கௌதம்கார்த்திக் மற்றும் காயத்ரியை பாராட்டிய விஜய்சேதுபதி

கௌதம்கார்த்திக் மற்றும் காயத்ரியை பாராட்டிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

onnps press meetஆறுமுகுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்திரி நிகாரிகா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.

இந்த பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசினார்.

ஆறுமுக குமார் எனது நீண்ட கால நண்பர். படத்தில் நடித்துள்ள கெளதம் கார்த்திக் தன்னை விட மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.

என் போஸ்டர் பெரிதாக இடம் பெறும் எனத் தெரிந்தும் நடிக்க ஒத்துக் கொண்டார்.

இந்த குணம் தான் கெளதம் கார்த்திக்கை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும்.

காயத்ரி நல்ல நடிகை. அறிவான பெண். அவருக்கு அறிவுக்கு அதிகம் உள்ளதால்தான் முன்னேற தாமதம் ஆகிறது.” என விஜய் சேதுபதி பேசினார்.

கமலை விட தமிழக அரசை யாரும் இப்படி கலாய்க்க முடியாது..!

கமலை விட தமிழக அரசை யாரும் இப்படி கலாய்க்க முடியாது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

மேலும் தான் விரைவில் கட்சி தொடங்கி அரசியல் சேவை செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசால் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த சுமையை மக்கள்தான் ஏற்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பஸ் கட்டணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து மற்றொரு நடிகரை சினிமாவுக்கு கொண்டு வரும் தனுஷ்

சிவகார்த்திகேயனை தொடர்ந்து மற்றொரு நடிகரை சினிமாவுக்கு கொண்டு வரும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Dheenaவிஜய் டிவியில் பிரபலமான சிவகார்த்திகேயனை தன் 3 படத்தில் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தார் தனுஷ்.

அதன் பின்னர் தான் தயாரித்த எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை படங்களில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார்.

தற்போது மற்றொரு நடிகரை டிவியில் இருந்து சினிமாவுக்கு கொண்டு வருகிறார்.

விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா.

ஏற்கனவே ஒருசில படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துள்ள தீனா தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய Kattappanayile Rithwik Roshan என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

கருத்துக்களை பதிவு செய் படத்தில் எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகிறார்

கருத்துக்களை பதிவு செய் படத்தில் எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Legend actor SSR grandson acting in Karuthukkalai padhivu sei movieதிரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas.
ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது.

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.

இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இணை தயாரிப்பு – JSK கோபி
தயாரித்து இயக்குபவர் ராகுல்.

படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்ட போது. இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை.

சோஷியல் மீடியா என்றழைக்கப் படும் சமூக வலை தளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான் கருத்துக்களை பதிவு செய்..
படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடை பெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர் ராகுல்.
ஒளிப்பதிவு – மனோகர்
இசை – கணேஷ் ராகவேந்திரா
பாடல்கள் – சொற்கோ
கலை – மனோ
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
ஸ்டண்ட் – ஆக்‌ஷன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – D.B.வெங்கடேசன்

சண்முகபாண்டியன் உடன் நடித்தது பற்றி மதுரவீரன் நாயகி மீனாட்சி

சண்முகபாண்டியன் உடன் நடித்தது பற்றி மதுரவீரன் நாயகி மீனாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala actress Meenakshi shares her working experience in MaduraVeeran movieமதுர வீரன் படத்தில் சண்முகபாண்டியன் உடன் நாயகியாக நடித்துள்ளவர் கேரளத்து வரவு மீனாட்சி.

அவர் தன் நடிப்பு அனுபவம் பற்றி இங்கே பகிர்ந்துள்ளார்.

“நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் P.G. முத்தையாவுக்கு நன்றி.

இயக்குனர் P.G. முத்தையா படபிடிப்பில் தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படபிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான்.

அவருடைய உண்மையான உழைப்பும் , அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா ? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.

சண்முகபாண்டியன் எளிமையானவர், மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர்.

அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவியவர் அவர் தான். என்னுடைய வாழ்கையில் மிகசிறந்த தருணம் விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படபிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் 1 மணி நேரம் பேசியது தான்.

என்னுடைய வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது எனலாம்.

என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா, தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் என்னை அழகாக்கி, நிறைய கற்று தந்துள்ளது.

கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்றுதந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படபிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.

நான் தமிழகத்தின் சிறப்பான தித்திக்கும் பொங்கலுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆனால் படபிடிப்பின் போது அதை நான் அதிகம் சாப்பிடவில்லை என்றார் மதுரவீரன் நாயகி மீனாட்சி.

Kerala actress Meenakshi shares her working experience in MaduraVeeran movie

சூர்யா-விக்ரம் உடன் நடித்த மாஸ்ரவியின் நெகிழ்ச்சி அனுபவம்

சூர்யா-விக்ரம் உடன் நடித்த மாஸ்ரவியின் நெகிழ்ச்சி அனுபவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mass Ravi shares his working experience with Suriya and Vikramவிக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் ‘ஸ்கெட்ச்.’ இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி.

ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி.

தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, ” எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம்.

டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன்.

பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த “ஜிஞ்ஜினுக்கான்” பாட்டுக்கு நடனம் ஆடினேன்.

அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், 8 மேடையேற பயப்படுகிற எனக்கு அது ஊக்கமாக இருந்தது.

எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாகவே, சென்னை வந்தேன். பலவிதமான இடங்களில் பலவிதமான வேலைகள் பார்த்தேன். எங்கு ஷூட்டிங் நடந்தாலும் வேடிக்கை பார்க்க ஓடி விடுவேன்.

அது டிவி சீரியலோ சினிமாவோ எதுவாக இருந்தாலும் போய்ப் பார்ப்பேன். பிறகு,சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.

எனக்கு உடம்பை கட்டாக வைத்துக் கொள்ளப் பிடிக்கும். எனவே ஜிம் போய் உடற்பயிற்சி செய்தேன். அங்கு நிறைய சினிமாக்காரர்கள் வருவார்கள். அந்தப் பழக்கத்தில் வாய்ப்பு தேடலாம் என்பதும் ஒரு காரணம். நிறைய பேர் வந்தார்கள். பழக்கமும் ஆனார்கள்.

ஆனாலும் பெரிதாக வாய்ப்பு ஒன்றும் வரவில்லை. பிறகு கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டேன். தினமும் 25 கம்பெனியாவது போவேன். இப்படி 1000 கம்பெனியாவது ஏறி வாய்ப்பு கேட்டிருப்பேன்.

சிறு சிறு காட்சிகளில் வந்த எனக்கு ‘மாஸ் ‘படத்தில் அடையாளம் தெரிகிற மாதிரி சில காட்சிகளில் நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு சார்.

என்னை நம்பி பெரிய ரோல் கொடுத்தவர் சுப்ரமணிய சிவா சார் தான். அவர் ‘உலோகம் ‘என்கிற படத்தில் எனக்குப் பெரிய கேரக்டர் கொடுத்தார். அது ஜெயமோகனின் கதை.

இலங்கைப் பின்னணியிலான கதை. படம் வந்தால் எனக்குப் பரவலான பெயர் கிடைக்கும். சுப்ரமணிய சிவா சாருக்கு மிக பெரிய நன்றி

வாய்ப்புக்குப் போராடுவதை விட நமக்கு நாமே ஏதாவது செய்து திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ‘தாகம்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். பலரும் பாராட்டினார்கள்.

பிறகு ‘ஒன் லைக் ஒன் கமெண்ட்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். அதைத் திரையிட்ட போது சந்தானம், சுப்ரமண்ய சிவா, சரவண சுப்பையா போன்று திரையுலக விஐபிக்கள் பலரும் வந்தார்கள். பாராட்டினார்கள் .

அதற்கு விஜய் சந்தர் சாரை அழைத்து இருந்தேன். அவரால் வர முடியவில்லை. பிறகு அவரைச் சந்தித்த போது அதைப் பார்த்து விட்டுப் பாராட்டிப் பேசினார். வாழ்த்தி ஊக்கமாகச் சில வார்த்தைகள் சொன்னார்.

அவர் தன் இயக்கத்தில் அடுத்த பட வாய்ப்பான ‘ஸ்கெட்ச்-சில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ”

என்றவர் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசினார்.

” நான் 12 ஆண்டுகள் சினிமாவில் போராடி வருகிறேன். இந்திய அளவில் சிறந்த நடிகராக விருது பெற்ற விக்ரம் சாருடன் நடிக்கப் போகிறோம் என்பதை நினைத்துப் பெருமையாக இருந்தது.

அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விஜய் சந்தர் சாரை நான் என்றும் மறக்க மாட்டேன். பத்து படங்களில் நடித்த அனுபவத்தையும் புகழையும் அந்த ஒரு படத்தின் மூலம் பெற்றேன்.

காரணம் இயக்குநர் தான். இன்றைய இளைய தலைமுறையை நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கும் விக்ரம் சார் பெரிய நடிகர் மட்டுமல்ல பெருந்தன்மைக்கும் சொந்தக்காரர் என்பதை அவருடன் நடித்த போது நேரில் பார்த்த போது உணர்ந்து கொண்டேன்.

என் கேரக்டருக்கு யாரோ பெரிய நடிகரைக் கூட போட்டிருக்கலாம். என்னைப் போல ஒரு சிறிய நடிகனுடன் அவர் நடிக்கச் சம்மதித்தது பெரிய விஷயம். அது மட்டுமல்ல அவருடன் நான் சண்டைக் காட்சிகளில் மோதும் காட்சிகளில் நடிக்க சம்மதித்தது அவர் மனசால் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காட்டியது.

உடன் நடிக்கும் போதும் சகஜமாகப் பேசினார். ஒரு தம்பியைப் போல அன்பு காட்டி ஊக்கம் கொடுத்தார் .

படப்பிடிப்பின் போது எனக்குக் காலில் அடிபட்டு இருந்தது அதை மறைத்தபடி நடித்தேன். நிறைய டேக் வாங்கினேன் – ஏன் என்று விசாரித்தார் காலில் அடிபட்டு இருந்ததைச் சொன்னேன்.

ஏன் என்னிடம் இதை முன்னாடியே சொல்லவில்லை? என்றார். அப்போது தன் காலைக் காட்டினார். அதிலும் பேண்டேஜ் போட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘ஸ்கெட்ச்’ படத்தைப் பொறுத்தவரை அது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

தாணு சாரின் மிகப் பெரிய கம்பெனியில் பெரிய ஹீரோவுடன் நான் நடித்து பொங்கல் படமாக வெளியாகியிருப்பது எனக்கு பெருமை யான விஷயம். ஏதோ கனவு போல நம்ப முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். ” என்கிறார் மாஸ் ரவி.

இவர் நடித்து ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படங்கள் வெளியாகவுள்ளன.

இப்போது சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் ‘வெள்ளையானை ‘ படம் , திருமுருகன் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வரும் மாஸ் ரவி, மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மாஸ் ரவி டைரக்ஷனில் அன்லாக் குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது இக்குறும் படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி உள்ளனர் மாஸ் ரவிக்கு கூடுதல் மகிழ்ச்சி.

Actor Mass Ravi shares his working experience with Suriya and Vikram

mass ravi stills

 

More Articles
Follows