கவிஞர் வைரமுத்து வரிகளில் ‘தடை உடை’-க்க வரும் சிம்ஹா

கவிஞர் வைரமுத்து வரிகளில் ‘தடை உடை’-க்க வரும் சிம்ஹா

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’.

இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார்.

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் ‘தடை உடை’ படத்தை முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு மே 5ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்ஹா கதையின் நாயகனாக தயாரித்து நடிப்பதாலும், படத்தின் தலைப்பு ‘தடை உடை’ என எளிய மக்களையும் கவரும் வகையில் அமைந்திருப்பதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு, தொடக்க நிலையிலேயே ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

Actor Simhas next titled Thadai Udai

பிரபுதேவா நடன அமைப்பில் இணைந்து ஆட்டம் போடும் சிரஞ்சீவி- சல்மான்கான்

பிரபுதேவா நடன அமைப்பில் இணைந்து ஆட்டம் போடும் சிரஞ்சீவி- சல்மான்கான்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘காட்பாதர்‘.

இப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார்.

இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

இவர்களுக்கு சிறப்பான நடனத்தை உருவாக்க நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.

விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும், சிரஞ்சீவியும், சல்மான்கானும் திரையில் ஒன்றாக நடனமாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது…

” அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நாட்டிய வடிவமைப்பில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள்.

திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்” என பதிவிட்டு இருக்கிறார்.

அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

‘காட்பாதர்’ படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் பணியாற்றிய கலை இயக்குநரான சுரேஷ் செல்வராஜன் இப்படத்தின் கலை இயக்கப் பணிகளை கவனித்து வருகிறார்.

‘காட்பாதர்’ திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.

திரைக்கதை & இயக்கம் : மோகன் ராஜா
தயாரிப்பாளர்கள் : ஆர்.‌பி. சவுத்ரி & என். வி. பிரசாத்
வழங்குபவர் : கொனிடேலா சுரேகா
தயாரிப்பு நிறுவனங்கள்: கொனிடேலா புரொடக்சன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ்.
இசை : எஸ். எஸ். தமன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
கலை இயக்கம் : சுரேஷ் செல்வராஜன்
தயாரிப்பு மேற்பார்வை : வகதா அப்பாராவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Prabhu Deva to Choreograph For Chiranjeevi and Salman Khan

BREAKING ‘சூர்யா 41’ சூட்டிங் நிறுத்தம்?; இயக்குனர் பாலாவுடன் வாக்குவாதம்.: நடந்தது என்ன.?

BREAKING ‘சூர்யா 41’ சூட்டிங் நிறுத்தம்?; இயக்குனர் பாலாவுடன் வாக்குவாதம்.: நடந்தது என்ன.?

நந்தா & பிதாமகன் படங்களுக்கு பிறகு இயக்குநர் பாலா உடன் சூர்யா மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த படம் சூர்யாவின் 41-வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் ட்ரெண்ங்டில் இருக்கும் கீர்த்தி ஷெட்டியும், மலையாள நடிகை மமிதா பைஜூவும் படத்தில் நடிக்கவுள்ளனர்.

மார்ச் 28 முதல் படப்பூஜையுடன் கன்னியாகுமரியில் ஷூட்டிங் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் சூர்யா 41 சூட்டிங் நிறுத்தம் எனவும் நடிகர் சூர்யா உடன் இயக்குனர் பாலா வாக்குவாதம் எனவும் தகவல்கள் பரவியது.

ஆனால்… மேற்படி செய்தி முற்றிலும் தவறானது. பாலா-சூர்யா கூட்டணியின் முதல் கட்டப் படப்பிடிப்பு, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில், மிகுந்த புரிதலுணர்வுடன் நடைபெற்று திட்டமிட்ட தேதியில் முடிந்தது.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் துவங்குகிறது” என்று படத்தின் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை பிஆர்ஓ தரப்பில் உறுதி செய்துள்ளனர்.

Suriya 41 movie dropped? Here’s every thing you need to know

பாலமுருகன் – அம்மு அபிராமி கூட்டணியில் ‘குக் வித் கோமாளி’ புகழ்

பாலமுருகன் – அம்மு அபிராமி கூட்டணியில் ‘குக் வித் கோமாளி’ புகழ்

பால முருகன் – அம்மு அபிராமி – “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் ‘பாலமுருகனின் குதூகலம்’.

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.

இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை – இணை இயக்குனராக பணியாற்றியவர்.

மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது.

புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார்.

‘குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் – உலகநாதன் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இசை – பிஜார்ன் சுர்ராவ்
படத்தொகுப்பு – மப்பு பிரகாஷ்
கலை – L.கோபி MFA
சண்டைப்பயிற்சி – Danger மணி
நடனம் – அப்சர்
நிர்வாக தயாரிப்பு – அம்பிகாபதி.M

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Cooku With Comali Pugazh join hands with Ammu Abhirami for a new movie ?

‘நடிகவேள்’ எம்ஆர். ராதா வாழ்க்கை தொடரை தயாரிக்கும் ராதிகா

‘நடிகவேள்’ எம்ஆர். ராதா வாழ்க்கை தொடரை தயாரிக்கும் ராதிகா

சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களுக்கே பெரியளவில் பேரும் புகழும் கிடைக்கும். கிடைத்து வருகிறது. ஆனால் ஹீரோக்களை மீறி வில்லன்கள், காமெடியன்கள் என ஒரு சிலரே அந்த புகழை அடைகின்றனர்.

அதில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு பாதையை வகுத்தவர்களில் முக்கியமானர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா.

இவர் வில்லன் வேடங்களை தொடர்ந்து செய்து வந்தாலும் அதில் நகைச்சுவையுடன் சிந்திக்க தகுத்த கருத்துக்களை கூறி பகுத்தறிவை வளர்த்தார். மேலும் பல மேடை நாடகங்களிலும் நடித்து மக்களை கவர்ந்து வைத்திருந்தார்.

இவருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் போட்டி நிலவியது.

நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்

ஒரு கட்டத்தில் நிஜ வாழ்க்கையிலேயே எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டவர் எம்.ஆர்.ராதா.

அதன்பின்னரே எம்.ஜி.ஆர் தன் குரல் வளத்தை இழந்தார். சரியாக பேச முடியாமல் வார்த்தைகளை குளறியபடியே பேசுவார். அப்படியிருந்தும் தமிழக அரசியலில் மக்களை கவர்ந்து மக்களின் முதல்வராக பதவி வகித்தார்.

எம்ஜீஆரை சுட்ட குற்றத்திற்காக எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனையும் கிடைத்தது.

இந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர். ராதா மோதலை மையப்படுத்தி வெப் சீரிஸை ஒன்றைத் தயாரிக்க போகிறாராம் எம்ஆர். ராதாவின் மகள் நடிகை ராதிகா.

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை மைப்படுத்தியே இந்த படம் இருக்கும் என ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார் ராதிகா.

இதில் எம்ஜீஆர் மற்றும் எம்ஆர். ராதா கேரக்டர்களில் நடிப்பவர்கள் யார்? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ராதாரவி, எம்ஆர்ஆர். வாசு, ராதிகா மற்றும் நிரோஷா உள்ளிட்ட 8 பேர் எம்ஆர். ராதாவின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Raadhika plans a web series on father MR Radha’s life

GVP – RKS – KSR – MGR – கீர்த்தி நடித்த படங்கள் மே 5-6ல் ரிலீஸ்

GVP – RKS – KSR – MGR – கீர்த்தி நடித்த படங்கள் மே 5-6ல் ரிலீஸ்

இந்த வாரம் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 6 திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளது.

மே 5ம் தேதி ஈட்டி பட இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘ஐங்கரன்‘ படம் வெளியாக உள்ளது.

இதற்கு அடுத்த நாள் மே 6ம் தேதி கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’, ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ‘விசித்திரன்’, நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ள ‘உழைக்கும் கைகள்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

சாமி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான ‘அக்கா குருவி’ என்ற படம் மே 6ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது. மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது.

இத்துடன் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் எதிர்பார்ப்புக்குரிய ‘வாய்தா, துணிகரம்’ ஆகிய படங்களும் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளன.

இத்துடன் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணி காயிதம்‘ படம் மே 6ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இதற்கு அடுத்த வாரம் மே 13ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் ரிலீசாகவுள்ளது. மேலும் சில படங்களும் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

List of films releasing in May 5th and 6th

More Articles
Follows