கடவுள் இருந்தால் நல்லாருக்கும்ல.; கமல் கேள்விக்கு ‘மாயோன்’ படக்குழு பதிலடி

கடவுள் இருந்தால் நல்லாருக்கும்ல.; கமல் கேள்விக்கு ‘மாயோன்’ படக்குழு பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன்.

படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

500க்குமேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.

மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது.

“மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘Maayon’ film crew responds to Kamal’s question

கலையரசன் ஆனந்தி ஆஷ்னா கூட்டணியில் காதலை கவிழ்க்க வரும் ‘டைட்டானிக்’

கலையரசன் ஆனந்தி ஆஷ்னா கூட்டணியில் காதலை கவிழ்க்க வரும் ‘டைட்டானிக்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்-காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்,

இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

கலையரசனுடன் 2 நாயகிகள் இணையும் டைட்டானிக் (காதலும் கவுந்து போகும்)

இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய எம். ஜானகிராமன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கோயமுத்தூர் கொடைக்கானல் பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதில் பிற முன்னனி கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் ‘இயக்குனர்’ பாலாஜி மோகனும், நடிகை காயத்திரியும் ‘cameo’ appearance’ல் நடித்துள்ளனர்.

‘தெகிடி’ ‘சேதுபதி’ புகழ் நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக ராம் பிரசாத்தும், எடிட்டிங்கை ராதாகிருஷ்ணன் தனபாலும் ’இக்னேசியஸ்’ அஸ்வினும் கவனித்துள்ளனர்.

படக்குழுவினர் கூறுகையில்…

“இப்படம் முழுநீள காமெடி திரைப்படமாக இருந்தாலும், நிச்சயம் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தின் பல இடங்களில் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி பார்க்க வைக்கும். அதுவும், climax’ல் வரும் சில திருப்புமுனைகள் இதுவரை Romantic comedy படங்களில் வராத அளவிற்கு இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக திரைக்கதை அமைந்திருப்பது இப்படத்தின் பெரிய பலம்” என்றனர்.

கலகலப்பாக, அனைவரையும் கவரும் வகையில் தரமான நகைச்சுவை படமாக உருவாகியுள்ள டைட்டானிக் – காதலும் கவுந்து போகும், ஜூன் 24 தியேட்டர்களில் வெளியாகிறது.

Tamil film Titanic release date announced

ஒரே படத்தில் கமல் சூர்யா கார்த்தி.; வேற லெவலில் லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்ட்

ஒரே படத்தில் கமல் சூர்யா கார்த்தி.; வேற லெவலில் லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபஹத் பாசில், காயத்ரி, நரேன், காளிதாஸ், சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

இந்த படம் நாளை ஜூன் 3 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

4 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘விக்ரம்’ பட தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெரிய விலைக்கு வாங்கியுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இதில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரது கேரக்டர் தான் ‘விக்ரம் 3’ படத்தின் தொடக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.

‘விக்ரம்’ படத்தில் லோகேஷின் முந்தைய படமான ‘கைதி’ பட ரெஃபரென்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் லோகேஷ் விரைவில் இயக்கவுள்ள ‘கைதி 2’ படத்தில் கார்த்தியுடன் கமல்ஹாசன் சூர்யா இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கமல் சூர்யா கார்த்தி மூவருமே நட்சத்திர அந்தஸ்தத்தை தாண்டி சிறந்த நடிகர்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Kamal Surya Karthi in the same film .; Lokesh Kanagaraj script on another level

JUST IN ரஜினிகாந்தை சந்தித்த நாசர் கார்த்தி பூச்சி முருகன்.; விஷயம் இதுதானா.?

JUST IN ரஜினிகாந்தை சந்தித்த நாசர் கார்த்தி பூச்சி முருகன்.; விஷயம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜூன் 2ஆம் தேதி… சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சென்றனர்.

அப்போது அவர்களை வரவேற்ற ரஜினிகாந்த் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசினார்.

இந்த சந்திப்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இருந்தனர்.

இந்த சந்திப்பு, சுமார் 55 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சங்கத் தலைவர் நாசர்.

நடிகர் சங்கம் சார்பாக மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கியதாக தெரிவித்தார் நாசர்.

சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினிகாந்த் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nasser Karthi Poochi Murugan meets Rajinikanth

ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை இயக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ பிரபலம்

ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை இயக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் ஒருவர் ஹரீஷ் கல்யாண்.

இவர் இளம் ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா பாலுடன் நடித்திருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வந்துள்ளன.

ஹரீஸ் நடிப்பில் ஸ்டார், நூறு கோடி வானவில் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘கனா’ படத்தில் உதவி இயக்குனராகவும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்தாவும் பணி புரிந்தவர் தமிழரசன் பச்சமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் 3.5/5.. உஷாரான உதயநிதி

இந்த இரு படங்களும் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Harish Kalyan’s next with Nenjukku Needhi dialogue writer

‘யங் மேஸ்ட்ரோ’ ஆனார் யுவன்.; மிரட்டும் எஸ்ஜே சூர்யாவின் ‘பொம்மை’ பட ட்ரைலர்

‘யங் மேஸ்ட்ரோ’ ஆனார் யுவன்.; மிரட்டும் எஸ்ஜே சூர்யாவின் ‘பொம்மை’ பட ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’.

மான்ஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் இதில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர் எஸ்.ஜே.சூர்யா & ப்ரியா பவானி சங்கர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது இந்த படம்.

இப்படத்தின் பணிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தன.

தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

‘உலகத்தில் மிகவும் விசித்தரமானது மனிதனின் மூளை’ என தொடங்கும் வசனத்துடன் ட்ரைய்லர் ஆரம்பிக்கிறது.

இந்த ட்ரெய்லரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெயருக்கு முன்பாக ‘யங் மேஸ்ட்ரோ’ என அடைமொழி போடப்பட்டுள்ளது

இந்தப் படம் காதல் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு சிறப்பான புது அனுபவத்தை தரும் என நம்பலாம்.

“பொம்மை” பட டிரைலர் உலகம் முழுக்க சுமார் 600 திரை அரங்குகளில் வெளியாகிறது.

கமல்ஹாசன் , லோகேஷ் கனகராஜ் உருவாக்கத்தில் உருவான “விக்ரம்” படம் வெளியாகும் திரை அரங்குகளில் நாளை ஜூன் – 3 ஆம் தேதி “பொம்மை” படத்தின் டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

‘பொம்மை’ படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு குறித்த செய்திகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

Yuvan became ‘Young Maestro’; SJ Surya’s ‘Bommai’ Movie Trailer is out

More Articles
Follows