽🩷 from #Pichaikkaran2
▶️ https://t.co/Ys5WUVLxGH
Kalloorum Poove song release from ‘Pichaikkaran 2’