சினிமா ஸ்டிரைக் நீடித்தால் மக்களுக்கு பழகிடும்; எச்சரிக்கும் சுரேஷ்சுபா

சினிமா ஸ்டிரைக் நீடித்தால் மக்களுக்கு பழகிடும்; எச்சரிக்கும் சுரேஷ்சுபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Cinema strike continues public lose their interest to watch movies says writer Suresh Subhaஅண்மையில் போக்குவரத்து மற்றும் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டங்களை நடத்திய போது தமிழகமே முடங்கியது எனலாம்.

ஆனால் கடந்த மூன்று வாரங்களாக (மார்ச் 1முதல்) எந்த ஒரு புது தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.

சினிமா ஸ்டிரைக்கால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது மக்களை மகிழ்விக்க பல சாதனங்கள் வந்துவிட்டது.

இந்த ஸ்டிரைக் தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சினிமா மீது ரசிகர்களுக்கு உள்ள ஆர்வம் குறைய ஆரம்பித்துவிடும் என பிரபல எழுத்தாளர் சுரேஷ் சுபா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ, ஆரம்பம், வேலாயுதம், வேலைக்காரன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் பணியாற்றியுள்ள சுபாவிடம் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்ததை பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் சினிமா உலகினரை எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

அதில்…
suresh subha‏ @sureshsubha 1h1 hour ago

தமிழ் திரைத்துறை அவசரமாக கவனிக்கவும்: சின்னதோ பெரியதோ எந்த தமிழ்ப்படம் ரிலீஸானாலும் 3 நாட்களுக்குள் பார்த்துவிட்டு நியாயமான விமர்சனமும் தரும் (தெரிந்த) ஆட்டோ ஓட்டுநர் சொன்னார்: “தியேட்டருக்குப் போகாம இருக்கறது மெதுவா ஒருமாதிரி பழகிடுச்சு. திரும்ப அந்த தவிப்பு வருமா தெரியல சார்”

If Cinema strike continues public lose their interest to watch movies says writer Suresh Subha

எனது திருமண முடிவு பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம்.: விஷால்

எனது திருமண முடிவு பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம்.: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal open talk about his Marriage proposalநடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பிஸியாக வலம் வருபவர் நடிகர் விஷால்.

இவருக்கு 40 வயதை நெருங்கி விட்ட போதிலும் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய பிறகு அங்குதான் தன் திருமணம் நடக்கும் என உறுதியாக அறிவித்துள்ளார்.

இந்த 2018 ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு கூறிய போதிலும் இவருடைய வீட்டில் பெண் பார்க்க தொடங்கிவிட்டார்களாம்.

இது தொடர்பாக விஷால் அவரின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

எனக்கு பெண் பார்த்து பார்த்து வீட்டில் உள்ளவர்கள் சோர்ந்துவிட்டார்கள்.

ஏதாவது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு என்னை அவர்கள் அழைத்தாலே அங்கு எனக்கு பார்த்துள்ள பெண் வந்திருக்கிறாள் என்று என தெரிந்து விடும்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கிற வரையில் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று நானே சொல்லி விட்டேன்.

என்னுடைய இந்த முடிவு பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம். இதனால் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Actor Vishal open talk about his Marriage proposal

தனது அடுத்த படம் பற்றி RRR என பதிவிட்ட ராஜமௌலி

தனது அடுத்த படம் பற்றி RRR என பதிவிட்ட ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director SS Rajamouliபாகுபலி என்ற மாபெரும் வரலாற்று காவியத்தை கொடுத்து உலக சினிமா ரசிகர்களை இந்திய சினிமாவை பார்க்க வைத்தவர் டைரக்டர் ராஜமௌலி.

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாகுபலி விரைவில் சீனாவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ராஜமௌலி தன் அடுத்த படம் பற்றிய தகவலை ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவருடைய ட்விட்டரில்… RRR என குறிப்பிட்டுள்ள அவர் ‘அது படத்தின் டைட்டில் இல்லை. மூன்று பேரின் முதல் எழுத்து மட்டுமே’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளனர்.

rajamouli ss Retweeted

RRR Movie‏ @RRRMovie 1h1 hour ago

The much awaited confirmation you all have been waiting for since November 18th 2017… Its OFFICIAL.. The Massive Multi Starrer is ON! #RRR .. It’s not the TITLE.. Just the TITANS coming together! @ssrajamouli @tarak9999 #RamCharan

விஜய் டிவியின் வில்லா டூ வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் சனம்ஷெட்டி

விஜய் டிவியின் வில்லா டூ வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் சனம்ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanam Shetty going to participate in Vijay TV Villa to Village Reality show‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.

இந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே.

பெங்களுரில் பிறந்து லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியர் முடித்துள்ளார். லண்டனில் ஒரு டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அம்புலி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதை தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ்.சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற நடித்து வரும் நிலையில் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.

Sanam Shetty going to participate in Vijay TV Villa to Village Reality show

கமல்-சிவகார்த்திகேயன் வழியில் பெண்ணாக மாறிய அனிருத்

கமல்-சிவகார்த்திகேயன் வழியில் பெண்ணாக மாறிய அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஎன்னதான் ஆண் நடிகர் அழகாக இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே பெண் வேடம் அச்சு அசலாக பொருந்தும்.

அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடமிட்டு அசத்தியிருந்தனர்.

பெண் வேடத்தில் இருப்பவர் இந்த நடிகர் என்று சொன்னால் மட்டுமே அவர்களை நம்மால் கண்டு பிடிக்க முடிந்தது.

தற்போது இசையமைப்பாளர் அனிருத் பெண் வேடமிட்டுள்ள ஒரு படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ஏதோ ஒரு புதுமுக நடிகையோ? என்றுதான் பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அது அனிருத் என்று சொன்னபிறகுதான்… அட ஆமால்ல என்று நம்மை அசர வைக்கிறது அந்த படம்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த போட்டோ எதற்காக எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தென்னிந்தியாவில் பிரபலமான எடிட்டர் சேகர் காலமானார்

தென்னிந்தியாவில் பிரபலமான எடிட்டர் சேகர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Legendary Editor Sekar passed awayதென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர். இவருக்கு வயது 81. இன்று (மார்ச் 22) திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலை 6 மணியளவில் காலமானார்.

இவரது மனைவியின் பெயர் சுந்தரி சேகர். இவருக்கு தீபலட்சுமி, திலகவதி, நித்யா என்று 3 பெண் குழந்தைகள்.

இவர்கள் மூவருக்குமே திருமணமாகிவிட்டது. இவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக சேகர் பணிபுரிந்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம் (தச்சோலி அம்பு), முதல் 70 எம்.எம் (படையோட்டம்) மற்றும் இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

தான் எந்த ஒரு சாதனை செய்தாலும், அதை தன் வேலை தான் பேச வேண்டும், தான் பேசக்கூடாது என்ற குறிக்கோளுடனே வாழ்ந்திருக்கிறார்.

‘வருஷம் 16’ படத்துக்காக தமிழக அரசு விருது மற்றும் ‘1 முதல் 0 வரை’ மலையாள படத்துக்காக கேரள அரசின் விருது வென்றிருக்கிறார்.

தமிழில் ‘சாது மிரண்டால்’ இவர் பணிபுரிந்த கடைசிப் படம். அதற்குப் பிறகு தனது உதவியாளர்களை வைத்து படங்களுக்கு எடிட் செய்து, அவர்களுடைய பெயரையே தலைப்பில் போடவைத்து அழகு பார்த்தவர் எடிட்டர் சேகர்.

The Legendary Editor Sekar passed away

More Articles
Follows