நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்

MR Radhaநடிகவேள் எம்ஆர். ராதா நடித்த படங்களை இன்று பார்த்தால் கூட அவர் அன்று சொன்னது இன்று நடக்கிறதே என வியக்காதவர்களே இருக்க முடியாது.

அவரின் வசனங்கள் இன்றைய காலகட்டத்திற்கு அப்படியே பொருந்தி வருகிறது.

நடிப்பு, அரசியல், சுயமரியாதை இயக்கம் என ஒட்டுமொத்த தமிழகத்தை கவர்ந்த அவரது வாழ்க்கை இப்போது ஒரு படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை எம்ஆர். ராதாவின் பேரன் ஐக் என்பவர் இயக்கவுள்ளார்ர்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்த `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கியவர் அவரே.

இப்படம் குறித்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

`நடிகவேளைப் பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன்.

பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ike radha‏ @thenameisike

For those who’ve never seen him but never forgotten him – This ones for U ! Unveiling untold stories of my legendary grandfather ‘Nadigavel’ M.R.Radha in a Film which I hope I do justice to as a grandson & more importantly as a fan #MRRadhaTheFilm #Nadigavel #WorkInProgress

Overall Rating : Not available

Related News

அட்லி தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி,…
...Read More
அண்மையில் நயன்தாராவுடன் ஜீவா நடித்த ‘திருநாள்’…
...Read More
ஜீவா நடிப்பில் திருநாள், சங்கிலி புங்கிலி…
...Read More

Latest Post