ITS OK DA.. வேஷ்டி கட்டுனா நான்தான்டா ஜட்ஜ்..; மிரட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ ட்ரைலர்

ITS OK DA.. வேஷ்டி கட்டுனா நான்தான்டா ஜட்ஜ்..; மிரட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்க சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களும், டீசரும் ஏற்கெனவே வெளியாகி விட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டது.

சுமார் 2.10 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில், சென்டிமெண்ட், அதிரடி ஆக்சன், பன்ச் டயலாக் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

ITS OK DA என பல கேரக்டர்கள் இந்த டயலாக்கை பேசுகின்றனர்.

நான் கோட் போட்டா வேற வக்கீல்.. நான் வேஷ்டி கட்டினா நான்தான்டா ஜட்ஜ் என சூர்யா பன்ச் டயலாக் உள்ளது.

இறுதியாக பிடிச்சிருந்தா லைக் பண்ணு, ஷேர் பண்ணு, கமெண்ட் பண்ணு என படத்தின் வில்லன் வினய் கூறுவதுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ பட ட்ரெய்லர் முடிவடைகிறது.

The much-awaited #EtharkumThuninthavanTrailer is here..

Etharkkum Thunindhavan – Official Trailer

Actor Surya set to surprise fans with his brave avatar in Etharkkum Thunindhavan

அப்பாடா.. அவர் போதும்.; அஜித் இல்லாமல் இணையும் ‘வலிமை’ கூட்டணி

அப்பாடா.. அவர் போதும்.; அஜித் இல்லாமல் இணையும் ‘வலிமை’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் வினோத்.

இந்த படத்தையும் போனிகபூரே தயாரிக்க இதிலும் அஜித்தே நடிக்கிறார்.

இந்த படத்திற்கு தற்காலிகமாக AK 61 என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் சூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அஜித் படத்தை முடித்துவிட்டு அதன்பின்னர் விஜய்சேதுபதி மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கவுள்ள ஒரு படத்தை வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Valimai team joins for a one more film

vijaysethuapthi-yogibabu
ரஜினி படம் எப்போது.? விஜய் பையனும் என் ரசிகன்தான்.; யுவன் சீக்ரெட்ஸ்

ரஜினி படம் எப்போது.? விஜய் பையனும் என் ரசிகன்தான்.; யுவன் சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தன் இசை பயணத்தை 18 வயதில் தொடங்கினார்.

சரத்குமார் நடித்து 1997ல் வெளியான ‘அரவிந்தன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

நேற்று பிப்ரவரி 28 நாளில் அவர் தன் இசை பயணத்தில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவிக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தன் மனைவியுடன் வந்திருந்தார். அப்போது யுவன் பேசியதாவது…

“விஜய்யோட மகன், யுவனிசம் என்று எழுதப்பட்ட ஷர்ட்டை அணிந்த போட்டோவை எனக்கு அனுப்பியிருந்தார். நான் ‘பன்டாஸ்டிக் ப்ரோ’ நன்றின்னு பதில் அனுப்பினேன்.

ஒருமுறை விஜய்யை சந்திக்கும்போது நான்தான் இதை உங்களுக்கு அனுப்ப சொன்னேன்னு என விஜய் சொன்னாரு. என் பையன் உங்களோட ரசிகன். இதை உங்களுக்கு தெரியப்படுத்த அனுப்ப சொன்னேன்னாரு.

அந்த போட்டோவை நான் போஸ்ட் பண்ணல. ஏன்னா, அதை ரொம்ப பர்சனல்னு நினைக்கிறேன். நான் சந்தோஷப்பட்ட விஷயம் இது,” என்றார்.

இதன்பின்னர் யுவனிடம் FILMISTREET சார்பாக ராஜேஷ் கேள்வி கேட்டார்.

ரஜினிகாந்த் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என கேட்டார்.

அதற்கு.. நான் எப்போதும் ரெடியாகவே இருக்கிறேன் என யுவன் பதிலளித்தார்.

ம்ம்.. இனி ரஜினி தான் பதில் சொல்லனும்..

Yuvan speech at 25years of yuvanism meet

‘பீஸ்ட்’ பட ஸ்டில்ஸ் லீக்கானதால் ஷாக்கான சன் பிக்சர்ஸ்

‘பீஸ்ட்’ பட ஸ்டில்ஸ் லீக்கானதால் ஷாக்கான சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து…’ பாடல் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த படத்தை ஏப்ரல் 14ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது பட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் 2 புகைப்படங்கள் லீக்காகியுள்ளது.

இதில் மிருகங்களுக்கு இடையே விஜய் நிற்பது போன்று ஒரு புகைப்படமும் தீவிரவாதி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் விஜய்யுடன் இருப்பது போன்ற மற்றொரு புகைப்படமும் வெளியாகியுள்ளன.

‘பீஸ்ட்’ படங்கள் லீக்கானதால் சன் பிக்சர்ஸ் ஷாக்காகியுள்ளது.

Beast Leaked Tension: Not Movie, Just A Pic

உக்ரைன் மக்களுக்காக உருகி நிதி திரட்டும் ரஜினி-விஜய்-தனுஷ் பட நாயகி

உக்ரைன் மக்களுக்காக உருகி நிதி திரட்டும் ரஜினி-விஜய்-தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகி எமி ஜாக்சன். இவர் லண்டனை சேர்ந்த மாடல் அழகி.

ரஜினியுடன் 2.0 படம், விஜய்யுடன் தெறி, தனஷீடன் தங்கமகன் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்காக நிதி திரட்டி வருகிறார் எமி.

தாங்கள் உயிர்வாழ பாதாள அறைகளில் பதுங்கியுள்ள குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்து நிதியுதவி அளிக்க கோரியுள்ளார்.

எமிக்கு எவ்வளவு எளிமையான மனசு பாருங்களேன்.. நல்லது செய்ய நல்ல மனமும் வேண்டும்தானே..

Actress Amy Jackson collects fund for Ukraine people

தனுஷ்-யுவன் பாடல் சாதனையை முறியடித்த விஜய் சிவகார்த்திகேயன் அனிருத்

தனுஷ்-யுவன் பாடல் சாதனையை முறியடித்த விஜய் சிவகார்த்திகேயன் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் சினிமா வசூல் பேசப்பட்டாலும் மறுபக்கம் சோஷியல் மீடியாவில் படைக்கும் சாதனைகளும் தற்போது சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதில் முக்கியமானது யூடியுப் சாதனைகள்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் அனிருத் இசையில் தனுஷ் நடித்த படம் ‘3’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யூடியூப்பில் முதன்முறையாக 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இதற்கு சில வருடங்கள் ஆனது.

இதன்பின்னர் தான் யுவன் இசையமைத்த தனுஷின் ‘மாரி 2’ பட பாடலான ‘ரவுடி பேபி’ பாடல் ஜஸ்ட் 16 நாட்களில் 100 மில்லியன் சாதனையை படைத்தது.

அதன்பின்னர் பல பாடல்கள் 100 மில்லியன் சாதனைகளை கடந்தாலும் இதுபோன்ற குறைவான நாட்களில் அந்த சாதனையை படைக்கவில்லை.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடிய விஜய்யின் பீஸ்ட் பட பாடல் ‘அரபிக்குத்து’ பாடல் வெறும் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு பக்கம் ரவுடி பேபி பாடல் சாதனையை முறியடித்துள்ளது எனலாம்.

ஆனால் ‘ரவுடி பேபி’ பாடல் யுடியுப்பில் வெளியாகி கடந்த மூன்று வருடங்களில் 1300 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை முறியடிக்கும் பாடல் ஏதோ..? காத்திருப்போம்.

Arabic Kuthu beats Rowdy Baby records

More Articles
Follows