விஜய்சேதுபதியை காண திரளும் மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து மக்கள்

விஜய்சேதுபதியை காண திரளும் மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

பி. ஆறுமுக குமார்

படத்தொகுப்பு பணிகளை ஆர் கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ. கே. முத்து மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில், இயக்குநரான பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்கள் படப்பிடிப்பனை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகனான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி

Malaysia Indonesia Thailand peoples like to see Vijay Sethupathi

சின்ன ரூமுக்குள் படமெடுப்பது சவால்.. கிஷோருக்கு சவால் பிடிக்கும் – ஜெயப்பிரகாஷ்

சின்ன ரூமுக்குள் படமெடுப்பது சவால்.. கிஷோருக்கு சவால் பிடிக்கும் – ஜெயப்பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் *நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது…*

ஒரு சின்ன ரூமுக்குள் படம் எடுப்பது மிக சவாலான விஷயம். கிஷோர் அவர்களுக்கு சவால்கள் பிடிக்கும். டிரெய்லர் மிக அருமையாக உள்ளது. திரில்லர் படமாக தெரிகிறது. படக்குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், நன்றி.

*நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசியதாவது…*

இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். என் மீது நம்பிக்கை வைத்த குழுவினருக்கு நன்றி, படம் வந்ததும் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.

*தயாரிப்பாளர் ராஜா பேசியதாவது…*

‘முகை’ திரைப்படத்தின் டிரெய்லர் மிகவும் அருமையாக உள்ளது. இசை சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளர் சக்திக்கு வாழ்த்துகள். இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

Its not easy to take shoot at small rooms says Jayaprakash

ஹாலிவுட்டிற்கு இணையாக இன்றைய இயக்குனர்களின் படங்கள் – கே. ராஜன்

ஹாலிவுட்டிற்கு இணையாக இன்றைய இயக்குனர்களின் படங்கள் – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…*

‘முகை’ ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. இயக்குநர் அஜித்குமார் அவர்களை வாழ்த்துகிறேன். நல்ல தமிழ் தலைப்புகள் இருக்கின்றன, தமிழில் தலைப்பு வையுங்கள் என்று நான் நீண்டகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். இந்த படக்குழுவை வாழ்த்துகிறேன். இந்த காலத்தில் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளருக்கு கஷ்டம் தராமல் படத்தை உருவாக்குங்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.

*தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியதாவது…*

ரிஷி என்னுடைய நண்பர். அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கனவுகளோடு இவர்கள் வந்துள்ளார்கள். திறமையான இயக்குநர் அஜித்குமார். சினிமாவின் எதிர்காலம் இளைஞர்களிடம் தான் இருக்கிறது. நிறைய புதுமுக தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருவது மகிழ்ச்சி. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

*ஒளிப்பதிவாளர் அர்ஜுன் பேசியதாவது…*

இயக்குநர் அஜித் மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தார், படத்தை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அதனால் என் வேலை சுலபமாக இருந்தது. படம் நன்றாக இருக்கும், பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.

Young directors movies were upto Hollywood level says K Rajan

‘தேஜாவு’-க்குப் பிறகு அதே போல பண்ணக் கூடாதுன்னு இருந்தேன் – அரவிந்த்

‘தேஜாவு’-க்குப் பிறகு அதே போல பண்ணக் கூடாதுன்னு இருந்தேன் – அரவிந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் ‘தருணம்’.

இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது.

இந்த நிகழ்வில் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது..

இன்று காலையில் எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம்.

எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன்.

கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார். என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி.

தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன்.

பல கதைகள் பேசினோம். இந்தக் கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்.

I decided my next should not do like Dejavu says Aravind

நடிகர்கள்

கிஷன் தாஸ்
ஸ்மிருதி வெங்கட்
தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் இ சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
மக்கள் தொடர்பு – சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM)
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ழென் ஸ்டுடியோஸ்)
இணை தயாரிப்பு – ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்

மம்மூட்டியை பிடிக்க முடியல.. அதனால் பசுபதி கிடைச்சிட்டார் – ராம் சங்கையா

மம்மூட்டியை பிடிக்க முடியல.. அதனால் பசுபதி கிடைச்சிட்டார் – ராம் சங்கையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘தண்டட்டி’. பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி நடித்துள்ள இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது…

“தண்டட்டி படத்தின் ஆரம்ப புள்ளி எங்கே ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய பயணம். பொதுவாக விநாயகரை வணங்கி வேலையை தூங்குவார்கள். ஆனால் எனக்கு விநாயகருக்கு பதிலாக வெங்கடாஜலபதியே கிடைத்தார் என்பது போல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு முழு காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான்.. ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும்.

நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார்.

ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும்.

ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என காமெடி செய்திருப்பார். அதுபோல இந்த படத்தில் நடிகை ரோகிணி பிணமாக அமர்ந்தபடி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு விதமான நடிப்பு, கூச்சல் என்று இருந்தாலும் சில இடங்களில் நான் கட் சொல்ல மறந்து விட்டாலும் கூட அவர் மூச்சை பிடித்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே கவனம் கொண்டிருந்தார்.

அம்மு அபிராமி இந்த படத்திற்கு ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் இரவு பகலாக நடித்து இரண்டே நாட்களில் அவரது வேலையை முடித்து விட்டார். இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்கள் படப்பிடிப்பிலும் சரி டப்பிங்கிலும் சரி.. என்னை வச்சு செஞ்சுட்டாங்க.. நான் படப்பிடிப்பில் அவர்களை திட்டுவேன்.

ஒரு குழந்தை போல என்னிடம் கோபித்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க வைப்பேன். எல்லா முதல் பட இயக்குநர்களுக்கும் மகேஷ் முத்துசாமி போல ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டால் போதும். சுந்தரமூர்த்தி நகரத்து பின்னணியில் வளர்ந்தவர் என்றாலும் கிராமத்து இசையை எளிதாக உள்வாங்கி அற்புதமாக இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்காக கிராமங்களில் சில வீடுகள் தேவைப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் கதை சொல்லி வீடு கேட்போம். அவர்கள் வீடு கொடுப்பதற்கு முன்பே ஒப்பாரி வைக்கும் காட்சிகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்து விட்டுதான் அனுமதி கொடுத்தார்கள். அப்படி ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கு திடீரென திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது.

அதற்கடுத்து படப்பிடிப்பிற்கு போனபோது கல்யாண வீட்டில் வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள் என வீடு கொடுக்க மறுத்து விட்டார்கள். இதுபோன்ற பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த படத்தின்போது நடந்துள்ளது” என்றார்.

Pasupathy replaced Mammootty place says Ram Sangaiya

நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவா தான் – கிஷன் தாஸ்

நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவா தான் – கிஷன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் ‘தருணம்’.

இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது.

இந்த நிகழ்வில் நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது..

நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார்.

இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் நன்றி.

தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது…

அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன் என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார்.

அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப்படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

I’m here in Cinema because of Darbuka Siva says Kishandas

More Articles
Follows