தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த படமான ‘கொலை’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘கொலை’ படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் கொலை படம் வெளியாகிறது.
Vijay Antony’s next kolai movie release date is here