சிவாஜி-கமல்ஹாசனை நெருங்கிய விஜய்சேதுபதி

சிவாஜி-கமல்ஹாசனை நெருங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaji kamalஒரு நடிகர், 2 அல்லது 3 வேடங்களில் நடித்து வித்தியாசம் காட்டவே தயங்கும் நிலையில் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்து அசத்தியவர் சிவாஜி கணேசன்.

இவரின் 9 வேடங்களைத் தாண்டி 10 வேடங்களில் தசாவதாரம் படத்தில் நடித்தவர் கமல்ஹாசன்.

வெறும் மேக்அப் என்று மட்டுமில்லாமல், தன் உருவத்தின் அளவையே அதற்கேற்ப மாற்றியிருநதார் கமல்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது 8 வேடங்களில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.

ஆறுமுககுமார் இயக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தில் விஜய்சேதுபதியும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தில்தான் பழங்குடியினர் மக்களின் தலைவன் உள்ளிட்ட 8 வேடங்களில் நடிக்கிறாராம்.

இதற்காக விஜய்சேதுபதியைச் சுற்றி எப்பொழுதும் மூன்று மேக்கப் கலைஞர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்களாம்.

இப்படத்தின் ஒரு பாதி கதை முழுக்க காட்டிலும் மற்றொரு பாதி முழுக்க நாட்டிலும் நடப்பது போல கதைக்களத்தை அமைத்திருக்கிறாராம் இயக்குனர்.

நாயகியாக நிஹாரிகா கொனிடெலா நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

Actor Vijay Sethupathi doing 8 roles in Nalla Naal Pathu Solren

vijaysethu gautam

2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தகவல்கள்

2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie audio launch will be in Dubai on Oct 2017ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடி செலவில் தயாரிக்க, ஷங்கர் இயக்கியுள்ளார்.

இப்படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் கிராபிக்ஸ் பணிகளின் கால தாமத்தால், 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இந்தாண்டு 2017 தீபாவளி (அக்டோபர்) சமயத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது துபாய் நாட்டில் மிகப் பிரம்ம்மாண்டமாக நடைபெறும் என லைக்கா நிறுவனத்தை சார்ந்த ராஜீ மகாலிங்கம் தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2point0 movie audio launch will be in Dubai on Oct 2017

வியாழன் சென்டிமெண்டை மாற்றியதா விவேகம் டீம்..?

வியாழன் சென்டிமெண்டை மாற்றியதா விவேகம் டீம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivaஅஜித்தின் சமீபகால படங்களை இயக்குனர் சிவாவே இயக்கி வருகிறார்.

வீரம், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது உருவாகி வரும் விவேகம் படத்திலும் இந்த கூட்டணியே தொடர்கிறது.

அஜித், சிவா இருவரும் ஸ்ரீரடி பாபா பக்தர்கள் என்பதால் வியாழக்கிழமை சென்டிமெண்டாக படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் போஸ்டர்களை வியாழக்கிழமையே வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக அண்மையில் வெளியான சர்வைவா டீசரின் முழுப்பாடலை இன்று (ஜீன் 19, திங்கட்கிழமை) 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான ஹேஷ்டேக் இணையத்தில் #survivasongfrom6pmtoday டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இந்த பாடலின் ராப் பகுதியின் வரிகளை எழுதி பாடியது குறித்து யோகி பி கூறியதாவது..

‘வாழ்க்கையில் போராடும் ஒரு மனிதர் புத்துயிர் பெற்று எப்படி மீண்டு வருகிறார் என்பது குறித்து இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. இப்பாடல் அஜித்துக்கு ரொம்ப பொருத்தமான பாடலாக இருக்கும்.” என்றார்.

Surviva song releae Vivegam team changing their Thursday Sentiments

சூர்யா-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இணைந்த படம்

சூர்யா-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இணைந்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Sivakarthikeyan Vijay Sethupathi teams up for Kootathil Oruthanட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “கூட்டத்தில் ஒருத்தன்“.

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் த.செ. ஞானவேல் கூறியதாவது…

இது வரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது.

இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும்.

இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட்டாக வெற்றி பெற்றுள்ளது. “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும்.

கவிஞர் கபிலன் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் அனைவரையும் ஊக்குவிக்கும் வரிகளாக அமைந்துள்ளது இந்த சிறப்பாகும்.

இப்பாடலில் வரும் வரியான “ உன் கேள்விக்கு விடை நீயடா, மண்பானையாய் உடையாதடா“, தோல்வியெல்லாம் தோல்வியல்ல, வெற்றி என்றும் தூரமல்ல போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும். இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்கள்.

அப்போது நாங்கள் யோசித்த விஷயம் தான் இந்த Gift Song. படத்துக்குள்ளே மட்டும் இந்த பாடலை வைக்காமல், இதை ஒரு ப்ரோமோ பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம்.

“கொலைவெறி டி“ பாடல் எப்படி ஒரு சூப் சாங்காக இருந்ததோ அதே போல் இது Gift Song என்று எல்லோராலும் கொண்டாடப்படும் பாடலாக இருக்கும். இப்பாடலை நாங்கள் உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு மாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம்.

அந்த பாடலை வருகிற ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம்.

இப்பாடலில் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, நாசர், பிரகாஷ்ராஜ், சிவகுமார், விஷ்ணு விஷால், சமுத்திரகனி, ஆர்.ஜே. பாலாஜி, அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நிவாஸ் கே பிரசன்னா, செப் தாமு, ரம்யா நம்பீசன், விஐடி கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர்.

இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றார் இயக்குநர் த.செ. ஞானவேல்.

Suriya Sivakarthikeyan Vijay Sethupathi teams up for Kootathil Oruthan

Kootathil-Oruthan

‘தனுஷ்-விஜய்சேதுபதிதான் ரொம்ப அழகு…’ அசோக் செல்வன்

‘தனுஷ்-விஜய்சேதுபதிதான் ரொம்ப அழகு…’ அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashok selvanசூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் அசோக் செல்வன்.

கூட்டத்தில் ஒருத்தன் இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஒரு சமீபத்திய பேட்டியில் இவரின் நிறம் குறித்தும் அழகு குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு சற்றே ஆவேசமான அவர் கூறியதாவது…

“எதை வச்சி அழகை முடிவு பண்றீங்க. சிவப்பா இருந்தா அது அழகா.? கறுப்பா இருந்தா அழகு இல்லையா?

இங்கிலீஷ் பேசினா புத்திசாலியா? அது ஒரு மொழி அவ்வளவுதான்.

என்னை பொறுத்தவரை தனுஷ்-விஜய்சேபதி அழகுதான்.

இங்கே நிறத்தை வைத்து அழகை எடை போடுவது தவறான கண்ணோட்டம்” என்று தொகுப்பானியே திகைக்கும் அளவுக்கு பேசினார் அசோக் செல்வன்.

Dhanush and Vijay sethupathi looks handsome says Ashok Selvan

நதிகள் இணைப்புக்கு 1 கோடி நிதி; அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி

நதிகள் இணைப்புக்கு 1 கோடி நிதி; அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ayyakannu met Rajini and remind him Rs 1 crore promise for river interlinkingசூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் இன்று பி.அய்யாக்கண்ணு தலைமையிலான 16 பேர் கொண்ட விவசாயிகள் குழுவைச் சந்தித்தனர்.

ரஜினியை சந்தித்த பிறகு அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது…

”நதிகள் இணைப்பு என்னும் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ரஜினி. அதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் தருவதாக பத்து வருடங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

நதிகளை இணைக்க உடனடியாக எங்களிடம் ரூ.1 கோடி வழங்க உள்ளதாகவும் கூறினார்.

ஆனால், அதை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

முதலில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, மற்றும் காவேரி போன்ற நதிகளை இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளிலும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

விரைவில் பிரதமரை சந்தித்து நதிகள் இணைப்பு பற்றி ரஜினி பேசுவார்.” என்றார் அய்யாக்கண்ணு.

Ayyakannu met Rajini and remind him Rs 1 crore promise for river interlinking

rajini ayyakannu meeting

More Articles
Follows