தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘புதிய மன்னர்கள்’, ‘பூவே உனக்காக’, ‘உன்னை நினைத்து’, ‘சூரிய வம்சம்’, ‘வானத்தைப்போல’ உள்ளிட்ட பல குடும்பபாங்கான படங்களை இயக்கியவர் விக்ரமன்.
இவரது படங்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆனால் சமீபகாலமாக இவர் படங்களை இயக்குவது இல்லை.
அதற்கு காரணம் இவரது மனைவி படுத்த படுக்கையாக கிடப்பதால் அவரை 5 வருடமாக அருகில் இருந்து கவனித்து வருகிறார் விக்ரமன்.
இதனையடுத்து தமிழக அமைச்சர் மா. சுப்ரமணியன் விக்ரமனை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இது குறித்து விக்ரமன் கூறியதாவது…
“என் மனைவிக்கு தவறான செய்த ஒரு ஆபரேஷனல் அவரால் எழுந்து நடக்க முடிவதில்லை. 5 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இதனை அறிந்து கொண்டு அமைச்சர் மா சுப்ரமணியன் ஒரு மருத்துவர் குழுவை அழைத்து வந்திருந்தார்.
என் மனைவி பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து முழுவதுமாக குணமடைய செய்வோம்” என உறுதி அளித்துள்ளார்கள்.
விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்ரமன்.
கூடுதல் தகவல்கள்…
கே எஸ் ரவிகுமார் தயாரித்து வரும் ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தில் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
Director Vikraman wife operation TN Govt immediate action